1995 - batsha:
இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் இல்லை...அன்பால தானா சேர்ந்த கூட்டம்....!2007 - Sivaji:பன்னிங்கதான் கூட்டமா வரும்....!
1996 - during election:
ஜெயலலிதாக்கு ஒட்டு போட்டா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்த முடியாது....!
2004 - during parliment election and film fraternity thanks giving function to jayalalith:
சகோதரி ஜெயலலிதா ஆதரவு பெற்ற கட்சிக்கு ஒட்டு போட்டேன்....!சகோதரி ஜெயலலிதா ஒரு தைரியலக்ஷ்மி....!
2008 - hogenakkal fasting meet:
நம்ம உரிமைய தடுக்குறவங்கள உதைக்க வேண்டாமா?
2008 - kusu release:
அய்யா மன்னிச்சுடுங்க.....என் தப்பை உணர்ந்துட்டேன்....தயவு செய்ஞ்சு என் படத்தை ரிலீஸ் பண்ண அனுமதி கொடுங்க.....! ஐய்யா....அம்மா....!சந்தர்ப்பவாதம். இப்போது இவனுக்கு அரசியல்வாதியாவதற்க்கு முழு தகுதியும் வந்துவிட்டது. நாய்ப் பொழப்பு டா. இந்த பொழப்புக்கு நான்டுகிட்டு சாகலாம். பச்சை சந்தர்ப்பவாதம். நீ தவறு செய்யவில்லை ரஜினி. தவறு செய்தது நாங்கள், தமிழ் மக்கள். கர்நாடகத்தில் இவன் படம் ஓடுவது இருக்கட்டும். தமிழ் நாட்டில் இவன் படம் ஓடாமல் தடுக்க வேண்டும்.
What Rajini spoke was wrong at that time. There is nothing wrong in apalogising. But he should have done this immediatly or within few days. ஆனா இப்ப இவன் செஞ்சது இவன் ஒரு சுய நல பச்சோந்தின்னு நிருபிக்கிறது. இனி எவனாவது குசேலனை பாத்தா அவன் original குசேலனை போல அனுபவிக்கட்டும்.
Dear Tamil people if you have reserved the tickets for this sell this in the block market for one rupee or just put it in the garbage. I would ask for a refund but we live in TamilNadu under ஆப்பத்தலையன்rajni cheted tamil people.i request all tamil people donot beleive that fool.better he should go himalaya.i think he is mentally retarded. already booked ticket for kuselan in bangalore, am a diehard fan of rajini, but today i feel ashamed. NOW I WILL NOT SEE THE FILM, I TEAR THE TICKET. Please TAMIL NADU people dont see the film. Every time very is deviating from his stand. THIS IS GREAT INSULT TO ALL TAMILIANS....
தமிழா சிந்திபீர் நமது தமிழ்நாட்டின் மூலம் அனைத்து சொத்துகளையும் சம்பாதித்துவிட்டு சிறிது கூட தமிழுணர்வு இல்லாத இந்த நடிகரை இன்னும் நீங்கள் நம்பிக்கொண்டு உங்களின் பணத்தை வீனடிகின்றீர்கள் ஆனால் இவரோ (சுமார் 15 பிரிண்ட் மட்டுமே அங்கு குசேலன் படம் திரையிடப்படுகின்றது ) கன்னட வெறியர்களை திருப்தி படுத்த மன்னிப்பு கேட்டுள்ளார் இங்கு இவரின் திரைப்படம் சுமார் 300 பிரிண்ட் போடப்பட்டுள்ளது தயவு செய்து இந்த படத்தை திரை அரங்கில் சென்று பார்காதீர்கள் தமிழா அன்று நீ உன் மொழியின் மீது கொண்ட பற்றை இழந்தாய் இன்று உன் நிலத்தை இழந்தாய் நாளை ? ]
Friday, August 1, 2008
Thursday, July 31, 2008
வலைப்பக்கங்களில் அவ்வப்போது சில சுவாரஸ்யமான கட்டுரைகள் செய்திகள் வெளிவருகின்றன. அப்படி என் கவனத்தை கவர்ந்தது இக்கட்டுரை.
இன்னும் கிராமப்புறங்களில் காணப்படும் விசித்திர நடைமுறைகளில் ஒன்று மொய் பணம் தருவது. அதை பற்றிய சுவாரஸ்யமாக தகவல்களை தருகிறது இந்தக் கட்டுரை.
சின்ன கவுண்டர் படத்தில் இப்படியொரு மொய்விருந்து காட்சியிருக்கிறது. ஆனால் இவ்வளவு விபரமாக அதில் குறிப்பிடப்படவில்லை.
**
மொய்விருந்து
நம்வீட்டுத் திருமணத்தின்போது பணமாகவும் பொருளாகவும் மணமக்களுக்கு அன்பளிப்புகள் தரப்படுகிறதல்லவா?.............. அதை நமக்குக் கொடுத்தவர் பின்னொரு காலத்தில் அன்பளிப்புக்கு ஈடான ரொக்கப்பணத்தை திருப்பித் தருமாறு ஒரு அழைப்பிதழ்மூலமாக கேட்பார். அவர்கொடுக்கும் விருந்தை சாப்பிட்டுவிட்டு அவருக்குநாம் கொடுக்கவேண்டிய ரொக்கத்தைக்கொடுத்துவிட்டு வரவேண்டும்........ இதுதான் மொய்விருந்து!
அப்படிக்கொடுக்கும்போது இடைப்பட்ட காலத்திற்கு ஒரு வட்டித்தொகையையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அந்த விருந்திற்கு நாம் போகமறந்தால் அல்லது மறுத்தால் கடிதம் மூலமாகவோ, ஆள்மூலமாகவோ அந்தப்பணம் நம்மிடமிருந்து வசூல் செய்யப்படும்.
புதுமையாக இருக்கிறதா? சமீபத்தில் மொய்விருந்து நடத்தியவருக்கு கிடைத்த மொய்ப்பணம் ஒருகோடிரூபாய் என்றால் நம்பமுடிகிறதா?.... 1967 ஆம் ஆண்டிற்குப்பிறகுதான் இந்த மொய்விருந்து நடைமுறை அதிகமாக காணப்படுகிறதாம்!
மொய்விருந்து நடைமுறையை ஆவணப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவு செய்யப்படுகிறது. கூடுதல் விபரங்கள் தரப்பட்டால் இந்தப்பக்கம் திருத்தியமைக்கப்படும். எவரையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.
ஒரு தாத்தாவும், பாட்டியும்..........அவர்களுக்குப் பிள்ளையில்லை.
இதுவரை எத்தனையோ பேருக்கு மொய்ப்பணம் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சகாலத்தில் மரணம் வந்துவிடும். மொய்ப்பணம் சும்மா போகலாமா?...
ஒரு பெரிய பந்தல் போட்டார்கள்....... தாத்தாவும் பாட்டியும் மொட்டை அடித்துக்கொண்டார்கள்.....பாட்டிக்கு சிறுவயதிலேயே காதுகுத்திவிட்டதால் பவுன் செலவு மிச்சம். தாத்தாமட்டும் காது குத்திக்கொண்டார். வருகிறவர்களுக்கு ஆட்டுக்கறியுடன் சோறுபோட்டு தங்களுக்கு வரவேண்டிய மொய்ப்பணத்தை திரும்பவும் வசூல் செய்து கொண்டனர். மொய் கொடுக்காதவர்களுடைய வீடுகளுக்கு ஆள் அனுப்பி பணத்தை வாங்கிவரச்செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் இன்றளவும் நடைமுறையில் இருந்துவரும் மொய்விருந்து பற்றிய தகவல்கள் சுவையானவை.
திருச்சிற்றம்பலம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி வரையிலும்..........அப்புறம்.........நாடியம் தொடங்கி மேற்பனைக்காடு ....கீரமங்கலம் வரையிலும் மொய்விருந்து நடைமுறை மக்களிடம் இருந்துவருவதாக தெரிகிறது.
மொய்விருந்து அழைப்பிதழ்கள் படிக்கச்சுவையானவை.
நாடாங்காடு என்னும் ஊரில் நடை பெற்ற எனது நண்பர் ஒருவரின் திருமண அழைப்பிதழ் கண்டேன். அதில் 'முக்கியக்குறிப்பு' என்று போட்டு ' கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் எங்கள் வீட்டில் எந்த விசேஷமும் நடைபெறவில்லை என்பதை கவனத்தில் கொண்டு மொய் எழுதும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று ஒரு குறிப்பும் இருந்தது.
கல்யாணம், காதுகுத்து, பூப்புநீராட்டு போன்ற நிகழ்ச்சிகளின் போது மட்டுமல்ல, சைக்கிள் கடை துவக்கம், பெட்டிக்கடை துவக்கம் என்ற நிகழ்ச்சிகளின்போதும் கூட பத்திரிக்கை அடித்து மொய்வாங்கப்படுகிறது. மொய் வாங்கிக்கொள்வதற்காகவென்றே விருந்து நிகழ்ச்சி நடைபெறுவது இங்கே வழக்கமாக உள்ளது.
உங்கள் வீட்டிற்கு மொய்விருந்து பத்திரிக்கை வந்து சேர்ந்தவுடனேயே நீங்கள் செய்யவேண்டிய முதல் வேலை அந்த விருந்திற்கு நீங்கள் எத்தனை ரூபாய் மொய் செய்யவேண்டும் என்பதை கண்டுபிடிக்கவேண்டியது. அடுத்த வேலை அந்தப்பணத்தைத் திரட்ட அலைந்து திரியவேண்டியதுதான்........
1) மொய்விருந்து நடைபெறும் இடம் கல்யாண மண்டபமாகவோ, இதற்கென அமைக்கப்பட்ட கீற்றுக்கொட்டகையாகவோ இருக்கும். இதற்கென கீற்றுக்கொட்டகை அமைத்து வாடகைக்கு விடுகிறவர்களும் உண்டு.
