Friday, August 29, 2008

நிறைவேற்றப்படுமா சேது சமுத்திர திட்டம்?

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கர்மவீரர் காமராஜர் மட்டுமல்லாது பண்டைய தமிழர்கள் என அனைவரின் ஒட்டுமொத்த விருப்பமே 150 அண்டுகால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டம் துவக்கப்பட்டபோது அகமகிழ்ந்த தமிழ் சமுதாயம் இன்றைய அரசியலார்களின் அரசியலாகிவிட்டதை எண்ணி மனமுடைந்த நிலையில் உள்ளனர்.

மதத்தின் பெயரால் சீர்மிகு திட்டத்தை சிலர் அரசியலாக்கிவரும் நிலையில் மத்திய அரசின் நிலைப்பாடோ நாளுக்குநாள் கேள்விக்குறியான நிலையில் உள்ளது. திட்டம் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்குறி தான் தற்போது பதிலாய் உள்ளது போலும் தமிழர்களுக்கு...சிங்கள தீவினிற்கோற் பாலம் அமைப்போம் சேதுவை மேடுருட்டி வீதி சமைப்போம் என்று பாடினான் புரட்சி கவிஞன் பாரதி. ஆனால் சிலரோ பாலத்தின் பெயரால் கொல்லன் பட்டறை தெருவில் ஊசி விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

7517 கிலோமீட்டர் கடற்பரப்பை கொண்ட நம் பகுதியில் 12 பெரிய துறைமுகங்களும், 185 சிறிய துறைமுகங்களும் உள்ளன. ஆனால் இந்தியாவின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் மற்ற பகுதிகளுக்கு கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையை கடந்து தான் செல்லவேண்டும். இலங்கைக்கு கப்பம் கட்ட வேண்டும், நேரத்தை வீண் விரையம் செய்யவேண்டும். அப்போதுதான் நம் நாட்டு எல்லைக்குள் இருந்து நம் நாட்டின் மற்ற பகுதிக்கு செல்லமுடியும். அப்படி ஒரு துர்பாக்கியமான நிலை இந்தியனுக்கு. இதையெல்லாம் யோசித்த நமது முன்னோர்களும், ஆங்கிலேயர்களும் இதுவரையில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை சம்ர்பித்துள்ளனர். பல்வேறு நிலைகளில் ராமர் பாலத்தை பற்றி அறிந்திராத பலருக்கும் இப்போது ஞானம் பிறந்துள்ளது அரசியல் நடத்துவதற்கு.

1) 1860 ல் கமாண்டர் டெய்லர்
2) 1861 ல் டவுன் சென்ட்ஸ்
3) 1862 ல் பாராளுமன்ற குழு
4) 1863 ல் சென்னை கவர்னர் சர் வில்லியம் டென்னிசன்
5) 1871 ல் ஸ்டாட்டர்ஸ்
6) 1872 ல் பொறியாளர் ராபர்ட்சன்
7) 1884 ல் சர் ஜான் கோட்ஸ்8) 1903 ல் தென்னக ரயில்வே பொறியார்களின் ஆய்வு
9) 1992 ல் சர் ராபர்ட் பிரிஸ்ட்டோ ( தெளிவானதும், விரிவானதுமான அறிக்கை)

என 9 ஆய்வுகள் சேது சமுத்திர திட்டம் குறித்து கொடுக்கப்பட்ட நிலையில் 1967ம் ஆண்டு நாகேந்திரசிங் தலைமையிலான குழு 30 அடிக்கு 37.46 கோடியை ஒதுக்கிட பரிந்துரைத்துள்ளது. 1981ல் லட்சுமி நாராயண் தலைமையிலான குழு 282 கோடி ஒதுக்கிட பரிந்துரைத்துள்ளது. இப்படி பல்வேறு ஆய்வுகளும், அதற்குண்டான தொகையை தீர்மானிக்கும் முடிவுகளும் பல நேரங்களில் அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் ஒருவழியாக தற்போது பணிகள் நடைபெற்றுவரும் பாதைக்கு கடந்த பா.ஜ.க அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் திட்டம் குறித்த இறுதி அறிக்கைக்காக மத்திய அரசின் 2000-2001 பட்ஜெட்டில் ரூ 4.8 கோடி ஒதுக்கவும்பட்டுள்ளது.ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர் டி.ஆர்.பாலு சம்பந்தப்பட்ட துறைக்கான அமைச்சரானதும் சேது சமுத்திர திட்டத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டினார். அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டார்.

ஒருவழியாக திட்டத்திற்கான இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு கடந்த 2005 ம் ஆண்டு ஜூலை 2ம் தேதி சேது சமுத்திர திட்டத்திற்கான துவக்கவிழா நடைபெற்றது. பணிகளும் துவக்கிவைக்கப்பட்டது. புணிகளை முடிக்க மத்திய அரசோ ரூ 495 கோடியை ஒதுக்கி அனுமதியும் வழங்கியது.தமிழர்களின் நெஞ்சம் குளிர்ந்தது. இனி தென் தமிழகம் வளர்ச்சியடைந்துவிடும். வேலைவாய்ப்பு பெருகிவிடும் என்று எல்லோரும் இருந்தனர். பாக் நீரினைப் பகுதி மற்றும் ஆதம் பாலம் பகுதிகளில் கிட்டதட்ட 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் சதிகாரர்கள் திட்டத்தை சீர்குலைக்கும் நோக்கில் நீதிமன்றத்தினை நாடினர்.

திட்டம் மட்டும் நிறைவேற்றப்பட்டால் ஒரு நாளைக்கு குறைந்தது 9 கப்பல்களும், ஓர் ஆண்டிற்கு 3055 கப்பல்களும் நம்மைக் கடந்து செல்லும், இதனால் நம் நாட்டு கப்பல்களும், பிற நாட்டு கப்பல்களும் வீணாக இலங்கையைக் கடந்து செல்ல வேண்டியதில்லை. 254 முதல் 424 கடல் மைல் தொலைவு மிச்சமாவதுடன் பயண நேரத்தில் 21 முதல் 36 மணி நேரம் வரையில் குறையும். இதனால் எரிபொருளும் மிச்சம். கப்பல் நிறுவனங்கள் சுலபமாக ஏற்றுமதி இறக்குமதியை மேற்கொள்ளலாம்.

கடலோர மாவட்டங்கள் முன்னேறும், உலகத் தரம் வாய்ந்த எற்றுமதியாளர்களும், ஏற்றுமதி நிறுவனங்களும் உருவாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்னும் பல சிறிய அளவிலான துறைமுகங்கள் உருவாகும். குறிப்பாக மீனவர்கள் நேரடி லாபம் பெறும் வாய்ப்பு உண்டாகும்.இருவழி கப்பல் போக்குவரத்து நடைபெறும் வகையில் அமைக்கப்படவுள்ளது. தற்போது இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் நடந்துவரும் சரக்கு போக்குவரத்தில் சுமார் 40 சதவீதம் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளுக்கு நேரடியாக கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதால் கொழும்பு துறைமுகத்தின் மூலம் நடக்கிறது. சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்பட்டால் இந்த வர்த்தகம் அனைத்தும் தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமே நடைபெறும்.

இப்படி நன்மை பயக்கக் கூடிய திட்டத்தை வழக்கைப் போட்டு நிறுத்திவிட துடித்துக் கொண்டு உள்ளனர் சிலர்.சேது சமுத்திர திட்டத்தை முடக்க வேண்டும் என்ற மலிவான எண்ணத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞர்களின் வாதத்தை மத அரசியலுக்காகவும், தேர்தலுக்காகவும் தங்களின் தேவைக்கேற்ப சில அரசியல்வாதிகள் பலவிதமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களை திசை திருப்ப முயன்று வருகின்றனர். ஆதம் பாலத்தில் உள்ள மணல் திட்டுகளைப் போல் உலகின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற மணல் திட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

குறிப்பாக இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையே கடல் பரப்பிலும், ஆஸ்திரேலியா அருகிலும் இது போன்ற மணற்திட்டுகள் அதிகளவில் காணப்படுகின்றன.மத்திய அரசின சார்பில் வாதிட்டுள்ள வழக்கறிஞர் புராண ஆதாரம் மற்றும் கம்ப ராமாயணத்தை மேற்கோள் காட்டியே எதிர்வாதமிட்டுள்ளார். அப்படிப் பட்ட நிலையில் தான் அவர் தான் கட்டிய பாலத்தை ராமர் தனது மனைவியை மீட்டு கொண்டவந்த பிறகு தனது வில்லால் பாலத்தைத் தகர்த்துவிட்டார் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்றமோ திட்டத்தை நிறைவேற்றிட பணிகள் நடைபெற்றுவரும் 6வது பாதையிலிருந்து 4 வது பாதையில் நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.ராமர் மீது பற்றும் பாசமும் கொண்டவர்கள் போல் காட்டிக் கொள்ள துடிக்கும் மதவாதிகளும், அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திவரும் அரசியல் தலைவர்களுக்கும் மத்திய அரசே இராமர் பாலம் என்பதை ஏற்றுக் கொண்டாகிவிட்டது என்று பொய் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இயற்கையாய் அமைந்த மணல் திட்டு மனிதரால் கட்டப்படவில்லை என்று முன்பு கூறியவர்கள் தற்போது ராமர் கட்டினார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் காமெடி அடித்து வருகின்றனர். இப்படியெல்லாம் பொய்யுரைத்து வரும் அதிமேதாவி நண்பர்கள் இப்படிப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டிருப்பார்களேயானால் ராமர் இருந்ததையும், அவர் தான் பாலம் கட்டினார் என்பதையும் ஒப்புக் கொண்டபின் இது குறித்த வாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்று தானே கூறியிருக்கவேண்டும் ஏன் மாற்றுபாதையை பற்றி கூறவேண்டும்.