2) மொய்விருந்து பந்தலின் ஒரு பகுதியில் ஐந்தாறு கவுண்டர்கள்......சினிமா கொட்டகை மாதிரி...... 'சேந்தன்குடி, மேற்பனைக்காடு, கீரமங்கலம் ஊரைச்சேர்ந்தவர்கள் இங்கே மொய்செலுத்தவும்' என்று இருக்கும். எந்த ஊரையும் சேராதவர்கள் 'பல ஊர்' என்ற கவுண்டரில் பணம் செலுத்த வேண்டும்.
3) உங்கள் வீட்டு விசேஷங்களின்போது தேங்காய், பூ, பழம், வெற்றிலை, என்று மரியாதை செய்திருப்பார்கள் இல்லையா?..... அதை 'தட்டு தாம்பாளம் வாங்கிக்கொள்ளப்படும்' என்று அழைப்பிதழில் குறிப்பிடுவார்கள்.
4) மூன்று நான்கு பேர்கள் கூட்டாகச்சேர்ந்து மொய்விருந்து நடத்துவது உண்டு. செலவினத்தை பகிர்ந்துகொள்வார்கள். வரவினத்தை தனித்தனியாக எழுதிக்கொள்வார்கள். இந்த பந்தல் பொதுப்பந்தல் என்று அழைக்கப்படும்.
5) பந்தலில் மணல் பரப்பியதரையில்தான் கறிவிருந்து.உள்ளூர் சலவைத்தொழிலாளி விரித்துப்போடும் சேலையில் வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள வேண்டும்.
6) கையில் கொடுக்கப்படும் வாழை இலையை நாமே வாங்கி பரத்திவைத்துக்கொள்ளவேண்டும்.வடித்தசோறும் ஆட்டிறைச்சிக்குழம்பும் பரிமாறப்படும். இந்தக்குழம்பிற்கென்று தனிச்சுவை உண்டு. மிளகுக்காரம் தூக்கலாக இருப்பதால் வயிற்றுக்கு கேடில்லை.
7) ஒரேநாளில் பல மொய்விருந்துகளுக்கு பணம் போட்டுவிட்டு பலவீடுகளிலும் சாப்பிடுபவர்கள் உண்டு. எங்குமே சாப்பிடாமல் நொந்துபோய் வீட்டில் தண்ணீர் சோறும், பச்சை வெங்காயமும் சாப்பிடுபவர்களும் உண்டு.
8) காலமாற்றத்திற்கு ஏற்ப இப்போதெல்லாம் கோழிக்கறியும் சேர்த்துகொள்ளப்படுகிறது.
9) மிகச்சில விருந்துகள் மட்டும் சைவ விருந்துகள்.அசைவம் சாப்பிடாத மிகச்சிலருக்கு தனியாக சைவ உணவு வழங்கப்படும்.
10) மொய்ப்பணத்தை நோட்டில் வரவுவைக்கும் பணியில் மிகநெருங்கிய உறவினர்கள் மட்டுமே ஈடுபடுவார்கள்.
11) புத்தககூடுதலுக்கும், இருப்பு கூடுதலுக்கும் வித்தியாசம் ஏற்பட்டால் வரவுவைத்தவர் தான் அதை சொந்தப்பணத்தில் இருந்து ஈடு செய்யவேண்டும்.
12) விருந்து முடிந்தபிறகு தாமதமாக மொய்செய்பவர்களுக்கு 'பின்வரவு' என்று தனியாக பக்கம் திறக்கப்பட்டு எழுதப்படும். பின்வரவு செய்தவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பு குறையும். ஏளனப்பேச்சிற்கு உட்படவேண்டியிருக்கும்.
13) 'நீ எனக்கு செய்த மொய் எல்லாம் ஏற்கனவே செய்தாகிவிட்டது. இது புது கணக்குப்பா.......' என்று வரும் பணம் 'புதுநடை' என்ற தலைப்பில் எழுதப்படும்.
14) அண்மைக்காலத்தில் எதிரியாகிப்போனவன் வீட்டில் மொய்விருந்து என்றால்கூட சேரவேண்டிய மொய்சேர்ந்துவிடும்.
15) குடும்பத்தகராறா?........இனிமேல் உறவுவேண்டாமா?......பஞ்சாயத்து செய்து உறவு அறுக்கப்படும்போது மொய்ப்பணமும் தீர்க்கப்படும்.
16) மொய்க்கணக்கிற்குள் சிக்கவிரும்பவில்லையா?......கூப்பிட்ட மரியாதைக்கும் சாப்பிட்ட மரியாதைக்கும் ஏதாவது செய்ய வேண்டுமா?.......வழி இருக்கிறது......"இதை எழுதவேண்டாம்" என்று கொடுத்தால் அதற்கும் ஒரு தலைப்பிட்டு எழுதிக்கொள்வார்கள். பத்து வருடங்களுக்குப்பிறகு நீங்கள் திருத்தணியில் இருந்தால் கூட உங்கள் வீட்டு விசேஷத்தின்போது வந்து நிற்பார்கள்.
17) ஒரு கிலோ ஆட்டிறைச்சி ஏழுபேரிலிருந்து பத்துபேர்வரை என்றகணக்கிற்குஆடுகள் வெட்டப்படும். எனக்குக் கிடைத்த தகவலின்படி ஒரு விருந்தில் 20,000 பேர்சாப்பிட்டார்களாம்.
18) பெரிய அளவில் விளம்பரம் செய்து மொய்விருந்து நடத்துவதற்கு முதலீடு தேவைப்படுமல்லவா?...........கவலைப்பட வேண்டியதில்லை.....உள்ளூரில் இருக்கும் அரசு வங்கிகளின் மேலாளர்களின் சொந்தப்பொறுப்பில் கடன் வழங்குவார்கள் .........விருந்து முடிந்த பிறகு ஒரு பெரிய தொகை அந்த வங்கியில் நிரந்தர முதலீடு செய்ய ஒப்புக்கொள்ள வேண்டும்.
19) ஒரே நாளில் ஒரே ஊரில் பலமொய்விருந்துகள் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் பத்தாயிரக்கணக்கில் பணம் தேவைப்படும்.
இதற்காக அவர்கள் கடன்வாங்கி மொய்செய்வது அதிகரித்து வருகிறது. இந்தக்கடனை அடைப்பதற்காகவே பெரும்பாலோரின் மொய்விருந்து வசூல் பயன்படுகிறது என்கிற தகவல் சிந்திக்கக்கூடியது. இது போன்ற நிகழ்வுகளின் போது ஊர்பஞ்சாயத்துகூடி மொய்விருந்து எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்.
20) மொய்ப்பணத்தை தென்னந்தோப்பு, வாழைத்தோப்பு, நகரங்களில் புதிய வியாபாரம் தொடங்குதல், லேவாதேவி, புதிய பஸ்கள் வாங்குதல் என்றெல்லாம் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள்.
பலகுடும்பங்களில் பொருளாதார ஏற்றத்திற்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் இந்த மொய்விருந்துகள் காரணமாக அமைந்துள்ளன.
நன்றி: http://thanjavure.blogspot.com.

எனது வலைத்தளத்தை பார்வையிடும் பலரும் உலகசினிமாவில் எதைத் தேர்வு செய்து பார்ப்பது என்ற விபரத்தை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு தனிப்பட்ட மின்னஞ்சலில் விபரங்கள் அனுப்பிய போதும் இதே சந்தேகம் தொடர்வதால் தற்போது எனக்கு விருப்பமான நூறு படங்களின் பட்டியல் ஒன்றை வெளியிடுகிறேன். இவை மட்டுமே உலகத்திரைப்படங்கள் அல்ல.
இவை என் விருப்பத்தின் படி முக்கியமான நூறு திரைப்படங்கள்.
இதற்கு நான்கு வருசத்தின் முன்பாக உலகசினிமா புத்தக தயாரிப்பின் போது நூறு சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை தயார் செய்தேன். இன்றுள்ள எனது பட்டியலோடு ஒப்பிடும் போது சில படங்கள் மாறியிருக்கின்றன. சில படங்கள் அப்படியே இருக்கின்றன. இந்த மாற்றங்கள் பெரிதும் என் ரசனை சார்ந்தது.
புதிதாக உலகசினிமாவைக் காண விரும்புகின்றவர்கள் இந்தப் பட்டியலில் உள்ள நூறுபடங்களை பார்த்து முடித்துவிட்டால் அநேகமாக உலகசினிமாவின் தேர்ந்த ரசிகர்களில் ஒருவராகிவிடுவீர்கள். இந்தப் படங்கள் இன்று எளிதில் கிடைக்கின்றன.
சென்னையில் பார்சன் காம்ப்ளெக்ஸ் ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ளது. இங்கேயுள்ள டிவிடி கடைகளில் கிடைக்கின்றன. அல்லது பிராட்வேயில் உள்ள பர்மா பஜார் சென்றால் அங்கும் கிடைக்க கூடும். அமேசான் இணைய தளத்திலும் இவை நேரடியாக வாங்குவதற்கு சாத்தியம் உள்ளது. அது போலவே பெரிய புத்தக கடைகள், இசைவிற்பனை நிலையங்களிலும் இந்தப் படங்களில் பல எளிதில் கிடைக்கின்றன.
இந்த பட்டியல் தரவரிசைப்பட்டியல் அல்ல. காலவரிசையான பட்டியலும் அல்ல. இவை நான் சிபாரிசு செய்யும் திரைப்படங்கள். இந்தப் படங்கள் தொடர்பான மேலதிகமான தகவல்களை பெற எனது உலகசினிமா மற்றும் அயல்சினிமா புத்தகங்கள் உதவக் கூடும்.
உலகசினிமா திருத்தப்பட்ட செம்மையான புதிய பதிப்பாக உயிர்மை பதிப்பகத்தில் அடுத்த மாதம் வெளியாகிறது. அயல்சினிமா உயிர்மை பதிப்பக வெளியீடாக தற்போது விற்பனையில் உள்ளது
**
The Best 100 Movies
La Strada - Federico Fellini
The Virgin Spring - Ingmar Bergman
Rashomon - Akira Kurosawa
The 400 Blows - Fran�ois Truffaut
The Bicycle Thief - Vittorio De Sica
Woman in the Dunes - Hiroshi Teshigahara
The Battle of Algiers - Gillo Pontecorvo
Ivan the Terrible - Sergei Eisenstein
Blow-Up - Michelangelo Antonioni
LAWRENCE OF ARABIA � David lean
Belle de Jour - Luis Bunuel
Breathless - Jean-Luc Godard
Knife in the Water � Roman polanski
Ugetsu Monogatari - Kenji Mizoguchi
Pickpocket - Robert Besson
Roman Holiday - William Wyler
Beauty and the Beast - Jean Cocteau
Tokyo Story - Yasujiro Ozu
The Gospel According to St. Matthew - Pier Paolo Pasolini
M - Fritz Lang
Ben-Hur - William Wyler
The Cranes Are Flying - Mikhail Kalatozov
Casablanca - Michael Curtiz
The Sound of Music - Robert Wise
It's a Wonderful Life - Frank Capra
Modern Times - Charles Chaplin
The Passion of Joan of Arc - Carl Theodor Dreyer
The Psycho - Alfred Hitchcock
High Noon - Fred Zinnemann
Citizen Kane - Orson Welles
Once Upon a Time in West � Sergio Leone
Barry Lyndon - Stanley Kubrick
Reds - Warren Beatty
Stagecoach - John Ford
Judgment at Nuremberg - Stanley Kramer
Butch Cassidy and the Sundance Kid - George Roy Hill
Panther Panchali - Satyajit Ray
Meghe Dhaka Tara - Ritwik Ghatak
Ivan`s Childhood - Andrei Tarkovsky
Aguirre, the Wrath of God - Werner Herzog
Three colours - Krzysztof Kieslowski
Ballad of a Soldier - Grigori Chukhrai
Mephisto- Istv�n Szab�
Landscape in the Mist - Theo Angelopoulos
The Godfather - Francis Ford Coppola
Taxi Driver - Martin Scorsese
All That Jazz- Bob Fosse
The Ballad of Narayama - Shohei Imamura
The Shawshank Redemption - Frank Darabont
Amadeus - Milos Forman
The Last Emperor - Bernardo Bertolucci
Annie Hall � Woody Allen
Rabbit-Proof Fence - Phillip Noyce
The Piano - Jane Campion
THE KING OF MASKS - Wu Tianming
Run Lola Run- Tom Tykwer
The Colour Purple - Steven Spielberg
The Mission - Roland Joff�
In the Mood for Love - Wong Kar-Wai
Children of Heaven � Majid Majidi
Spring, Summer, Autumn, Winter... and Spring � kim ki duk
Forrest Gump -Robert Zemeckis
Cinema Paradiso - Giuseppe Tornatore
Amores perros - Alejandro Gonz�lez I��rritu
BONNIE AND CLYDE - Arthur Penn
No Man's Land - Danis Tanovic
The Killing Fields � Roland Joff�
West Side Story - Jerome Robbins
Farewell My Concubine - Chen Kaige
Raise the Red Lantern - Zhang Yimou
Cyrano de Bergerac - Jean-Paul Rappeneau
Fantasia � Disney
Spirited Away - Hayao Miyazaki
The Postman (Il Postino) - Michael Radford.
Scarface - Brian De Palma
Titanic � James Cameron
The Scent of Green Papaya - Trần Anh H�ng
Prisoner of the Mountains - Sergei Bodrov
Kolya - Jan Svěr�k
The Thief - Pavel Chukhraj
Pulp Fiction- Quentin Tarantino
Life Is Beautiful - Roberto Benigni
The Return - Andrei Zvyagintsev
Central Station - Walter Salles
Tsotsi - Gavin Hood
Downfall - Oliver Hirschbiegel
The Chorus - Christophe Barratier
Am�lie - Jean-Pierre Jeunet
Good Bye, Lenin- Wolfgang Becker
Moolaad�- Ousmane Sembene
All About My Mother - Pedro Almod�var
Dancer in the Dark - Lars von Trier
Gabbeh - Mohsen Makhmalbaf
The Son's Room - Nanni Moretti
City of God - Fernando Meirelles
'Chi-hwa-seon �( Painted Fire)- Im Kwon-taek
Hotel Rwanda- Terry George
Three Seasons - Tony Bui
March of the Penguins- Luc Jacquet
The Counterfeiters - Stefan Ruzowitzky
****

சாலை திறந்து கிடக்கிறது.
சாலையின் நடுவே எங்காவது பழுதடைந்து போன பைக் , கார் அல்லது பேருந்தின் காரணமாக கைவிரல்களை உயர்த்திக்காட்டி லிப்ட் கேட்பவர்களை கண்டிருக்கிறீர்களா?
நம்மில் வெகுசிலரே அவர்களுக்கு உதவி செய்திருப்போம். மற்றவர்கள் நமது வாகனத்தில் எதற்கு தெரியாத மனிதர் என்று திரும்பிக் கூட பார்ப்பதில்லை. . அரிதாக சிலர் தங்களது வாகனங்களில் வழிப்பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்வார்கள்.
அப்படி சாலையில் மாட்டிக் கொண்டு உதவி வாகனத்தை பிடித்து ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் வந்த பல அனுபவங்கள் எனக்கு நேர்ந்திருக்கிறது.பைக், டிராக்டர், லாரி, ராணுவத்திற்கு சொந்தமான ஜீப் என்று அறியாத மனிதர்களின் தயவில் கடந்து வந்திருக்கிறேன்.
பெரும்பான்மையினருக்கு பயணம் என்பது எவ்விதமான சிறு தடங்கலும் இல்லாமல் எல்லாமே முன்கூட்டி முடிவு செய்யப்பட்டு இருக்கை வசதி துவங்கி வழியில் சாப்பிடும் வாழைப்பழம் வரை யாவும் முறையாக இருக்க வேண்டும் . அந்த ஒழுங்கில் எங்கே சிறு தவறு நேர்ந்தாலும் பதற்றம் அடைந்து போய்விடுகிறார்கள். இப்போது செல்போன்கள் வந்தபிறகு பயணத்தில் ஏறிய இடம் துவங்கி வந்திறங்கும் இடம்வரை பேசிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஒரு முறை ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள திருச்சுழி என்ற ஊரின் அருகே இரவில் பேருந்து பயணத்தில் பழுது ஏற்பட்டது. இருட்டிற்குள்ளாகவே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்து கிடந்தோம்
அந்தப் பகுதியில் வேறு பேருந்து கிடைக்காது என்பதால் நடக்கும் வரை நடந்து செல்லலாம். எங்காவது வேறு வாகனம் கிடைத்தால் போய்விடலாம் இல்லாவிட்டால் பழுது நீக்கபட்டு வரும் பேருந்திலே ஏறிச்செல்லலாம் என்று அறிவித்த போது உடன் வருவதற்கு நாலு பேரே முன்வந்தார்கள். நாலு பேரும் இரவில் நீண்ட சாலையில் நடக்கத் துவங்கினோம்.
அநேகமாக விடிகாலை வரை நடந்திருப்போம். வேறு வாகனங்களே வரவில்லை. எதற்காக இப்படி நடக்கிறோம் என்று எவருக்கும் தோன்றவில்லை. ஆனால் லேசான குளிரும் புளியமரங்கள் அடர்ந்த சாலையில் கசியும் மணமும் ஆகாசத்தின் மென்னொளியும், இராப்பூச்சிகளின் சப்தமும் நடையைச் சோர்வடையாமல் செய்தது. அன்றிரவு தொலைதூர கிராமங்களின் மீது எப்போதும் மறையாத வெளிச்சம் ஒன்று பரவியிருப்பதை கண்டேன். அந்த காட்சி இன்றும் என் கண்ணில் படிந்திருக்கிறது.
ஆனால் நான் அறிந்தவரை எவரும் விரும்பி சாலையில் எதிர்படும் எவராவது தன்னை ஏற்றிக் கொண்டு செல்வார்கள் என்று மட்டுமே நம்பி பயணம் மேற்கொள்வதில்லை.
கையில் காசிருந்து முறையாக பயணம் செய்யும் போதே ஆயிரம் தடுமாற்றங்கள் அசௌகரியங்கள் ஏற்படுகின்றன என்று புலம்பும் மக்களின் நடுவில் தன் கையிலிருந்து பயணத்திற்காக ஐந்து பைசா கூட செலவு செய்யாமல் ஒரு மனிதன் உலகம் முழுவதையும் கடந்து வந்திருக்கிறான் என்ற செய்தி நிச்சயம் நிஜம் என்றே நம்ப முடியாதது தான்
ஆனால் இது உண்மை. பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த லுடோவிக் ஹப்ளர் (Ludovic Hubler ) என்ற இருபத்தைந்து வயது இளைஞன் சாலையில் எதிர்படும் வாகனங்களிடம் உதவி கேட்டு மட்டுமே பயணம் செய்வது என்று முடிவு செய்து கிட்டதட்ட 1700000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து சென்றிருக்கிறான். அதுவும் 59 நாடுகள் 1825 நாட்கள் கார்கள், டிரக், ஒட்டகம், கழுதை சவாரி, படகு என்று தன்னை கடந்து செல்லும் எந்த வாகனமாக இருந்தாலும் நிறுத்தி உதவி கேட்டு உலகைச் சுற்றியிருக்கிறான்.