ராமர் பாலம் ஒருவழிபாட்டுத் தலம் என்றால் கடலுக்கள் எங்காவது 25 கிலோ மீட்டர் தொலைவில் வழிபாட்டுத் தலம் உள்ளதா?, பூமியை வணங்குகிறோம் என்பதற்காக பூமியை யாரும் தோண்டி எதுவும் செய்யக்கூடாதா? மலைகளில் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இருக்கிறது என்பதற்காக மலையைத் தோண்டி எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றக் கூடாதா? என்ற கேள்விகளையும் கேட்டுள்ள நீதிபதிகள் பணிகள் நடைபெற்றுவரும் பகுதியிலிருந்து மண்ணை அள்ளி வேறொரு இடத்தில் போடுவதால் புனிதம் கெட்டுவிடுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதனை தொழில் பக்தியுடைய பல பத்திரிகைகளும், ஊடகங்களும் மறைத்துவிட்டன. சேது சமுத்திர திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அதன் மூலம் ஏற்படும் வளர்ச்சிகளையும், வாய்ப்புகளையும் மறுக்கமுடியாது என்று எழுதித் தள்ளிய ஊடகவியலார், இன்று காவி மனிதர்களின் முட்டாள்தனமான கூற்றிற்கு தீனி போடும் வகையில் செய்திகளை வெளியிட்டு தங்களின் இரட்டை நாக்குத் தண்மையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

சுப்பிரமணிய சாமி ஒருமுறை வாதிட்டபோது குறுக்கிட்டுள்ள நீதிபதி, ராமர் பாலம் வழிபாட்டுத்தலமென்றால் கடலில் மூழ்கியுள்ள அதனை யார் சென்று வழிபட்டுள்ளார்கள் என்றபோது மவுனசாமியாய் இருந்துள்ளார். இத் திட்டத்தை துவங்கும் வரையில் ஆதரித்த பலரும் இன்று எதிராய் நிற்பது தமிழக மக்களிடம் வேடிக்கையாய் உள்ளது. இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டி சென்ற ராமர் பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கடல் பகுதியில் போக்குவரத்து வசதியில்லாத அந்த கால நிலையில் எப்படி கடல் பரப்பை கடந்து சென்றிருக்கமுடியும்? அங்கு இவர்கள் கூறும் வகையிலான பாலங்கள் ஏதும் இன்று இல்லையே? ஏப்படி ராமர் ராமேஸ்வரம் சென்றிருக்க முடியும்?கடலுக்கள் பாலம் கட்டியதை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் பலர் எப்படி ராமர் பாம்பன் பகுதியிலிருந்து இராமேஸ்வரத்திற்கு சென்றிருப்பார் என்பதைப் பற்றியும் சிந்திக்கவேண்டும்.

ஒரு சிலர் கூறலாம் ராமர் கடவுள் அவர் எப்படியும் சென்றிருக்கலாம் என்று. எப்படியோ மாய வித்தைகளைக் கொண்டு இதை கடந்தவர் ஏன் கடலுக்குள் போய் பாலத்தை கட்டவேண்டும் எனபதையும் சிந்திக்கவேண்டும்.இப்போது வழக்கு தொடரப்பட்டு பணிக்கு தற்காலிக முட்டுக்கட்டை போடப்பட்டிருக்கும் நேரத்தில், வழக்கு தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாடு பல நேரங்களில் பலவிதமாய் இருந்துள்ள நிலையில் மத்திய அரசிற்கு குட்டுவைக்கும் அளவிற்கு தமிழக அரசு ஏதாவது காரியங்களை செய்திருக்கவேண்டும்.

தமிழகத்தின் தயவு இல்லாமல் இன்றைய மத்திய அரசு நீடிக்க வாய்ப்பில்லை. அதனால் இது போன்ற விசயங்களில் மத்திய அரசு முதலில் தனது நிலையில் குறிப்பிட்ட பாதையில், குறிப்பிட்ட நிலையில் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நிலையானதும், இறுதியானதுமான முடிவில் இருக்கவேண்டும், இதற்குண்டான தைரியத்தையும், பலத்தையும், மருந்தையும் தி.மு.க தான் கொடுக்கவேண்டும்.திட்டத்தை நிறைவேற்றவிடாமல் இடையில் இருப்பவர்கள் தடுத்து வருகின்றனர் என்று கூறும் தமிழக முதல்வர் எதற்கும் அஞ்சாமல் தமிழகத்தின் வளர்ச்சியையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு எதிரிகளின் சூழ்ச்சியை தாங்கிக் கொள்ளாமல் மத்திய அரசிடம் கடுமையான போக்கை கடைபிடித்து திட்டத்தை முடிக்க வேண்டும்.

வேண்டுமென்றால் மத்திய அமைச்சர் பதவிகளை துறந்தாவது திட்டத்தை நிறைவேற்றும் பணிக்கு மக்களை தயார்படுத்திட வேண்டும். ஏனென்றால் இனி மதவாதிகளிடம் இருந்து - மக்களின் எழுச்சியுடன் தான் திட்டத்தை நிறைவேற்றிட முடியும்.

- நன்றி மு.ஆனந்தகுமார். (anandhammu@gmail.com)(பத்திரிகையாளர் - சமூக ஆர்வலர்)

திருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா!

நான்கு மாதங்கள் மற்றும் சொச்ச நாட்கள் வரை கொடநாடு எஸ்டேட்டில் தங்கி, நவீன வனவாசத்தை முடித்துக் கொண்டு, திரும்ப போயஸ் தோட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா! வந்த கையோடு, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்ப அதிர்ச்சி விசிட் கொடுத்து, அங்கிருந்தபடியே... "ஓடியா... ஓடியா... கூட்டணிக்குக் கதவு திறந்தே இருக்கிறது" என்று கூவிக்கூவி அழைப்பும் விடுத்திருக்கிறார்.'ஊருக்குப் போன அம்மா, எப்ப வருவார்?.. வரும்போது, காரச்சேவு, பூந்தி, அல்வா எல்லாம் வாங்கிட்டு வருவாரா... இல்லை. வெறுங்கையை ஆட்டிக்கிட்டு வருவாரா?..' என்று வாசல் கதவின் நாதாங்கியை ஆட்டி அசைத்தபடி நிற்கும் சிறுகுழந்தைகளின் ஏக்கத்திலிருந்த அவரது கட்சித் தொண்டர்கள், கூட்டணிக்காக அம்மா விடுத்துள்ள அழைப்பைக் கேட்டதும், புது ரத்தம் பாய்ச்சியவர்களாக ஆகிப்போனார்கள். போன தீபாவளிக்கு வாங்கி, வெடிக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஓலை வெடிகளையும், சீனிப் பட்டாசுகளையும் தேடியெடுத்து ஒவ்வொன்றாய்க் கொளுத்தி, நீண்டநேரம் தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி கொண்டாடினார்கள்.

"தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களால் மக்களுக்காக உருவாவது தான் அரசு. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி குடும்பத்தால், கருணாநிதி குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட அரசுதான் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சா¢யில்லை. விவசாயிகள், நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர். தமிழக மக்களின் துயரங்களைத் துடைப்பது தான் எனது முதல் குறிக்கோள். சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வருமா? லோக்சபா தேர்தல் வருமா? அல்லது இரண்டும் சேர்ந்து வருமா? என்பது தொ¢யவில்லை.