காசிருந்தால் மட்டுமே பயணம் செல்லமுடியும் என்பதைத் தாண்டி அடுத்த மனிதர்களின் மீது உள்ள நம்பிக்கையாலும் உலகைச் சுற்றிவர முடியும் என்பதற்கு சான்று லுடோவிக்.
இவனது உலகப்பயணத்தை சாத்தியமாக்கியவர்கள் 1300 வாகன ஒட்டிகள். அவர்கள் சாலையில் நின்றபடியே விரலை உயர்த்தி வழிப்பயண உதவி கேட்ட லுடோவிக்கிற்கு உதவி செய்திருக்கிறார்கள். சில வாகனங்களில் இருநூறு முதல் ஐநூறு கிலோ மீட்டர வரை பயணம் செய்திருக்கிறான்.
பனி மூடிய சாலையில் குளிருடன் நடுங்கியபடியே யாராவது ஒருவர் தனக்கு லிப்ட் கொடுக்கமாட்டார்களா என்று 26 மணி நேரத்திற்கும் அதிகமாக ஒரு முறை காத்திருந்திருக்கிறான். அதைத் தவிர அவனது பயணத்தில் உதவ முன்வந்த பெரும்பான்மையினர் எளிமையான , அடித்தட்டை சேர்ந்த காரோட்டிகளே. அவர்கள் தங்களால் முடிந்த அளவான தூரத்திற்கு லுடோவிக்கை வாகனத்தில் கொண்டு இறக்கிவிட்டிருக்கிறார்கள்
2003ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கிய போது தன் நண்பர்களோடு ஆல்ப்ஸ் மலையில் இருந்து தனது உலகப்பயணத்திற்கான முதலடியை லுடோவிக் துவங்கினான். அப்போது வயது 25.
பயணத்திற்காக கையிலிருந்து செலவு செய்யாமலே உலகைச் சுற்றி வர வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கனவு கண்டு கொண்டிருந்த லுடோவிற்கிற்கு வழிச்செலவிற்கு தேவையான பணத்தை சேமிக்க சில வருடங்களாகி போனது. சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் அடிப்படையாக நாள் ஒன்றுக்கு பத்து டாலர் செலவு செய்வது என்ற முடிவுடன் தனது பயணத்தை துவக்கினான்.
ஆல்ப்ஸ் மலையில் பயணம் துவங்கும் போதே எந்த காரணத்தை முன்னிட்டு தனது சொந்த செலவில் எந்த வாகனத்திலும் செய்ய கூடாது. அது போலவே தான் மேற்கொள்ளும் இலவசப்பயணங்கள் உத்தேசித்துள்ள நகரின் வழியில் உள்ள பெட்ரோல் பங்க் வரை மட்டும் தான். அதன் பிறகு இன்னொரு வாகனத்தை நாடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அதற்காக தன் பயணத்தை துவக்கியிருக்கிறான்.
2003 ம் ஆண்டின் புத்தாண்டு இரவில் சாலையில் நின்றபடியே லிப்ட் கேட்டபோது முதலாக அவரை தன்னுடைய வாகனத்தில் ஏற்றிக் கொண்டவர் இது சாத்தியமில்லை என்று சிரித்தபடியே அவரை பனியில் இறக்கிவிட்டு சென்றிருக்கிறார்.
நண்பர்கள் குடும்பம் யாவும் துறந்து பெயரற்ற ஒரு சாலையில் நின்ற போது தான் இனி வீடு திரும்ப முடியுமா என்ற சந்தேகம் லுடோவிற்கு உண்டானது. ஆனாலும் உலகை நோக்கி சாலை திறந்து கிடக்கிறது. செல்வதற்கு தேவையான மனத்துணிச்சல் மட்டுமே நமக்கு வேண்டும் என்ற உறுதியோடு அடுத்த வாகனத்தின் வருகைக்காக காத்திருக்கிறான்.
தனது இந்த பயணத்தின் போது வாழ்க்கையை நேரடியாக அருகில் இருந்து கற்று கொண்டதாக சொல்லும் லுடோவிக் பெரும்பான்மை மனிதர்களுக்கு அடுத்தவர் மீதான நம்பிக்கை குறைந்து போய்விட்டது. சாலையில் கடந்து செல்லும் வாகனங்களில் எண்பது சதவீதம் வழியில் நிற்கும் மனிதனை கண்டு கொள்வதில்லை. தான் சாலையில் உதவிகேட்டு நிற்பதை அறிந்தும் ஒரு லட்சத்துக்கு அதிகமான வாகனங்கள் அலட்சியமாக கடந்து போயிருக்கின்றன.
அதற்கு முக்கிய காரணம் பயம். அது ஒருவகையில் உண்மையும் கூட. வழிப்பறி கொலை கொள்ளை யாவும் சாலையில் தான் அதிகமாக நடக்கிறது. ஆனால் அதையும் தாண்டி அறியாத மனிதர்களுக்காக உதவி செய்ய வருகின்றவர்கள் தொழிலாளர்கள், ஏழ்மையான மனிதர்கள். அவர்கள் பல நேரங்களில் தங்குமிடம் மற்றும் உணவு தந்து லுடோவிக்கை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்
தனது பயணத்தை வெறும் சாகசபயணமாக மட்டுமே கொள்ளாமல் தான் கடந்து செல்லும் வழியில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் உலக சமாதானம் மற்றும் அன்பு குறித்து தான் கண்ட தெரிந்த செய்திகளை பகிர்ந்து கொண்டிருக்கிறான் லுட்விக்
அவன் நினைத்தது போல பயணம் எளிமையானதாக இல்லை. சில இடங்களில் கால் கடுக்க நாள் முழுவதும் நின்று கொண்டேயிருந்தால் ஏதாவது ஒரு வாகனம் நிறுத்தப்படும். ஆனால் அவர்கள் எளிதில் வாகனத்தில் ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். அத்தோடு அவர்களின் மொழி தெரியாத காரணத்தால் உரையாடவும் முடியாது.
இதற்காகவே தன்னை பற்றிய குறிப்புகளை ஒரு அட்டையில் பலமொழிகளில் எழதி அதை நீட்டி காட்டுவது அவனது வழக்கம். அப்படியும் நம்ப மறுப்பார்கள். ஒரு வாகன ஒட்டி அவனை வண்டியில் ஏற்றி கொண்டு வாகனமே கிடைக்காத சாலை ஒன்றில் வேண்டும் என்றே கொண்டு போய்விட்டுவிட்டு சென்று விட்டான். அங்கிருந்து நெடுஞ்சாலையை நோக்கி நடந்து வந்து ஒரு வாகனத்தை பிடிக்க இருபத்திரெண்டு மணி நேரமாகியிருந்திருக்கிறது. வழியில் சாப்பாடு தண்ணீர் கூட கிடையாது.
தனது ஐந்தாண்டு பயணத்தில் வாகனத்தில் பயணம் செய்த நேரத்தை விடவும் அதற்காக காத்திருந்த நேரமே அதிகம் என்று குறிப்பிடும் ஹெப்ளர் ஆங்காங்கே 450 இடங்களில் தங்கியிருக்கிறான். சில இடங்களில் போலீசாரிடம், ராணுவத்திடம் பிடிபட்டிருக்கிறார். இரவுக்காவல் என்று சிறைச்சாலைகளில் தங்க வைக்கபட்டிருக்கிறான். சில இடங்களில் வேறு வழியில்லாமல் பெண்களை போல பர்தா அணிந்து கொண்டு உதவி கேட்டு பயணம் செய்திருக்கிறான்.
இந்தப் பயணத்தின் ஒருபகுதியாக இந்தியாவிற்கு வருகை தந்து டெல்லி பனாரஸ் கல்கத்தா மும்பை பெங்களுர் என்று சுற்றியலைந்து திரும்பியிருக்கிறான். இந்தியாவை பற்றிய தனது பதிவுகளில் காந்தியின் மீதான ஈர்ப்பு. அதிகமான மக்கள் ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்வது. தன்னார்வ நிறுவனங்களின் செயல்பாடுகள் மிக ஆரோக்கியமாக உள்ளன என்று பாராட்டுவதுடன் இங்குள்ள மாறுபட்ட கலாச்சாரங்களின் மீதான வியப்பும் இந்திய இசை மற்றும் திரைப்படங்கள் உணவு மீது உள்ள ஆர்வத்தையும் வெளிப்படுத்துகிறார்.
இந்தியாவில் தனக்கு பிடிக்காத பத்து விஷயங்கள் என்று இவர் பட்டியல் இட்டுள்ளது மிக முக்கியமான ஒன்றாகும்.
1) இந்தியாவெங்கும் நிரம்பியுள்ள குப்பைகள். : நகரங்கள் வீதிகள் வீடுகள் என்று எல்லா பொது இடங்களிலும் குப்பைகள் நிரம்பி வழிகின்றன. சாலைகளில் கால் வைக்கமுடியாத நிலை உள்ளது. குப்பை குறித்த விழிப்புணர்வு முற்றிலும் இந்தியாவில் இல்லை
2) சுயநலம்.: எண்பது சதவீத இந்தியர்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதில் துவங்கி அன்றாட சின்னஞ்சிறு காரியங்கள் வரை அடுத்த மனிதர்களை பற்றி எவ்விதமான அக்கறையும் இன்றியே செயல்படுகிறார்கள். சுயநலம் என்பது மிதமிஞ்சியும், அடுத்தவர்களை சகிக்க முடியாத அளவிலும் காணப்படுகிறது
3) நன்றி தெரிவிக்க மறுப்பது - யாரும் யாருக்கும் எந்த நிலையிலும் நன்றி சொல்லிக் கொள்வதில்லை. ப்ளீஷ் தேங்க்ஸ் என்ற வார்த்தைகளை பயன்படுத்துகிறவர்கள் சொற்பமே.
4) புரியாத விஷயங்கள் : எதற்காக மக்கள் இவ்வளவு சப்தமாக செல்போனில் பேசுகிறார்கள். திரை அரங்கங்களில் வந்த பிறகும் ஏன் மக்கள் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். பொது இடங்களில் மூத்திரம் பெய்வது, எச்சில் துப்புவது.காரை நிறுத்துவது என்ற பழக்கம் ஏன் யாரையும் பாதிப்பதில்லை. காரணமில்லாமல் மற்றவர்கள் மீது எரிந்து விழுவது, சின்னஞ்சிறு விஷயங்களில் கூட ஏமாற்றுவது என்பது ஏன் என்றே புரியவில்லை
5) எதுவும் எளிதில் கிடைப்பதில்லை.: இந்தியாவில் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை. எல்லா இடங்களிலும் தள்ளுமுள்ளு, போன் பேச சென்றால் அது வேலை செய்யாது. இன்டர்நெட் மையங்களுக்கு சென்றால் அது முறையாக இருக்காது. இருந்தால் அவர்கள் கேட்கும் பணம் மிக அதிகமாகயிருக்கும். இது போலவே உணவகம் தங்குமிடம் பயணம் என்று எதிலும் எவ்விதமான ஒழுங்கும் முறைமையும் இருப்பதில்லை
6) சாதி : எல்லா மாநிலங்களிலும் சாதி முக்கியமான பிரச்சனை. யாரை சந்திக்க சென்றாலும் சாதியை பற்றி பேசுகிறார்கள். சாதியின் பெயரால் ஏற்படும் அதிகாரம் சச்சரவுகள் நீக்கமற்று உள்ளது
7) ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் : நண்பனே, சகோதரனே என்று அன்பு ஒழுக அழைத்து உபசாரம் செய்த போது அடிமனதில் இவன் வெளிநாட்டுக்காரன் இவனை எப்படியாவது ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணம் பெரும்பான்மையினருக்கு உள்ளது. வெளிநாட்டுபயணிகளை பணம் காய்க்கும் மரமாகவே கருதுகிறார்கள்.
8) லஞ்சம் ஊழல் : பள்ளிபடிப்பில் துவங்கி கடவு சீட்டுவாங்குவது வரை எல்லாவற்றிலும் நீக்கமற லஞ்சம் உள்ளது. லஞ்சம் கொடுப்பது வாங்குவது பற்றி எவ்விதமான குற்றவுணர்வும் எவருக்கும் கிடையாது
9) பொது வெளிகள் : கோவில்களை தவிர வேறு பொது வெளிகள் கிடையாது. மக்கள் ஒருவரோடு மற்றவர் சந்தித்து பேசி கொண்டாடி மகிழ கலச்சார வெளிகள் கிடையாது. நடன அரங்கம், மதுவிடுதிகள் போன்றவை தடைசெய்யபட்ட பகுதி போன்றவை. மக்கள் சேர்ந்து ஒன்றாக பகிர்ந்து கொண்டாடுவது என்ற வாரஇறுதி கொண்டாட்டங்கள் இந்தியாவில் மிக அரிது
10) இன்றும் மக்கள் : ஏழ்மை வறுமை அரசியல் பாகுபாடு என்று பல்வேறு பிரச்சனைகள் பல லட்சம் மக்கள் இன்றும் கல்வி கற்ற வசதியற்று உள்ளார்கள். கோவில்கள் மிக முக்கிய வணிக மையமாகிவிட்டிருக்கிறது.
தனது பயணத்தில் திபெத்திற்கு சென்று தலாய் லாமாவை சந்தித்தது மிகமுக்கிய நிகழ்வு என்று சொல்லும் ஹப்ளர் இதற்காக ஒரு ஆண்டு காத்திருக்க வேண்டியிருந்திருக்கிறது. தலாய் லாமாவை சந்திப்பதற்கான நேரம் கேட்டு ஒரு ஆண்டு தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பி காத்திருந்து பயன் இல்லாமல் திபெத்திற்குள் பயணம் செய்திருக்கிறார். திபெத்தில் முறையான வாகனங்களின் வழியே பயணம் செல்லாமல் வழிப்பயணியாக யாராவது உள்ளே நுழைந்தால் அவர்கள் உடனடியாக பிடிக்கபட்டு சிறையில் அடைக்கபட்டுவிடுவார்கள் என்பது சட்டம். ஆகவே திபெத்திற்கு எப்படி போவது என்று தடுமாறி போயிருக்கிறான்.
தனது மனவுறுதியின்படியே ஒவ்வொரு இடமாக உதவி கேட்டு திபெத் எல்லை வரை சென்ற போதும் அவர் முறையான வாகனத்தில் வரவில்லை என்று தங்குமிடம் மறுக்கபட்டிருக்கிறது. தெரிந்த இடத்தில் தங்கி நேரடியாக தலாய்லாமாவின் காரியதரிசியை சந்தித்து விளக்கியபிறகு அவனுக்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. மூன்று நிமிச நேரம் தலாய் லாமை சந்தித்து பேசியிருக்கிறான்.
இந்தச் சந்திப்பிற்காக திபெத் எல்லையில் காத்திருந்த போது திபெத்திலிருந்து புனித யாத்திரை செல்லும் மக்களை சந்தித்திருக்கிறான். அவர்கள் இமயமலையை நோக்கி வரையான 2000 மைல் தூரத்தை நடந்தே கடக்க கூடியவர்கள். அப்படி நடக்கும் போது ஒவ்வொரு அடி எடுத்து வைத்தபிறகும் தலையால் பூமியை தொட்டு வணங்கி தன்னை ஆசிர்வதிக்கும்படியாக வேண்டிக் கொண்டே நடக்கிறார்கள். அதனால் ஒரு மனிதன் இந்த பயணத்திற்குள் பல்லாயிரம் தடவை பூமியை தனது தலையால் தொட்டு வணங்கியிருப்பான். அது தான் புனித பயணத்தின் உன்னதம் என்று விவரிக்கிறான்
பாகிஸ்தானிற்குள் நுழைவதற்காக அனுமதி கிடைக்காத போது அவனை பிரெஞ்சு தூதரகம் திரும்பி செல்லும்படியாக வற்புறுத்தியிருக்கிறது. ஆனால் தொடர்ந்து காத்திருந்து அனுமதி வாங்கி உள்ளே சென்றிருக்கிறான். ஆப்கான், பாகிஸ்தான் பற்றிய பொது அபிப்ராயங்கள் யாவும் தவறானவை. அங்கும் மக்கள் உலகமெங்கும் உள்ளவர்களை போலவே அன்புடன் நடத்துகிறார்கள். வறுமையும் ஏழ்மையும் நிரம்பியிருக்கின்றன. ஊடகங்கள் உருவாக்கும் பொய்களை தாண்டிய நிஜத்தை நேரடியாக கண்டேன் என்கிறான் லுட்விக். அதே நேரம் வன்முறை, தீவிரவாதம் அடிப்படைவாதம் போன்றவற்றால் எளிய மக்கள் எந்த அளவு உயிரிழப்பும் பயமும் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்துகிறான்.
உலகெங்கும் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் லட்சக்கணக்கில் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள் அது தான் தன் பயணத்தில் கண்ட முக்கிய உண்மை என்று சொல்லும் ஹப்ளர் எந்த ஒரு சிறு பொருளையும் வாங்கும் போது இது நமக்கு எளிதாக கிடைக்கிறது ஆனால் இது கிடைக்காதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற எண்ணம் மனதில் இப்போது உருவாகிறது. இந்த எண்ணத்திற்கு காரணம் உலகப்பயணம் தான் என்கிறார்
ஐந்தாண்டு காலம் உலகம் சுற்றி முடிந்து திரும்பி ஹப்ளரிடம் தனது பயணத்தை பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது அவன் சொன்ன ஒரே வார்த்தை
Never Again .
சகமனிதனை நம்பி துவங்கிய பயணம் வெற்றிகரமாகவே நடந்தேறியிருக்கிறது. உண்மையில் உலகம் முழுவதும் சாலைகள் திறந்துகிடக்கின்றன. அதை நோக்கி செல்லும் மனத்துணிவும் அடுத்த மனிதர்கள் மீது மெய்யான அக்கறையும் இருந்தால் உலகம் சுற்றுவது எளிதானதே.
அதற்கு மொழியோ, பொருளாதார காரணங்களோ தடையில்லை. சரித்திர கால சாகசபயணிகளாக யுவான்சுவாங், பாஹியான் பற்றி வாசிக்கையில் சிலிர்ப்பு கொள்ளும் நாம் அருகாமையில் உள்ள அறியாத இடங்களை நோக்கி பயணம்செய்யவே தயங்குகிறோம்.
எல்லா பயணங்களும் வலிகளும் வேதனைகளும் அவமானங்களும் நிரம்பியதே. அந்த வலியை தாண்டி பயணம் நமக்குள் உருவாக்கும் அக சந்தோஷம், உலகில் பலரும் கண்டிராத இயற்கை காட்சிகள், மனிதமுகங்கள், கொண்டாட்டங்கள் என்று நீளும் நினைவுகள் தான் பயணம் தரும் சந்தோஷம். அதற்காகவே பயணம் செய்யலாம்.
***

Saturday, July 26, 2008
அமெரிக்க அணு ஒப்பந்தம் வேண்டாம் - அணு விஞ்ஞானிகள் கூட்டறிக்கை
A.கோபால கிருஷ்னன், A.N.பிரசாத், P.K.ஐயங்கார்.