தேசிய அளவிலும் இதே நிலைதான் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. வரப்போகும் தேர்தலில் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றிபெற்று மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதே எங்கள் முதல் குறிக்கோள்" என்றும், அதற்காக, 'எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரத் தயார்' என்றும் அவர் விடுத்த அந்த அழைப்புச் செய்தி, அவரது பரந்த மனத்தை தமிழ்க்கூறும் நல்லுலக ஓட்டுக்கட்சிகளுக்கு எடுத்துக் கூறுகிறது.டாஸ்மாக்குக்குப் போட்டியாக, பாலோடு பருப்பும் தெளிதேனும் கலந்து ஓடும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவிய அந்தச் செய்தி, கட்சியின் தொண்டர்களையும் தாண்டி, நகர்ப்புறத்து டீக்கடைகளில் வெங்காய வடையைக் கடித்தபடியும், சிகரெட்டை புகைத்தபடியும், கிராமங்களின் நாட்டாமைகள் உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் வட்டமான அல்லது சதுரத் திட்டுகொண்ட ஆலமரத்துக்கடியில் பான் பராக்கைக் குதப்பிக் கொண்டும், கோழி றெக்கையில் எச்சில் நனைத்து, காது குடைந்து கொண்டும் உடனடி பொதுமக்கள் சபைகளைக் கூட்டவும் காரணமாகி விட்டது.

கண்மாயில் ராவோடு ராவாகத் திருட்டுத் தனமாய்ப் பிடித்த மீனை பட்டியக்கல்லில் வைத்து உரசுவதுபோல, 'அம்மா, யாரோட கூட்டணி வெச்சுங்குவாங்க?' என்று குடல் வேறு குந்தாணி வேறாய்ப் பி¡¢த்து அலசி, பட்டிமன்றம் நடத்தும் சாலமன் பாப்பையா, லிஸ்டிலிருந்து தொலைந்து போய்விட்ட திண்டுக்கல் ஐ.லியோனி ரேஞ்சுக்கு, பலபேரை ஒரே அறிக்கையில் நடுவர்களாக உயர்த்தி விட்டார், புரட்சித் தலைவி அம்மா.இதிகாச காலத்து இராமனுக்கு பதினான்கு ஆண்டுகால வனவாசம் தான் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தனக்குத் தானே வனவாசத்தை விதித்துக் கொண்டிருக்கும் அம்மா, கால நேரக் கணக்கெல்லாம் பார்ப்பது இல்லை. எப்போது வனவாசத்தைத் துவங்குவார்... அதை எப்போது முடிப்பார் என்று அவருக்கே தொ¢யாது. சுய வனவாசத்தை முடிக்க அவர் போகுமிடங்கள் ஐதராபாத் திராட்சைத் தோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் என்று பல்கி இருந்தாலும், பெருவா¡¢யான அவரது கா¡¢யங்களும் சில கட்சிக்கா¡¢யங்களும் நடப்பதற்குத் தடங்கல்கள் எதுவும் இருப்பதில்லை.

¡¢லையன்ஸ், விப்ரோ, இன்போஸிஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டு வசதிக்கு ஏற்ப, பதிவு அலுவலகம், செயல் அலுவலகம், கிளை அலுவலகங்கள் என்று வைத்திருப்பது போல, அம்மாவின் கட்சியிலும் இதுபோன்ற அலுவலகங்கள் பல உள்ளன.அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், நாளொன்றுக்கு ஒரே ஒரு தடவை பஸ் வந்து போகும் அசல் பட்டிக்காட்டைச் சேர்ந்த நொந்த தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், டீக்கடை மறைவில் நின்று வாங்கிவிடும் நூறு ரூபாய்க் கையூட்டைக் கண்டித்து, 'அம்மாவின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம்' என்று செய்தித் தாள்களில் பேட்டி கொடுப்பார்கள். அதைச் சிரமேற்கொண்டு, போயஸ் தோட்ட வேதா நிலைய 'பதிவு அலுவலகத்திலிருந்தும்', மேலே சொன்ன ஓய்வு நிலையங்களான 'செயல் அலுவலகங்களிலிருந்தும்' எப்போதாவது, 'ஊட்டி நகராட்சி முன்பு 21 -ம் தேதி கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் போராட்டம் நடத்துவார்கள்...' என்றோ, 'ராஜபாளையம் நகர்மன்றத் துணைத் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள்...' என்றோ, ஒரு துண்டறிக்கை மட்டும் வெளியாகும்.அதன் மூலம், தான் அரசியலில் இருப்பதை அவ்வப்போது உறுதிபடுத்திக் கொள்ளும் அம்மா, வனவாசம் முடிந்து திரும்பி வந்த கையுடன், அ.இ.அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திலிருந்து விட்ட அதிகாரப் பூர்வ(!) அறிக்கை, தி.மு.க.,வுக்குள் கிலியையும் அதைத் தவிர மற்றெல்லாக் கட்சிகளுக்கும் புதிய வழியையும் திறந்துவிட்டிருப்பதாக, அம்மாவின் புலனாய்வுத்துறை தொ¢வித்து மகிழ்கிறது.

அவர் முன்பு நடித்த படங்களுக்கு வெள்ளிவிழா, வைர விழா கொண்டாடுவது போல, கொட நாடு எஸ்டேட்டில் நூற்றிஇருபத்து ஐந்து நாட்கள் வரை தங்கியிருந்து, பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு ரூமிலும் உட்கார்ந்து யோசித்து, பற்பலத் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்டு வந்திருப்பதாகவும் செய்திகளைக் கசிய விட்டிருக்கிறார்கள்.நான்காண்டு காலம் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் பற்பல இழுபறிகளையும் இன்னல்களையும் சந்தித்து, ஒருவழியாக இடதுசா¡¢களின் இடையூறுகளை, எண்ணெய்த் தேய்த்து தலை முழுகிவிட்டு, கடந்த ஜூலை மாதம் முழுவதும் அனைத்துக் கட்சிகளாலும் அவரவர் பங்குக்கு டெல்லியில் நடந்தப்பட்ட, 'அணுசக்தியின் வெற்றி... மானுடத்தின் தோல்வி!' எனும் ஒப்பந்தத் தொடா¢ல், ஆதரவாகவோ... எதிர்ப்பாகவோ... குறைந்தபட்சம் நடுநிலையாகவோ... தனது கட்சியின் பங்களிப்பு இல்லாது போய்விட்ட வருத்தத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகிப்போன அம்மா, இனி நாடாளுமன்றம் என்றால், அதில் அ.இ.அ.தி.மு.க., இருந்தே ஆக வேண்டும் எனும் கட்டாயத்துக்கான நூதனத் திட்டங்களை வகுத்து வந்திருக்கிறாராம்.அம்மாவின் இந்தத் திட்டங்கள் வெற்றி தரக்கூடியதாக இருக்கும் என்று அவரது அபிமானிகள் 'பெட்' கட்டிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் உலவத் தொடங்கியுள்ளன.

கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுக்கிறார், கால்வலிக்கு தைலம் தடவுகிறார், அதிகாலைக் குளி¡¢ல் கம்பளிப் போர்த்திக் கொண்டு வாக்கிங் போகிறார் என்று ரன்னிங் காமெண்டா¢ ரேஞ்சுக்கு, ஓய்வே இல்லாமல் வந்த செய்திகள் எல்லாமே டூப்பாம். இனி, அடுத்த மூவ் என்ன என்பதைத் தான் இந்த நூற்று இருபத்தைந்து நாட்களும் யோசித்து யோசித்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறாராம். அதன் முதற்கட்டம் தான் கூட்டணிக்கான இந்த அறிவிப்பு.இந்த அறிவிப்பிலேயே. கட்டம் கட்டப்பட்டது போல் பதறிப் போயிருப்பவர் வேறு யாருமில்லை., வழக்கம்போல் உணர்ச்சிப்புயல் வைகோ தான்! தேசிய அளவில் திருநாவுக்கரசரைத் தவிர்த்த பாரதிய ஜனதா கட்சியையும், போனால் போகிறதென்று பிரகாஷ் காரத் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் அவர் கூட்டணிக்காகக் குறிவைத்திருப்பதாகச் செய்திகளைப் பரப்பினாலும், மன்மோகன் சிங்கை வைத்து பொம்மலாட்ட ஆட்சியை இயக்கும் அதென்ன பெயர்... ஆங்... அதான் சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு நூல்விடும் வேலையையும் பக்கவாட்டில் பக்காவாக நடத்திக்கொண்டே இருக்கிறாராம்.

அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, அம்மாவின் நண்பரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸோ... மார்க்கரெட் ஆல்வாவோ... நட்புமுறைப் பயணம் மேற்கொள்வார்கள் என்று போயஸ் தோட்டத்து நெடுதுயர்ந்த இரும்புக்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. நாமக்கல்லிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்ட ரோடு ஐலண்ட் வகை வெள்ளைக் கோழிகள், ஆண்டிப்பட்டி தமிழ்ச்செல்வன் அனுப்பிவைத்த நாட்டுக் கோழிகள், கரூர் மலைக்காட்டுக்குள் பிடிக்கப்பட்ட குழிமுயல்கள் எல்லாமே விருந்துக்கான ஏற்பாட்டில் தயாராகவே வைக்கப்பட்டுள்ளன. அம்மாவும் அவரது ஆருயிர் சகோதா¢யும் பால்கனியின் கைப்பிடிச் சுவற்றைப் பிடித்தபடி, தெருமுனை தொ¢யும்வரை எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக் கொடிகட்டிய ஒன்றிரண்டு கார்கள், போயஸ் தோட்ட சாலையில் திரும்பாமல், கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிப்பக்கமும் போனதாகத் தகவல்கள் வந்து சேர்ந்தன.