நாங்கள் மூத்த அணு விஞ்ஞானிகள் பலர் அடங்கிய குழுவைச் சேர்ந்தவர்கள். 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டத்திற்கு உட்பட்டு அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் செய்துகொள்வது குறித்து எங்கள் ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் முன்னரே நாங்கள் தெரிவுபடுத்தியுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விளக்கி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.
எங்களது கருத்துகளை எடுத்துக் கூறுவதற்கு பிரதமர் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கினார். அதன்படி அவரைச் சந்தித்து எங்கள் கருத்துகளை எடுத்துக் கூறி விவாதித்துள்ளோம்.இந்த அணு ஒப்பந்தத்தின் சாதக பாதகங்களை ஆய்வு செய்ய தான் அமைத்த UPA- இடதுசாரி குழுவிடம் கூட விவரங்களைத் தராமல் IAEAயிடம் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த ஒப்பந்தத்திற்கு அரசு அவசரம் அவசரமாக விரைந்தோடுகிறது. இது பரந்துபட்ட விஞ்ஞானிகள் சமூகத்தில் மிகவும் கவலையையும் அமைதியின்மையையும் உருவாக்கி உள்ளது. எனவே இந்த ஒப்பந்தம் குறித்து நாடு தழுவியதொரு ஆழமான விவாதத்தை நடத்தாமல் பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள IAEAயிடம் அரசு ஓடக் கூடாது.
குறைந்த பட்சம் UPA- இடது சாரி குழு, இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கு கொள்ளாத நிபுணர்கள் ஆகியோர் மத்தியில் ஒரு முழுமையான விவாதம் நடத்தாமல் ஒப்பந்தத்திற்கு செல்லக் கூடாது என அழுத்தம் திருத்தமாக கூற விரும்புகின்றோம்.ஒப்பந்தம் வெளிநாட்டில் தயாரான அணு உலைகளை இறக்குமதி செய்ய வழிவகுக்கும்; நாட்டின் ஆற்றல் தேவையை ஈடுகட்ட இது உத்தரவாதம் அளிக்கும் என்ற வாதத்தின் அடிப்படையில் அரசு மிகவும் ஆசை ஆசையாக இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கின்றது. ஆனால் இப்படி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் வழக்கமான அனல் மின் நிலையங்கள், புனல் மின் நிலையங்கள் மூலம் - எந்தவித வெளிநாட்டு இறக்குமதியுமில்லாமல் - உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் காட்டிலும் மிகவும் விலை அதிகமாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் தெள்ளத் தெளிவான புள்ளிவிவரங்கள் மூலம் மனதில் அறையும் விதத்தில் எடுத்துக் கூறியுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் அமுலாக்கத்திற்கு வந்தபிறகு, இந்தியாவின் வர்த்தகரீதியான அணு ஆற்றல் பரிவர்த்தனைகள் அனைத்தும் அது அமெரிக்காவோடு இருந்தாலும் அல்லது வேறு எந்த நாட்டோடு இருந்தாலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஹைடு சட்டம் இதற்கு வழி வகுக்கின்றது. அணு ஆற்றல் பொருள் விநியோகம் செய்யும் நாடுகளின் குழு (Nuclear Suppliers Group) அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் தான் உள்ளது. இதனைப் பயன்படுத்தி அமெரிக்கா ஹைடு சட்டத்தை ஏவமுடியும். இல்லை அணு ஆற்றல் கூட்டுறவை 123 இருதரப்பு ஒப்பந்தம் மட்டுமே தீர்மானிக்கும் என்று சிலர் சொல்வது ஏற்க முடியாது.
ஏனெனில் இந்த ஒப்பந்தத்தின் அடிப்படை அமெரிக்க உள்நாட்டு சட்டங்கள் மீதுதான் நிற்கின்றது! அதில் ஹைடு சட்டமும் அடங்கும்.ஹைடு சட்டம் இரு தரப்பு அணு ஆற்றல் வர்த்தகத்திற்கு சம்பந்தமில்லாத பல சரத்துகளைக் கொண்டுள்ளது. ஒப்பந்தம் தொடர வேண்டுமென்றால் இந்தியா எத்தகைய வெளியுறவுக் கொள்ளகையைக் கைப்பிடிக்க வேண்டும் என்பது உட்பட பல நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்கான உரிமை, அணு ஆற்றல் குறித்த நமது சுயேட்சையான உள்நாட்டு ஆய்வு முயற்சிகள் எல்லாவற்றையும் அடகு வைத்து இந்த ஒப்பந்தத்தை ஏற்பதால் என்ன பயன்? வழக்கமான மின்சார நிலையங்களைப் போல மூன்று மடங்கு செலவில் வரப்போகும் மின்நிலையங்கள் மூலம் நமது மின்னாற்றல் பாதுகாப்பு பலப்படும் என்பது உண்மையா?
இந்த விலைகளைக் கொடுத்து ஒப்பந்தம் காண்பது அவசியமா என்பவையே நாட்டின் முன் வந்துள்ள விவகாரம்.இந்த அணு ஆற்றல் கூட்டு வேறு பல கவலை தரும் விளைவுகளை உண்டாக்கக் கூடியது. இந்தியாவின் கைவசமுள்ள அணு ஆயுத பாதுகாப்பு (Nuclear deterrent) என்பதையும் பலகீனப்படுத்தக் கூடிய சரத்துகள் உள்ளன. அணு ஆற்றலில் உள்நாட்டு தொழில் நுட்பத்தினையும் ஆய்வு முயற்சிகளையும் வளர்த்தெடுத்து முன்னேறுவதற்கு தடைகள் உள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை அரசு மிகவும் ரகசியமாக வைத்துள்ளது; தனக்கு ஆதரவாக ஊடகங்களை அரசு வளைத்துள்ளது; அதன் மூலம் இந்த ஒப்பந்தம் குறித்து கட்டியெழுப்பி உள்ள ஆதரவு; சில அமைப்புகள் மற்றும் சந்தர்ப்பவாதிகளான தனிநபர்களின் மிகவும் குறுகியதும் சுயநலமிக்கதுமான நிலைபாடுகள்; துரதிஷ்டவசமாக பெருவாரியான பொது மக்களிடம் உள்ள அறியாமை ஆகியவை அனைத்தும் இணைந்து நாட்டை மிகவும் அபாயகரமான பாதையில் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
இது இந்த தலைமுறை இந்தியர்களின் நலன்களை மட்டுமல்லாது இனி வரவிருக்கும் பல தலைமுறை இந்தியர்களின் நலன்களையும் மோசமாக பாதிக்கக் கூடியதாகும். அமெரிக்கா வழங்கியுள்ள நிகழ்ச்சி நிரலின்படி அவசர அவசரமாக IAEA தலைமை வாரியத்திற்கு ஓடி அதன் சம்மதத்தைப் பெற்று, பின் அமெரிக்க காங்கிரசில் இப்போதைய புஷ் அரசு அமெரிக்காவிலும் மன்மோகன் சிங் அரசு இந்தியாவிலும் பதவியிலிருக்கும்போதே ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுவிட வேண்டுமென துடிப்பதை நிறுத்த வேண்டும். இந்த மிகவும் முக்கியமான பிரச்சினை குறித்து ஆழமான பரிசீலனையும் பரந்துபட்ட விவாதமும் நடத்தவேண்டும். இதனை மிகவும் வெளிப்படையாக ஒளிவு மறைவு இன்றியும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதை இன்றைய சிக்கலான நிலை கோருகின்றது.IAEA பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த சந்தேகங்களின் மையமான கருத்து,
இந்த பாதுகாப்பு அம்சங்கள் எந்த அளவு இந்தியாவிற்கு பிரத்யேகமானவை என்பதாகும். ஹைடு சட்டம் மற்றும் 123 உடன்பாடு ஆகியவற்றில் ஒரு விசயம் தெளிவாக உள்ளது. IAEAயின் கட்டுப்பாட்டிற்குள் வரும் அணுமின் நிலையங்களுக்குத் தடங்களில்லாது எரிபொருள் வழங்கப்படுவதை இவை உத்தரவாதம் செய்யவில்லை. IAEA உடன் செய்துகொள்ளப்படும் உடன்படிக்கை இதனை சரிசெய்யும் என அரசு சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. IAEA எந்தக் காலத்திலும் எரிபொருள் வழங்குவதை நிர்வகிக்கும் அமைப்பாக இருந்ததில்லை. இந்தியாவின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள் இந்த உத்தரவாதம் குறித்து பேசினார்களா என்பது மிகுந்த சந்தேகத்துக்குரியதாகும்.IAEA உடன்படிக்கையின் சரத்துகள் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வழங்கப்படுவதில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் இந்தியா தகுந்த சீர் நடவடிக்கை (Corrective Measures) எடுத்து தடங்களில்லாத மின்னுற்பத்தி செய்ய அநுமதிக்கும் என்பது 123 ஒப்பந்ததின் ஓர் அம்சம் என அரசு ஓயாமல் திட்டவட்டமாகக் கூறி வந்தது. இதனை கணக்கிலெடுத்துக் கொண்டு இதன் அடிப்படையில்தான் IAEAவின் கட்டுபாட்டுக்குள் இந்திய அணுமின்நிலையங்களை நிரந்தரமாக வைக்க அரசு ஒத்துக் கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஒப்பந்தத்திற்குள் தலை குப்புற விழுவதற்கு முன்பு அந்த “தகுந்த சீர் நடவடிக்கைகள்" எவை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ள இந்த தேசம் விரும்புகின்றது.ஒப்பந்தப்படி இந்தியா IAEA கட்டுப்பாட்டிலிருந்து வெளியேற விரும்பினால் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கனநீர் அணு உலைகளை மட்டுமே IAEAயின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க முடியும். அதுவும் கூட அந்த அணு உலையின் எரிபொருள் மொத்தத்தையும் அதாவது பயன்படுத்தப்பட்ட மற்றும் பயன்படுத்தாத கதிர் வீச்சுப் பொருட்கள், உதிரிப் பொருட்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும். இது தடங்களற்ற மின் உற்பத்திக்கான பாதுகாப்பு அல்ல. இதனை ‘தகுந்த சீர் நடவடிக்கை’ எனக் கூறுவது சற்றும் சரியல்ல.மேலும் இந்த சலுகை கூட இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்கு இல்லை.
அணு ஆற்றலுக்கு நாம் செய்யும் முதலீட்டின் பெரும்பகுதியை உண்டுவிட்டு IAEA கட்டுப்பாட்டில் இருக்கும் இவை எரிபொருள் மறுக்கப்பட்டு நிறுத்தப்பட்ட பின்பும் நிரந்தரமாக IAEA கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அமெரிக்காவுடனான ஒப்பந்தம் காலாவதியானால் அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாக (IAEA மூலமாகவோ ஒரு மூண்றாம் நாட்டின் மூலமோ) எரிபொருள் வழங்குவதை ஹைடு சட்டம் தடுக்கின்றது. எனவே UPA - இடதுசாரி குழுவிடமும் தேச மக்களிடமும் சரியான விளக்கம் அளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது.123 உடன்படிக்கையின்படி கூட்டு முறிந்தால் இந்தியா இறக்குமதி செய்த அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தும் நிரந்தரமாக IAEAவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது குறித்து இந்தியாவிற்கான பிரத்யேகமான IAEA உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு IAEAயும் இந்தியாவும் விவாதித்து ஒத்த கருத்தை அடைந்து கூடுதல் முறைபாடுகள் (Additional Protocol) ஒரு உடன்படிக்கையினைச் செய்துகொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த கூடுதல் உடன்படிக்கையினை இப்போதே IAEAயுடன் விவாதித்து முடிவு செய்துவிடுவது மிகவும் அவசியமாகும். பாதுகாப்பு குறித்து IAEAயுடன் ஒப்பந்தம் செய்வதற்கு முன்பே இதனை முடிப்பது அவசியமாகும். IAEA பாதுகாப்பு நடவடிக்கையின் மிகவும் மோசமான தலையீடுகள் எல்லாம் இது போன்ற கூடுதல் முறைபாடுகள் குறித்த உடன்படிக்கையின் சரத்துகள் மூலமே நடந்துள்ளன. நமது ராணுவரீதியான அணு ஆற்றல் முயற்சிகளிலும் சந்தேகம் என்பதின் பேரில் எந்தவித அடிப்படையும் இல்லாது மூக்கை நுழைத்து அதிகாரம் செய்ய இந்த கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை அநுமதிக்கும்.IAEA எந்த அளவு தலையிட முடியும் அதன் எல்லைகள் யாவை என்பதை இந்தியா மிகவும் தெளிவாக வரையறுக்க வேண்டும்.
மேலும் சாதாரணமாக அணு ஆயுதமற்ற நாடுகளுக்கு அமுலாகும் வழக்கமான விதிமுறைகள் இந்தியாவிற்கு அமுலாகாது என்பதையும் இப்போதே தெளிவுபடுத்திவிட வேண்டும். கூடுதல் முறைபாடுகளுக்கான உடன்படிக்கை குறித்து பேரம் பேசுவதற்கு நமக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம் அனைத்தும் IAEAயுடனான பாதுகாப்பு உடன்படிக்கை கையெழுத்தானால் போய்விடும். கூடுதல் முறைபாடுகள் குறித்த வரம்புகள் குறித்து ஏதும் விவாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை. எத்தகைய வரம்புகள் இந்தியாவிற்கு ஏற்பு எவை ஏற்பல்ல என்பது IAEAக்கு தெளிவாக்கப்படவில்லை. அவை பாதுகாப்பு குறித்து IAEAவுடன் செய்து கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் சரத்துகளிலும் இல்லை. இது குறித்து அரசு என்ன கருத்து கொண்டுள்ளது என்பதை IAEAயுடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கு முன்பே அரசு தெளிவுபடுத்தவேண்டும்.
மின்நிலைய அணு உலைகளில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள் (யுரேனியம்) பயன்பாட்டிற்குப் பிறகு மறுசுழற்சிக்கு (Reprocessing) உட்படுத்தப்பட்டு புளூட்டோனியமாக ஆக்கப்படுவது நமக்கு மிகவும் அவசியம். ஏனெனில் இந்த புளூட்டோனியத்தைக் கொண்டே அதிவேக ஈனுலை (fast Breeder Reactor) மற்றும் உயர் கனநீர் அணுஉலை (AHWR) ஆகியவை இயக்கப்பட வேண்டும். எனவே எரிபொருள் மறுசுழற்சி என்பது நீண்ட கால ஆற்றல் பாதுகாப்பு என்பதற்கு இந்தியா கொண்டுள்ள திட்டத்திற்கு ஆதாரமான தேவையாகும்.நிபந்தனையற்ற மறுசுழற்சி உரிமையை விட்டுக் கொடுப்பதென்ற பேச்சுக்கே இடமில்லை என அரசு தொடர்ந்து உறுதியளித்து வந்தது. இந்த உரிமை குறித்து எந்த பேரமும் பேச அரசு தயாரில்லை (non negotiable) என்று கூட கூறப்பட்டது. ஆனால் இறுதியில் 123 உடன்படிக்கையில் கிடைத்ததென்னவோ மறுசுழற்சி உரிமை பற்றிய வெற்று வார்த்தைகள்தான். மறுசுழற்சிக்கான உண்மையான உரிமை எதிர்காலத்தில் இதற்கென பிரத்யேகமான மிக நவீனமான மறுசுழற்சி நிலையம் ஒன்று கட்டப்பட்ட பின்தான் ஏனைய பிற நிலையங்களோடு சேர்த்து அநுமதி வழங்கப்படும். அதற்கும் பிரத்யேகமான பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கட்டுப்பாடுகளும் கூடுதல் முறைபாடுகளும் (Protocols) நடைமுறைப்படுத்தப்படும்.
ஆக இத்தனை தடைகளைத் தாண்டிய பிறகே மறுசுழற்சி என்பதை ஆரம்பிக்க முடியும். இவை குறித்து இப்போதே தெளிவாகப் பேசி முடிவெடுத்து உடன்படிக்கை காண வேண்டும். IAEAயின் கட்டுப்பாடுகள் பாதுகாப்பு நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளுமுன் இதனை முடிவு செய்யவில்லை என்றால் பிறகு ஒருநாளும் இது நடக்காது. ஆனால் அரசு சமீபத்தில் IAEA உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இதனைச் செய்யவில்லை. இந்த குறைபாட்டை உடனடியாக நீக்கவேண்டும். இல்லையெனில் இந்தக் குறைபாடு எதிர்காலத்தில் இந்தியாவை மிகவும் மோசமாக சீரழிக்கும்.இது போன்று மிகவும் முக்கியமான கட்டுப்பாடுகள் குறித்த வினாக்கள் உள்ளன. இவற்றுக்கான விளக்கங்களை அரசு இதற்காக அமைக்கப்பட்ட UPA- இடதுசாரி குழுவிற்கு கூட அளிக்கவில்லை.
இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள பல பிரச்சினைகளுக்கும் அரசிடம் பதில் இல்லை. அனைத்து ஒப்பந்தங்களையும் ஏனைய பேச்சுவார்த்தை விவரங்களையும் UPA-இடதுசாரி குழுவின் முன்னரும், இது குறித்த ஆழமான விவரம் தெரிந்த சுயேட்சையான நிபுணர் குழுவிடமும் அளிக்க வேண்டும். இந்த நிபுணர் குழு அரசு சார்பில் IAEA உடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாதவர்களாக இருக்க வேண்டும்.
கையொப்பமிட்டவர்கள்:
Dr.பி.கே. அய்யங்கார், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி ஆணையம். (Former Chairman - Atomic Energy Commission)
Dr. ஏ. கோபாலகிருஷ்ணன், முன்னாள் பெருந்தலைவர், அணு சக்தி நெறியாள்கை வாரியம். (Former Chairman - Atomic Energy Regulatory Board)
Dr. ஏ.என்.பிரசாத், முன்னாள் இயக்குனர், பாபா அணுவியல் ஆய்வு மையம். (Former Director - Bhabha Atomic Research Centre)
(pkrajan_61@yahoo.co.in)

அன்புள்ள சாரு,
நான் உங்கள் இணைய தளத்தின் வாசகர்களில் ஒருவன். ‘ இந்தியா விற்பனைக்கு ’ கட்டுரையைப் படித்தேன். அதில் நீங்கள் கூறியுள்ள படி விவசாயிகளின் நிலை, கல்வி போன்ற விஷயங்களில் உங்களோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு. ஆனால் அணுசக்தி பற்றி நான் வேறு விதமாக நினைக்கிறேன். நிலக்கரியிலிருந்து இன்னும் 200 ஆண்டுகளுக்கு நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். ஆனால் அணுசக்தியிலிருந்து 700 ஆண்டுகளுக்கு மின்சாரம் கிடைக்கும். மேலும் இது சுற்றுப்புறச் சூழலையும் பாதிக்காது. இதன் ஒரே பக்க விளைவு என்னவென்றால், இதன் மூலம் உருவாகும் ரேடியோஆக்டிவ் கழிவுகளை 1000 ஆண்டுகளுக்கு கவனமுடன் கண்காணிக்க வேண்டும். அதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. அது மட்டுமல்லாமல் அக்கழிவை glass matrix – ஆக மாற்றி சுற்றுச் சூழலைப் பாதிக்காத ஒரு இடத்தில் வைத்து விடவும் முடியும். இந்த அணுசக்தியை நாம் விட்டுவிட முடியாது; கூடாது.