'இருக்காதுக்கா... அந்தக் கார்ல வி.ஐ.பி. யாரும் இருந்திருக்க மாட்டாங்க. லோக்கல் குல்லாக்கள் யாராச்சும் அந்தப் பக்கமாப் போயிருப்பாங்க. சேதி சொன்னவன்கிட்ட நல்லாக் கேளுங்கக்கா...
அந்த வண்டிக டெல்லி ரெஜிஸ்டரேஷனான்னு?'
என்று சமாதானப்படுத்தும் காட்சிகளும் அரங்கேறி வருவதாக மூக்கு வியர்க்கும் பட்சிகள் தகவல்கள் சொல்கின்றன.''இல்லை... சசி. காங்கிரஸ்ல இன்னும் ரொம்பப் பேருக்கு, நம்ம மேல பாசம் இருக்கு. ஆனா சோனியாவுக்குத் தான் கொஞ்சம் கோபம் இருக்கும் போல.

தான், அவங்களை மானாங்காணியாத் திட்டிபுட்டோம். அந்தம்மா, அவங்க ஹஸ்பெண்டை கொன்னவங்களையே மன்னிச்சவங்களாச்சே...? நாம பேசுனதை இவ்வளவு நாள் ஞாபகம் வெச்சுருக்க மாட்டாங்கன்னே நினைக்கிறேன். யாரோ தான் நம்மளைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லி ஏத்தி விட்டுக்கிட்டு இருக்கணும்!

""யக்கா... டெல்லிக்கு ஒரு விசிட் அடிச்சு, அங்கே ஒரு டீ பார்ட்டி குடுத்துட்டோம்ன்னா எல்லாஞ் சா¢யாப் போயிருக்கும்க்கா. அதுக்கு ஏற்பாடு பண்ணவா?""நீ சொல்றது நல்ல யோசனை தான், சசி! ஆனா நாம இப்பப் போய் டீப்பாட்டி குடுத்தோம்ன்னா... நம்ம இமேஜ், டேமேஜ் ஆயிரும். அதைக் கடைசி நேரத்து ஆயுதமா வெச்சுக்குவோம். காங்கிரஸ்காரங்களை விடு. இந்த பிஜேபி... ஜஸ்வந்த் சிங் நமக்கு எவ்வளவு குளோஸ் பிரண்ட்? வொ¢குட் Guy. பாரு, எந்த ஒரு ¡¢யாக்ஷனும் இல்லாம இருக்குறாரு. இந்நேரம் பிளைட் புடிச்சு வந்துருக்க வேணாம். மோடி கூட சைலண்ட் மஸ்தான் ஆகிட்டாரே! இந்த செலக்டிவ் அம்னீஷியா அத்வானி, நாம சொன்னது மாதி¡¢யே நம்மளை மட்டும் செலக்டிவ்வா மறந்துர்றாரோ? என்ன இருந்தாலும் வாஜ்பாயை நாம குழித் தோண்டுனது மாதி¡¢ இவருக்கிட்ட நடக்காது. ஆனாலும் நாம தானே அவங்க சாய்ஸா இருக்க முடியும்!""நேஷனலை விடுங்கக்கா...!

நம்ம ஸ்டேட் ஆளு... தேர்தலுக்குத் தேர்தல் சால்வையை மடிச்சு வெச்சுக்கிட்டே தி¡¢யுற டாக்டர்... இல்லையில்லை, மருத்துவர்... அதான், ச.இராமதாசு. அந்த சைடுல அத்துவிட்டுட்டப் பின்னாடியும் நம்மளைப் பார்க்க இன்னும் அப்பாய்ன்மெண்ட்டே வாங்கலை... பம்முறாரா... இல்லை பகுமானங் காட்டுறாரான்னும் தொ¢யலை. 'எல்லாம் என் சகோதா¢ பார்த்துக்கொள்வார்'ன்னு சொல்லிக்கிட்டே வந்துட்டாருன்னா... பிஜேபிக்கு ஒரு ஒம்பது, வைகோக்கு ஒரு நாலு, மருத்துவருக்கு ஒரு நாலு, அப்புறம் முஸ்லிம் லீக்குக்கு ஒண்ணுன்னு ஒதுக்கிட்டு, கடைசில வந்து ஒட்டிக்கிர்றக் கொக்கிகளுக்கு ஆளுக்கு ரெண்டு, அவங்க 'பிஜேபி இருக்கே'ன்னு வராட்டி, நம்ம தொல். திருமாக்கு ஒரு மூணு. ஆங், செ.கு. தமிழரசனை விட்டுட்டேனே... அவருக்கு ஒரு ஒண்ணைத் தட்டிவிட்டுட்டா... கூட்டணி ஜெ... ஜெ... தான்! இல்லையில்லை... ஜே... ஜே... தான்! மிச்சம் பதினெட்டு இருக்கும். வலுவான இடமாப்பாத்து நாம நின்னு அடிச்சோம்ன்னா...

போன தடவை நாம வாஸ் அவுட் ஆன மாதி¡¢ இந்தத் தடவை, அவங்க காலி. டோட்டலா வாஸ் அவுட்! பேசும்போதே எப்படி நல்லாருக்கு? நம்ம வீடு. திருவிழா மாதி¡¢ களை கட்டிரும்!""சசி.. நீ சொல்றதெல்லாம் சா¢தான்! ஆனா கணக்கு இடிக்குது. 'போய்ட்டு போய்ட்டு வர்றவருக்கும் நாலு... எப்பவும் கூடவே இருக்குற எனக்கும் நாலா?'ன்னு வைகோ பல்ப்பம் தொலைச்ச பச்சப்புள்ளைக் கணக்கா, கண்கலங்க ஆரம்பிச்சுருவாரு. அவர் பாவம் பொல்லாதது. கூட ஒரு சீட் போட்டுக் குடுக்கணும்.

ஆனாலும் நீ முக்கியமான இன்னொண்ணை மறந்துட்டே பாரு!""என்னக்கா அது?""விஜயகாந்த்...!"" அட ஆமாக்கா, அந்தப் புள்ளிவிவரப் புலியை எப்டி மறந்தேன்?""நாம, இது மாதி¡¢ மெத்தனமா இருந்த நேரத்துலயும், அசந்துட்ட நேரத்துலயும் ஊடாலப் பூந்து வூடு கட்டுன ஆளு, அவரு. நாம இப்போ மாஞ்சா வெச்ச நூலை விட்டோம்ன்னா, ஆளு நம்மப் பக்கம் சாஞ்சாலும் சாஞ்சுறலாம். அப்டி சாஞ்சுட்டா, மருத்துவரையும் விஜயகாந்த்தையும் வெச்சே நாமக் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கும்மியடிச்சுறலாம்!"

"மருத்துவரும் விஜயகாந்தும் எப்டிக்கா ஒரே வண்டியில் ஏறமுடியும்?""ஏன் முடியாது? கொஞ்ச நாளா அவங்க ரெண்டுபேத்தோட அறிக்கைகளையும் எடுத்துபாரு. ஒரே மாதி¡¢ இருக்கும். மருத்துவரு தி.மு.க. மேல ஏகக் காட்டமா இருக்காரா...? அது மாதி¡¢த்தான் விஜயகாந்தும் இருக்காரு! சமச்சீர் கல்வி, மருத்துவக் கல்லூ¡¢ அரசு இட ஒதுக்கீடுன்னு ரெண்டுபேருமே ஒரே மாதி¡¢தான் பேசுறாங்க. நாம சா¢யா நூல் விட்டா... கா¡¢யம் சித்தியடையும்!"

"யக்கா, ஏதோ வண்டி வர்ற சத்தங் கேக்குதுக்கா... டெல்லி ஆளுகளா இருக்கும். காங்கிரஸா... பிஜேபியான்னு பார்க்கலாம்!""சீக்கிரம் பாரு... எனக்கும் யாருன்னு தொ¢ஞ்சுக்க ஆவலா இருக்கு!""