யுரேனியத்தைப் பொறுத்தவரை அது நம் நாட்டில் அதிகம் கிடைக்கவில்லை. ஆந்திரப் பிரதேசம் நாகார்ஜுன சாகரிலும், மேகாலயாவிலும்தான் யுரேனியம் தாது கிடைக்கிறது. அங்குள்ள சில உள்ளூர்ப் பிரச்சினைகளால் சுரங்கம் தோண்டி அதையும் எடுக்க முடியாத நிலை. அப்படி எடுத்தாலும் அது நமக்குப் போதாது.
தோரியத்தைப் பொறுத்தவரை, நீங்கள் சொல்வது சரி. இந்தியாவில் தோரியம் அதிகமாகவே கிடைக்கிறது. ஆனால் தோரியம் பிளவு படக் கூடிய பொருள் அல்ல. அதை முதலில் அணு உலையில் வைத்து யுரேனியம்-233 ஆக மாற்றியாக வேண்டும். அதன் பிறகே அதை நாம் அணுசக்தியாகப் பயன்படுத்த முடியும். இதில் மூன்று கட்டங்கள் உள்ளன.
முதல் கட்டம், யுரேனியத்திலிருந்து ப்ளூட்டோனியத்தை உருவாக்க வேண்டும். இரண்டாவது கட்டத்தில், இந்த ப்ளூட்டோனியத்தை தோரியத்திலிருந்து யுரேனியம்-233ஐ உருவாக்கப் பயன்படுத்த வேண்டும். மூன்றாவது கட்டத்தில், மின்சார உற்பத்திக்காக இந்த யுரேனியம்-233ஐ எரிக்க வேண்டும். ஆக, தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், யுரேனியத்தைத்தான் நாம் ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இதைத் தவிர தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க வேறு எந்த வழியும் இல்லை.
எனவே, அணுசக்தி ஒப்பந்தம் நல்லதுதான். ஆனால் இதை வைத்துக் கொண்டு இந்தியா அமெரிக்காவுக்கு அடிமையாகி விடக் கூடாது. அது ஒன்றுதான் இந்தியா கவனமாக இருக்க வேண்டிய விஷயம்.
நான் கல்பாக்கத்தில் விஞ்ஞானியாக இருக்கிறேன். உங்களுடைய ராஸ லீலாவைத் தவிர மற்ற நூல்கள் அனைத்தையும் படித்திருக்கிறேன். உங்கள் எழுத்தை வாசிக்கும் போது சத்தியத்தின் வெகு அருகாமையில் இருப்பது போல் உணர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
சோமசுந்தரம்,
கல்பாக்கம்.

Thursday, July 24, 2008
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் - இயக்கம் நடத்தப்போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து சென்னையிலும் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இயங்கும் பாஸ்டியர் நிறுவனம் நோய்த்தடுப்பு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. பாரம்பரியமிக்க இந்த நிறுவனத்தை மூடும்படி மத்திய சுகாதார அமைச்சரகம் உத்தரவிட்டது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட நோய்த்தடுப்பு மருந்துகளைத் தனியாரிடம் வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான பாஸ்டியர் நிறுவனத்தை மூடியது ஏன் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி எழுப்புகிறது.அதே போல், எத்தனையோ ஆண்டுகளாக கிண்டி பி.சி.ஜி. நிறுவனம் நோய்த் தடுப்பு மருந்தினை உற்பத்தி செய்து வந்தது. அந்த நிறுவனத்தையும் மூடும்படி மத்திய சுகாதாரத்துறை உத்தரவிட்டிருக்கிறது. அங்கே உற்பத்தி செய்யப்பட்ட மருந்தும் இனி மாறுவேடத்தில் தனியார் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும்.
அந்தத் தனியார் நிறுவனங்களிலிருந்து இனி மத்திய சுகாதார அமைச்சரகம் கொள்முதல் செய்து கொள்ளும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. அதனை அனுமதிக்கக் கூடாது என்று போர்க்குரல் எழுப்பி வருகிறது.இமாசலப் பிரதேசத்தில் மத்திய சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வந்தது. அதனையும் மூடும்படி அமைச்சர் அன்புமணி உத்தரவிட்டார். இப்போது மூடப்பட்டும் விட்டது. இதனை அந்த மாநில பி.ஜே.பி. அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. அந்த ஆராய்ச்சி நிலையத்தை தாங்களே நடத்தத் தயாராக இருப்பதாகவும் அதனை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
இதே போல் குன்னூர் பாஸ்டியர், கிண்டி பி.சி.ஜி. மருந்து உற்பத்தி நிலையங்கள் மூடப்பட்டதைத் தமிழக அரசு எதிர்க்க வேண்டாமா? அவற்றை மாநில அரசே ஏற்று நடத்த முடியாதா?குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் குழந்தைகளின் நோய்த் தடுப்பிற்காகப் பல்வேறு மருந்துகளை உற்பத்தி செய்து வந்தது. கக்குவான், தொண்டை அடைப்பான், ரணஜன்னி போன்ற நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகள் மட்டுமல்ல; நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான `ரேபிஸ்' மருந்தும் இங்குதான் தயாரிக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தின் சிறந்த செயல்பாடுகளுக்காக 2003-ம் ஆண்டு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதி வரை லாபத்தில் இயங்கி வந்த இந்த நிறுவனம் ஏன் மூடப்பட்டது என்பது எவருக்கும் தெரியாத ரகசியம்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரையைப் பின்பற்ற இந்த நிறுவனம் தவறியதால் மூடப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சரகம் அறிவித்தது. அந்தப் பரிந்துரையை யார் செயல்படுத்தவில்லை? அப்படிச் செயல்படுத்தத் தவறியிருந்தால் அதற்குப் பொறுப்பு மத்திய சுகாதார அமைச்சரகம்தானே? ஆகவே, தண்டிக்கப்பட வேண்டியது குன்னூர் நிறுவனமா? மத்திய சுகாதாரத்துறையா?
குன்னூர் பாஸ்டியர் நிறுவனம் மூடப்பட்டதை ஊழியர்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீலகிரி மாவட்ட மக்களே எதிர்க்கிறார்கள். பொய்யான காரணங்களைக் கூறி பொதுத்துறை நிறுவனங்கள் மூடப்படுவதை இப்போது நாடே உணர்ந்து விட்டது.எனவே, மீண்டும் பாஸ்டியர் நிறுவனத்தை ஆராய மத்திய மருந்து தரக்கட்டுப்பாடு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழு தரும் அறிக்கை மீது அடுத்த நடவடிக்கை எடுப்பார்களாம். அந்த நிறுவனத்தை மூடுவதென்று முடிவு செய்து விட்டனர். அங்கு உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளை தனியார் நிறுவனங்களில் வாங்குவது என்றும் முடிவு செய்து விட்டனர். அதன் பின்னர் அமைக்கப்படும் குழு என்ன அறிக்கை தரும் என்பது பாமரருக்கும் புரியும்.
ஆங்கிலேயர் காலத்திலேயே மருந்து உற்பத்திக்குத் தகுதியான இடம் என்று குன்னூர் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதற்கான கட்டடங்களும் கட்டப்பட்டன. அதனை விரிவுபடுத்துவதற்கு இன்னும் தேவையான இடங்கள் இருக்கின்றன. அங்கேயே நவீன கருவிகளை அமைக்க முடியும்.உலக சுகாதார மையத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய முடியும் என்று 2002_ம் ஆண்டு இந்த நிறுவனத்தை ஆய்வு செய்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் மீதுதான் 30 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கித் தந்தது.
சென்ற ஆண்டு இந்த நிறுவனத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. லூயிஸ்பாஸ்டியர் சிலை நிறுவப்பட்டது. நூற்றாண்டு விழா கலையரங்கமும் கட்டப்பட்டது. இங்குள்ள தரக்கட்டுப்பாட்டு நிலையம் சர்வதேசத் தரத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் புதுப்பிக்கப்பட்டது.மஞ்சள் காமாலைக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆய்வுக் கூடமும் 16 லட்சம் ரூபாய் செலவில் சென்ற ஆண்டுதான் திறக்கப்பட்ட
இத்தனைக்கும் பின்னர் குன்னூர் நிறுவனம் எதற்கும் தகுதியில்லை என்று மூடப்பட்டதன் பின்னணி மர்மமாகவே இருக்கிறது. ஆறு மாதங்களுக்கு முன்னர் சுகாதாரத் துறையின் இணைச் செயலாளர் குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தைப் பார்வையிட்டார். எந்தக் காரணம் கொண்டும் இந்த நிறுவனம் மூடப்படமாட்டாது என்று ஊழியர்களுக்கு உறுதி அளித்தார். அடுத்த சில நாட்களிலேயே அந்த அதிகாரி வேறு இடத்திற்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.
குன்னூர் பாஸ்டியர் நிறுவனத்தையும் கிண்டி பி.சி.ஜி. நிறுவனத்தையும் இமாசலப் பிரதேச ஆய்வுக் கூடத்தையும் மூடிவிட்டு செங்கல்பட்டு அருகே 50 ஏக்கரில் புதிய நிறுவனத்தை மத்திய சுகாதாரத் துறை துவக்கப் போகிறதாம். உறை மோரைக் கொடுத்து விட்டு விலை மோருக்கு அலைந்த கதைதான். புதிய நிறுவனம் உற்பத்தியைத் தொடங்கும் வரை தனியார் நிறுவனங்களில் மருந்துகளைக் கொள்முதல் செய்யப்போகிறார்கள்.கொடிய நோய்களிலிருந்து லட்சோப லட்சம் குழந்தைகளைக் காக்க மருந்து தயாரித்துத் தந்த பல நூறு ஊழியர்கள் வீதிக்கு விரட்டப்படுகிறார்கள்.

Subscribe to:
Posts (Atom)