ஹ¥ம். நம்ம வீட்டுக்கு இல்லக்கா. ரஜினி, குசேலன் படத்துல வெட்டுன பிட்டுகளை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போறாரு போல!""பாவம் மனுஷன். நம்ம பாடு பரவாயில்லை! ரஜனி, ரொம்பத் தான் ண்டாடுறாருல்ல?""ஆமாக்கா..!""சா¢, காலைலருந்து இங்கே நின்னு நின்னே கால் வலிக்குது. வெயிலு மேக்கால சாஞ்சுருச்சு. வா சாப்புடப் போகலாம்!"கூட்டணிக்கான அழைப்பை விடுத்ததும், வா¢சை கட்டிக்கொண்டு நிற்க இடமில்லாமல், கட்சிகள் அலைமோதியிருக்க வேண்டிய அ.இ.அ.தி.மு.க.,வில்... இப்படி அவர்கள் இரண்டு பேர் மட்டுமே பேசிக்கொள்ளும் நிலைமை ஏன்வந்தது?சுலபமான பதில், இதோ!திருவிழாவுக்குத் திருவிழா மட்டும் கட்சிக்கடையை வி¡¢த்து, அரசியல் வியாபாரம் செய்து விட்டு, தேர்தல் திருவிழா முடிந்ததும் கடையைக்காலி செய்து ஓட்டுப்போட்ட மக்களையும் கவனிக்காமல், கூட வந்த கூட்டணிக் கட்சிகளையும் சந்திக்காமல் ஓய்வெடுக்கப் போய்விடும் நிலையால் தான் என்பது அவர்களுக்கும் தொ¢யாமலில்லை.

இருந்தும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.இ.அ.தி.மு.கவும்., அதன் சின்னமான இரட்டை இலையும் பெருவா¡¢யான வாக்குகளை வா¡¢த்தரும் அட்சயப் பாத்திரமாக இருப்பதும், அம்மாவின் அசட்டைக்குக் காரணமாக எடுத்துக் கொள்ளலாம்!அதே வேளையில் 2006 -ம் ஆண்டுக்குப் பின் அரசியலில் 'வூடுகட்டி' அடிக்கும் விஜயகாந்தின் வாக்குவங்கி, அ.இ.அ.தி.மு.க.,வின் ஓட்டுக்கள் தான் என்பது அம்மாவுக்குப் பு¡¢யாமல் இருக்குமா? அவர் பு¡¢ந்து கொள்ளும் அளவிலான புத்திசாலிதான்!புத்திசாலித்தனமாகவே பல்வேறு நிலைகளை அவர் கடந்தும் வந்திருக்கிறார்.

நாடாளுமன்ற மேலவையில் அவர் பேசிய கன்னிப்பேச்சின் ஆங்கிலப் புலமைக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். சிதறும் வாக்கு வங்கியை மீட்டெடுக்க உடைந்து போன அ.இ.அ.தி.மு.க.,வின் இரண்டு கூறுகளையும் ஒட்டவைத்த பெவிகால் சாமர்த்தியம் அவரால் மட்டுமே செய்ய முடிந்தது. திமுகவிலிருந்து உடைந்து அ.இ.அ.தி.மு.க., உருவானபோது, அதை ஒட்டவைக்க தேசிய அரசியல்வாதி பட்நாயக் எடுத்த முயற்சிகளே தோல்வியில் தான் முடிந்தன. ஆனால் ஜெயலலிதா சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி சாதித்தார். காவி¡¢ நீர் பிரச்சனையின்போது, முதல்வராக இருக்கும்போதே கடற்கரையில் படுத்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்து டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பது பாஸிடிவ் பக்கங்களென்றால், வாஜ்பாய் அரசு பதிமூன்று நாளில் கவிழக் காரணமாக இருந்தது, ராமஜென்ம பூமியில் கோவில்கட்ட செங்கல் அனுப்பிப் பூ¡¢த்தது, வளர்ப்பு மகனுக்கு ஊர் மெச்சும் திருமணம் நடத்தி, நாட்டு மக்களின் வயிற்றொ¢ச்சலைக் கொட்டிக் கொண்டது போல, சில நெகடிவ் பக்கங்களும் இருக்கவே செய்கின்றன.என்றபோதும், சிந்தனையும் கூர்நோக்கும் உள்ள அவரை, அ.இ.அ.தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகள் கைவிடத் தயாராக இல்லை. ஓட்டுப் போடவும் ஓட்டுகளை சேகா¢த்துக் கொடுக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால் அம்மா என்று தான் அழைக்கப்படுவதால், அவர் தான் கட்சிக்காரர்களைச் சுமந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?மாற்று முகாம்கள் இரவும் பகலுமாக கட்சித் தொண்டர்களைச் சந்தித்தும், மாநிலம் முழுவதும் அமைச்சர்களையும் முக்கிய பிரமுகர்களையும் வைத்து கூட்டங்கள் நடத்தியும், இரண்டரை ஆண்டுகளில் மூன்று பொ¢ய மாநாடுகள் கூட்டிக் கட்சியை பலப்படுத்தியும், தொண்டர்களை சுறுசுறுப்பாக வைத்திருந்தாலும், வாக்கு வங்கியைப் பொறுத்தவரை, கூட்டணிகள் இல்லாத பட்சத்தில் அ.இ.அ.தி.மு.க., தான் தனித்து இன்றும் உச்சத்தில் இருந்து வரும் கட்சியாகும். இந்த மாய வாக்கு வங்கியைத் தகர்க்க, எத்தனைதான் பல்டியடித்தாலும், திட்டங்களை அறிவித்தாலும், இலவசங்களைக் கொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க., ஒன்று முதல் ஒன்னரை சதவீத வாக்குகளை திமுகவைக் காட்டிலும் அதிகமாகவே கொண்டிருக்கிறது.

அதை, விஜயகாந்த் சற்று சிதற வைத்திருப்பதை மறைக்க முடியாது!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டணிதான் வெற்றியை நிர்ணயிப்பதால், பலமானக் கூட்டணியின் ஓட்டுக்கணக்கு ஜெயித்து, அ.இ.அ.தி.மு.க., பின்னுக்குத் தள்ளப்படுகிறது. வலுவான கூட்டணி அமையாமல் போவதன் காரணம், அனுசரணையின்மையே!கூட்டணிக் கட்சிகளிடம் சிறிது அனுசரணையாக, 'அம்மா'வின் குணங்கொண்டு, அவர் நடந்து கொண்டாலே போதும். ஜூலை மாதம் முழுவதும் டெல்லியில் நடந்த அணுசக்தி ஒப்பந்தக் களேபரத்தில், அ.இ.அ.தி.மு.க.,வுக்கு இடமில்லாது போனது, அம்மாவின் மெத்தனத்தாலும்... அனுசரணையின்மையாலுமே என்று சொன்னாலும், அவர் இனி கோபப்பட மாட்டார் என்று கருத இடமுண்டு. கொடநாடு எஸ்டேட் அவருக்கு போதிமரமாக... புத்த கயாவாக... இருந்திருந்தால்...!வழக்கமாய் தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே கட்சியின் வேட்பாளர்களை முதலில் அறிவித்துவிடும் மனோதிடம் அவா¢டம் உண்டு.

தேர்தலைச் சந்திக்கத் தயார் நிலையிலேயே இருப்பார். முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிடும் வேகமும் அவா¢டம் உண்டு. கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பேட்டியின் போது, 'தேர்தலுக்கு அ.இ.அ.தி.மு.க., தயாராக இருக்கிறதா?' எனும் கேள்விக்கு, அவர் தனது பதிலை இப்படிச் சொல்லி இருக்கிறார்.. "நாங்கள் தயாராக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தி.மு.க., அரசைத்தூக்கி எறிந்துவிட்டு எங்களுக்கு ஓட்டுப்போட மக்களே தயாராக இருக்கின்றனர்" என்று.நம்பிக்கை தான், வாழ்க்கை! ஆனால் அது, ஜெயலலிதாவிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது!சமீபகாலமாக அரசியலில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாது போன நிலை, இந்நேரம் அவரை புடம் போட்டிருக்கும் என்று நம்புவோமாக!

-நன்றி எஸ். அர்ஷியா (arshiyaas@rediffmail.com)

Thursday, August 28, 2008

கடவுளால் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு புகையால் க்ளோபல் வார்மிங் என்று பூமியே அநியாயத்துக்குச் சூடாகிக் கொண்டிருக்கிறது.

வட துருவத்தின் மூவாயிரம் வருடம் பழைமையான ஐஸ் மலையெல்லாம் இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் மெல்ல "க்ராக்" விட ஆரம்பித்து எட்டே வருடத்தில் துண்டு துண்டாக உடைந்து கொண்டிருக்கிறது. எங்கோ இமய மலைக்கு வடக்கே நடப்பதுதானே என்று அலட்சியமாக இருந்தால் ஒரு நாள் கடல் உள்ளே புகுந்து மயிலாப்பூர் போய்விடும். மாலத்தீவு முழுகிவிடும். மழை பொய்க்கும். பயிர் அழியும். இன்னும் பாம்பு பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும் அத்தனை உற்பாதங்களும் நேரும்.

இந்த அழிவிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்ற இரண்டே வழிதான் இருக்கிறது.

1. சைக்கிளில் போகலாம்.
2. மரம் வளர்க்கலாம்.

மரங்கள் ஏராளமான கார்பனை உறிஞ்சிக் கொண்டு காற்றைச் சுத்தப்படுத்த வல்லவை.இதற்காக பெங்களூருவில் பத்து லட்சம் விதைப் பந்துகள்' (www.millionseedballs.org) என்று ஓர் இயக்கம் ஆரம்பித்திருக்கிறார்கள். ஜப்பானிய இயற்கை விவசாய குருவான ஃபுகுவோகா கண்டுபிடித்த ஐடியா இது. சின்னக் களிமண் உருண்டைகளுக்குள் ஒரு மரத்தின் விதை, கொஞ்சம் இயற்கை உரம் இவற்றை வைத்து மூடி எங்காவது திறந்த வெளியில் கொண்டு போய் இறைத்து விடுவார்கள்.மழைக்காலம் வரும்வரை குருவி, எறும்பு முதயவற்றிடமிருந்து தப்பி மண் உருண்டைக்குள் பாதுகாப்பாக உறங்கும் விதை, மழையில் களிமண் கரைந்ததும் இயற்கையாக முளைக்க ஆரம்பிக்கும். இறைத்தவற்றில் முக்கால்வாசி வீணாகிவிட்டால் கூட பூமிக்கு இரண்டரை லட்சம் புதிய மரங்கள் கிடைக்குமே.

செலவே இல்லாத சுலப முறை. கர்நாடகத்தின் என்ன என்னவோ ஹள்ளிகளில் எல்லாம் ஆயிரக் கணக்கில் இவர்கள் இட்ட வேம்பும் வாகையும் நெல்லும் பூவரசும் அடுத்த மழைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றன. ஆனல் இதில் முக்கியமான பிரச்னை, பத்து லட்சம் உருண்டைகள் பிடிக்கப் பல ஆயிரம் கைகள் தேவைப்படும். இதற்காக பள்ளிப் பிள்ளைகள், போலீஸ்காரர்கள், சாப்ட்வேர் இளைஞர்கள் என்று பல தரப்பினரும் உற்சாகமாகக் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். ஷாமியானா போட்டு கல்யாணப் பந்தி மாதிரி கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து மண் லட்டு செய்கிறார்கள். ஒரே அரட்டை, பாட்டு, கும்மாளம்! ஐம்பது நூறு பேரைக் கூட்டி வைத்து மண் உருண்டை பிசைவதை ஒரு தமாஷான பொழுது போக்காக மாற்றிய மார்க்கெட்டிங் மூளைக்கு சலாம் போட வேண்டும். சி

ன்ன வயசிலேயே எல்லோருக்கும் மண்ணை வைத்துக் கொண்டு விளையாடுவதில் ஆசை இருந்தாலும் நம் தாய்மார்கள் குறுக்கிட்டு முதுகில் இரண்டு சாத்து சாத்தி இழுத்துக் கொண்டு போய்க் குளிப்பாட்டிவிட்டார்கள். அன்றைய ஏமாற்றத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இந்த இயக்கம்.சாமானிய மனிதர்கள் ஒன்று கூடி முனைந்தால் என்னவெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கு ஆப்பிரிக்காவிலுள்ள நைஜர் நாடு நல்ல உதாரணம். நாட்டில் பாதி சஹாரா பாலைவனம். தொண்ணூறு லட்சம் சதுர கிலோ மீட்டர் ராட்சசன். அக்கம்பக்கத்து விளை நிலங்களையெல்லாம் விழுங்கி கான்சர் மாதிரி வளர்ந்து கொண்டிருந்த பாலை வனம். தங்கள் கண் முன்னே வயல்களெல்லாம் மணல் குன்றுகளாக மாறிக் கொண்டிருந்ததைப் பார்த்த ஏழை விவசாயிகள் மனம் உடைந்தார்கள்.

ஒரு தலை முறையே தங்கள் கிராமங்களைக் காலி செய்துகொண்டு போக வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டது. எனினும் கடைசி முயற்சியாக அவர்கள் ஒன்று கூடிப் பேசினர்கள். டெலிபோன், இண்டர்நெட் எதுவுமில்லாத அந்த எளிய மக்கள், வாய்மொழியாகவே தங்களுக்குள் ஒரு செய்தியைப் பரப்ப ஆரம்பித்தார்கள்."உங்கள் வயல்களில் தற்செயலாக முளைத்திருக்கும் மரக் கன்றுகளைப் பிடுங்கி எறிய வேண்டாம். வளர விடுங்கள்'' என்பதுதான் அவர்கள் பறிமாறிக் கொண்ட செய்தி. காலம் காலமாக நடவு சீசனுக்கு முன்பு களை என்று பிடுங்கிப் போட்டு வந்த செடிகளையெல்லாம் பாத்தி கட்டிப் பாதுகாக்க ஆரம்பித்தார்கள்.

ஜாக்கிரதையாக அவற்றைச் சுற்றி உழவு செய்து கடலையும் சோளமும் பயிரிட்டார்கள். காலப் போக்கில் மரங்கள் கம்பீரமாக வளர்ந்தன. சஹாராவின் சுடு மணல் காற்றை சுவர் மாதிரி நின்று தடுத்தன. அவற்றின் வேர்கள் மண்ணின் வளத்தைத் திருடு போகாமல் பாதுகாத்தன. காற்றின் வெக்கை தணிந்து, மழைப் பொழிவு அதிகரித்தது. இருபதே வருடத்தில் அங்கே புரட்சிகரமான மாறுதல்! திரும்பின பக்கமெல்லாம் பச்சை, பசுமை. இன்றைக்கு நைஜர் நாட்டின் தெற்குப் பகுதிகளை சாட்டிலைட் படத்தில் பார்த்தாலே குளுகுளுவென்று இருக்கிறது.1980 வாக்கில் இந்தியாவிலும் இப்படி ஒரு முயற்சி நடந்தது. மகாராஷ்டிராவின் அகமது நகர் மாவட்டம் என்றால் வறட்சிக்கு மறு பெயர்.

இந்திய ராணுவத்தின் பீரங்கிப் படைப் பிரிவினர் இந்தத் தரிசு நிலத்தில் லட்சக் கணக்கில் மரங்களை நட்டு அழகான காடு ஒன்றை உருவாக்கினர்கள். இதற்கு மழை நீர் சேமிப்பு உத்திகள் அத்தனையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. செயற்கை ஏரிகள் உருவாக்கிக் கால்வாய் இழுத்தார்கள். முதல் வறட்சியைத் தாங்கும் மர வகைகளில் ஆரம்பித்தார்கள். பிறகு பழ மரங்களை நட்டபோது பறவைகள் வந்தன.மரங்கள் சற்று அடர்த்தி அதிகரித்தவுடன் பூச்சிகள், அவற்றைத் தின்னும் சிறு பிராணிகள் எல்லாம் வந்து சேர்ந்தன. சீக்கிரமே நரிகள், முயல்கள் என்று சேர்ந்து போய், உயிரோட்டமுள்ள காடு கிளி கொஞ்ச ஆரம்பித்தது! அங்கே கொண்டு விடப்பட்ட மான்கள் அமைதியான சூழ் நிலையில் வேகமாகப் பெருகின. சுற்றுப்பட்ட எத்தனையோ கிராமத்து மக்களுக்கு வாழ்வளிக்க அங்கே வன தேவதை வந்து வசிக்க ஆரம்பித்தாள்.

தலைக்கு மேல் ஆபத்து காத்திருந்தாலும் நம்மால் இதைச் சமாளித்து விடமுடியும் என்று நம்பிக்கையூட்டுபவர்கள் சிலர் இருக்கிறார்கள்: விழுப்புரத்தில் பஸ் டிரைவர் கருணாநிதி, பேருந்து செல்லும் சாலை ஓரமெல்லாம் அசோக மன்னர் மாதிரி மரம் நடுகிறார். சைக்கிளில் இரண்டு குடத்தைக் கட்டிக் கொண்டு போய் தெருக் குழாயில் தண்ணீர் பிடித்து மரங்களுக்கு வார்க்கும் தலைமலை, மற்றும் பசுமை நாகராஜன், மரம் தங்கசாமி போன்ற எவ்வளவோ நல்லிதயங்கள் அங்கங்கே தங்களது சின்ன உலகத்தைப் பச்சையாக்கி ஆரவாரமில்லாமல் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஈஷா யோகாவின் ஜக்கி வாசுதேவ் சீடர்கள் ஒரே நாளில் எட்டரை லட்சம் மரங்கள் நட்டு கின்னஸ் சாதனை படைத்தார்கள். கீன்யா நாட்டின் நோபல் பரிசுப் பெண்மணி வங்காரி மாதாய், படிக்காத பட்டிக்காட்டுப் பெண்களைத் திரட்டியே நாலு கோடி மரங்களை நட்டிருக்கிறார்.மரங்களைக் காப்பாற்றுவதற்கு நம் எல்லோராலும் சிறு சிறு வழிகளில் உதவ முடியும். உதாரணமாக ஒரு வெள்ளைக் காகிதத்தைப் பழைய பேப்பர் குப்பையில் போடும் முன், அதன் இரண்டு பக்கமும் எழுதியாகிவிட்டதா என்று பார்க்கலாம். இதனால் உலகத்தில் எங்கோ ஒரு மூங்கில் மரத்தின் வாழ்நாள் சில நிமிடங்கள் அதிகரிக்கும்.

சி.து.பெ வெள்ளம்!"எதையும் வேஸ்ட் பண்ணாதே, திரும்ப உபயோகி; உடைந்தவைகளை ரிப்பேர் செய்; மழை நீரை சேமி...'' என்பது போன்ற பல கட்டளைகளை ஒரே சொல்ல் உள்ளடக்கிய அருமையான ஜப்பானிய வார்த்தை ஒன்று இருக்கிறது:

மோடாய்னை (mottainai). குழந்தைகள் சாப்பாட்டை வீணடிக்கும்போது கண்டிப்பதற்குப் பெற்றோர்கள் உபயோகித்து வந்த இந்தச் சொல்லைப் புதுப்பித்து அகலப்படுத்தி ஒரு மந்திர உச்சாடனமாகவே ஆக்கியவர் வங்காரி மாதாய்.

மற்றொருபுறம், இரண்டு கண்ணும் குருடான அரசாங்க அதிகாரிகளும் காண்ட்ராக்டர்களும் சேர்ந்து இதை விட வேகமாக பூமியை மொட்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்கள் முன்னால் சென்னையிருந்து தெற்கே செல்லும் நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் மிகப் பழைய மரங்கள் இருந்தன. பெயிண்ட் அடித்து தாசில்தார் நம்பர் போட்ட மரங்கள். எத்தனையோ மன்னர்களுக்கும் யுத்தங்களுக்கும் ரத்தங்களுக்கும் மெளன சாட்சியாய் நின்ற மரங்கள். இப்போது நம் டீசல் புகை வாகனங்களுக்கு வழி விடுவதற்காக எல்லாவற்றையும் வெட்டித் தள்ளிவிட்டார்கள்.

சியாரா க்ளப் சுற்றுச் சூழல் இயக்கத்தை ஆரம்பித்த ஜான் மியூர் ஒருமுறை சொன்னர்: "கடவுள் மரங்களைப் படைத்தார். வெள்ளம், வறட்சி, நோய் எல்லாவற்றிடமிருந்தும் நூற்றாண்டுகளாக அவற்றைப் பாதுகாத்து வந்தார். ஆனல் அவரால் முட்டாள்களிடமிருந்து மட்டும் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!''

-ராமன் ராஜா

-நன்றி தினமணி கதிர், 27-07-08

உலகமயமாகும் உணவுப் பஞ்சம்

இன்றைக்கு பல நாடுகளின் முக்கியப் பிரச்சினை தீவிரவாதத்தின் மீதான போர் (War on Terrorism) அல்ல. உணவுப் பொருட்களின் திடீர்த் தட்டுப்பாடு. அத் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட விலைவாசி உயர்வு. விழுந்து கொண்டிருக்கும் டாலர் மதிப்பின் காரணமாக தமது பொருளாதாரம் கண்ணுக்குத் தெரியாமல் தேய்ந்து வருவதை தடுத்து நிறுத்தச் சக்தியற்று, சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டு செய்வதறியாமல் திகைக்கும் நாடுகளின் அரசாங்கங்கள் என, உலகம் ஒரு வகையான நெருக்கடிக்குள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏற்கனவே போராட்டங்கள் தொடங்கி விட்டன. பாராளுமன்றம் அளவில் விவாதங்களுடான கூச்சல் குழப்பங்கள் ஆரம்பித்துவிட்டன. சீனாவில், கிராமப்புறங்களில் விலைவாசிக்கெதிரான மக்களின் கொந்தளிப்பு ஊடகங்களில் வெளிவரவில்லை. ஹைட்டி (Haiti)யில் மஞ்சள் களிமண்ணால் ஆன ரொட்டியை சாப்பாடு மாதிரி தின்று தமது பசியைத் தற்காலிகமாக தடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த களிமண் பிஸ்கட் கூட தற்போது விலை ஏறிவிட்டதாம்.

பிரின்ஸ் துறைமுகம் (Port-au-Prince) நகரில் ஊர்வலமாகச் சென்ற ஹைட்டி நகர மக்கள் ஜனாதிபதி மாளிகையின் முன் எங்களுக்குப் பசிக்கிறது என்று கோஷம் போட்டு கலவரம் செய்திருக்கிறார்கள். நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். மெக்ஸிகோவின் முக்கிய உணவான டார்ட்டில்லாவில் பயன்படுத்த சோளம் இல்லையென்பதால் விலை உயரப் போய், அமெரிக்காவிலிருந்து வரவேண்டிய சோள இறக்குமதி மெக்ஸிகோவிற்கு வரவில்லை.

காரணம், அமெரிக்காவிலேயே, பயோப்யூவல் (Bio-Fuel) கம்பெனி வைத்திருப்போர் கூடுதலாக விலை தருவதால், விளைகின்ற சோளம் எல்லாம் உயர்ந்து வரும் எண்ணெய் விலைக்கு ஆசைப்பட்டு, மெக்ஸிகோ மக்களின் வயிற்றுக்கு சென்றடையவில்லை. வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் அளவிற்கு சில நாடுகளுக்கு மட்டுமே பொருளாதார வலிமை உள்ளது.ஈராக் மற்றும் டார்புர் பகுதிகளில் நிலைமை மிக மோசம். போரால் பாதிக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்கள் அகதி முகாம்களில் பிறர் தரும் உணவை நம்பி இருக்கின்றனர்.

அவர்கள் வேலை செய்வதற்கு நிலமும் இல்லை, அதற்குள்ள அமைதியான சூழலுமில்லை.மத்திய கிழக்கின் முக்கிய விளைச்சல் நிலங்களை வைத்திருக்கும் ஈராக்கின் இன்றைய நிலைமை என்ன? லட்சக்கணக்கான மக்கள் உணவு உற்பத்தி செய்ய வேண்டியவர்கள், யாரோ தரப்போகும் ரொட்டித்துண்டுக்காக அகதி முகாம்களில் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். சூடான் மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் ஒரு பக்கம் விளையும் தானியம் மறுபக்கத்திற்குச் செல்ல முடியாமல், அகதிமுகாம்களில் இருந்து கொண்டிருக்கும் மக்களுக்கு உணவு தரமுடியாமல் வளர்ந்த நாடுகள் தவித்துக் கொண்டிருக்கினறன.துபாயில் அரசாங்கம் அடுத்த ஒரு வருடத்திற்கு உணவுப் பொருட்களின் விலை ஏறாமல் பார்த்துக் கொள்ளப் போவதாக வாக்குறுதியளித்திருக்கிறது.

அரிசி விலையேறினால், குறைந்த கூலியில் வேலை பார்க்கும் இந்திய, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மக்களால் அங்கு தொடர்ந்து வேலை செய்ய முடியாது. ஏற்கனவே வரலாறு காணாத படிக்கு உயர்ந்து வரும் விலைவாசியைத் தாங்கும் பொருட்டு ஊதிய உயர்வு கேட்டு துபாயில் வேலை நிறுத்தம் நடந்த அதிசயத்தை உலகம் கண்டது.இந்தோனேஷியாவில் அரிசி ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு போடப்படுகிறது. சிங்கப்பூரில் அரசு அரிசியைக் கூடுதலாக வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

மலேசியாவில் இமிக்ரேஷன் பரிசோதனையில் அரிசி கடத்திச் செல்லப்படுகிறதா என்று சோதனைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் அரிசி ஏற்றுமதிக்கு முற்றிலும் தடைவிதித்துள்ளன.இது வரை ஏற்பட்ட மாபெரும் உணவுப் பஞ்சங்களை ஆராய்ந்தோமானால், வெறும் 30 சதவீதம் உணவுப்பஞ்சங்கள் தான் இயற்கையால் வந்துள்ளன. மீதம் 70 சதவீதம் உணவுப் பஞ்சம் நாடுகள் பிடிக்கும் பேராசை மிக்க வல்லரசுகளின் போர்களால்தான் ஏறப்பட்டுள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள உலகளாவிய பஞ்சத்திற்கு காரணம் சற்றே வித்தியாசமானது (இதிலும் உலகமயம் தான்).அமெரிக்காவின் நேரடிப்போர்கள் (ஈராக், ஆப்கானிஸ்தான், மற்றும் ஈரான்/சிரியா போர் ஆயத்தங்கள்) மற்றும் மறைமுகப் போர்கள் (ஆப்ரிக்க நாடுகளில் பெரும்பகுதிகளில்) ஒரு சிறிய காரணம்தான் என்றாலும், தற்போதைக்கு ஏற்பட்டிருக்கும் உணவுப் பஞ்சத்தின் பரிமாணம் சற்றே பெரியது.

இது வரை இப்பஞ்சத்திற்கு இயற்கை ரீதியான காரணங்கள் எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. வழமையான மழை பெய்கிறது. விளைச்சல் இருக்கிறது. ஆனால் மக்களுக்கு உணவு கிடைக்கவில்லை. என்ன மாதிரியான பஞ்சமிது.இதைப் பற்றி அறிந்து கொள்ள கொஞ்சம் பொருளாதார ஞானமும் தேவைப்படுகிறது.அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. குறைந்த பட்சம் டாலர் வீழ்கிறது என்றாவது அறிந்திருக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு 15 மாதத்திற்கும் 1 டிரில்லியன் (1000 கோடி) டாலர் கடனாளியாக அமெரிக்கா மாறுகிறது என்ற உண்மை உங்களுக்குத் தெரியாமலிருக்கலாம். தற்போது 13 டிரில்லியன் டாலர் கடனாளியாக இருக்கும் அமெரிக்கா தான் உலகிலேயே மிகப் பெரிய கடன்கார நாடு என்றால் அதிர்ச்சியடையாதீர்கள். ஆனால், அது தான் உண்மை. அமெரிக்க டாலர் வீழ்வதைத் தான் அமெரிக்க மத்திய வங்கி (ஃபெடரல் வங்கி) எதிர்பார்க்கிறது. 90களில் ஜப்பானின் யென் நாணயம் சந்தித்த அதே நிலையை இன்றைக்கு அமெரிக்க டாலர் சந்திக்கிறது.

ஜப்பானிய வங்கிகளில் அதீதமான சேமிப்பு இருந்தது.ஜப்பானியர் சிக்கனவாதிகள். அந்த சிக்கனவாதம் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதளத்திற்கு இட்டுச் சென்று விடாமல் காப்பாற்றிற்று. ஆனால் அமெரிக்கர்களோ, பேரனால் கூட கட்ட முடியாத அளவிற்கு கடன் வாங்கி செலவு செய்கின்ற மனோநிலை உள்ளவர்கள். அங்கு சேமிப்பெல்லாம் இல்லை. எனவே, தற்போதைய வீழ்ச்சி எங்கு போய் முடியும் என்று சொல்ல முடியாத நிலை. ஏன் இந்த வீழ்ச்சி வந்தது என்றெல்லாம் விளக்க ஆரம்பித்தோமானால், விடிந்து போய்விடும்.

அதை தனியாக ஒரு பதிவாகப் போடலாம்.எண்ணெய் விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வீட்டுக்கடன் பிரச்னையில் பெரிய பெரிய வங்கிகள் எல்லாம் சிக்கிக் கொண்டுள்ளன. 600 பில்லியன் டாலர் கடன் வீடுகளின் மேல் வராக் கடனாகப் போய் அடைந்து விட்டது. இது வரை 150 பில்லியன் டாலர்தான் நட்டமாக காட்டப்பட்டுள்ளது. மீதம் உள்ள 450 பில்லியன் டாலர் நட்டம் ஒவ்வொரு காலாண்டிலும் கொஞ்சம் கொஞ்சமாக காட்டப்படும். மொத்தமாக காட்டினால், பேங்க் திவாலாகும் என்று சொல்வார்களே அது நடக்கும்.

இங்கு ஒரு நாட்டின் நாணயமே திவாலாகிப் போகும்.ஆகையால், வங்கிகள் சிறிது சிறிதாக நட்டம் காட்டுவார்கள். ஆனால், வீட்டிற்காக கடனாகக் கொடுக்கப்பட்ட அந்தப் பணம் வேறு யாரிடமோ, எங்காவது இருந்து தான் ஆக வேண்டும் இல்லையா. அந்தப் பணத்தை பணமாகவே வைத்துக் கொண்டிருந்தால், கரைந்துதானே போகும். எதிலாவது முதலீடு செய்ய வேண்டும். எதில் முதலீடு செய்வது என்று ஒரு பெரிய கூட்டமே வால்ஸ்ட்ரீட்டில் உட்கார்ந்து கொண்டு மண்டையை உடைத்துக் கொண்டு யோசனை செய்தார்கள்.1960களிலேயே சிலபேர் கம்மோடிட்டீஸ் எனப்படும் மரபு சாரா நிதித்துறை முதலீடுகளில் (Non-traditional investment instruments) முதலீடு செய்ய ஆரம்பித்திருந்தனர்.

அதன் வளர்ச்சி, தங்கத்தின் மூலம் மட்டுமே பிரமிக்கத் தக்கதாக இருந்தது. தங்கம் மட்டுமல்லாது உணவுப் பொருள்கள், உற்பத்தி மூலப் பொருட்கள், எண்ணெய் போன்ற பொருட்களிலும் அவர்கள் ஃப்யூச்சர்ஸ் (FUTURES) என்ற வகை முதலீட்டைச் செய்திருந்தனர்.எக்காலத்திலும், அதன் வளர்ச்சி சீராகவே இருந்தது. டாலர் போகும் போக்கைப் பற்றி அறிந்த, (சாதாரண மாதச்சம்பளம் வாங்குபவனுக்கெல்லாம் புரியாத விஷயமது), நெளிவு சுளிவு தெரிந்த அந்த நிபுணர்கள், நெருப்பில் மாட்டிய புழுபோல் தவித்தனர். எப்படியாவது, தமது நிறுவனத்தின் பணத்தை சரியான அளவில் முதலீடு செய்து போனஸ் வாங்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய அடிப்படை நோக்கம்.

வீழ்ந்து வரும் டாலரால் ஏற்படப் போகும் நஷ்டத்தைச் சரிகட்ட முயற்சிக்கும் பரபரப்பு அது.ஃப்யூச்சர்ஸ் என்றால் என்ன என்று முதலில் தெரிந்து கொள்ளலாம். ஒரு பொருளை வருங்காலத்தில், அதாவது இன்ன தேதியில், இன்ன அளவிற்கு, இந்த விலை என்று ஆறு மாதத்திற்கு முன்போ அல்லது ஐந்து வருடத்திற்கு முன்போ கணிப்பது. அந்தக் காலக் கட்டத்தில் அந்தப் பொருளின் விலை, மேற்படி விலையை விட கூடுதலாக மார்க்கெட்டில் விற்குமேயானால், அந்த பத்திரத்தை விற்றவர், சொன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும். வாங்குபவர் சந்தையில் கிடைக்கும் கூடுதல் விலையின் வித்தியாசத்தில் கொள்ளை லாபம் பார்ப்பார்.

அதாவது, 2008 ஏப்ரல் மாதம் 30ம் தேதி, அரிசி ஒரு குவிண்டால், ஆயிரம் ருபாய் விற்கும் என்று, 10,000 டன்னுக்கு ஆறு மாதம் முன்பே அதாவது 2007 நவம்பர் 30ம் தேதியே, 10 ஆயிரம் டன்னுக்கான பணத்தை வங்கியில் கட்டி அல்லது அதன் 10 சதத்தை கட்டி (மீதத்தை வங்கி செலுத்தும்) அதை வாங்கிக் கொள்வது. நவம்பர் மாதத்தில் அரிசியின் விலை 700 ருபாயாக இருக்கலாம். அதனால், விற்றவர் நினைப்பார், நாம் 300 ருபாய் லாபத்திற்கு இதை விற்றிருக்கிறோம் என்று. ஆனால், ஏப்ரல் மாதத்தில் (எப்படியோ) அதன் விலை 1500 ருபாயாக ஆகிப் போயிருக்கும்.வாங்கியவருக்கு 500 ருபாய் ஒரு குவிண்டாலுக்கு லாபம். விற்றவருக்கு லாபத்தில் தான் நட்டம். அப்படியென்றால் எத்தனை கோடி லாபம்?

இதில் லாபம் தரக்கூடிய முக்கிய விஷயம், குறிப்பிட்ட தேதியில் அந்தப் பொருளுக்கு விலை ஏறியிருந்தால் தான். இல்லையென்றால் நட்டப் பட வேண்டிவரும். லாபம் வர வேண்டுமானால் விலை ஏற வேண்டும். தட்டுப்பாடு ஏற்பட்டால்தான் ஒரு பொருளின் விலை ஏறும். இப்போது இந்த விளையாட்டில் தட்டுப்பாடு எப்படி முக்கியக் காரணியாகிறது என்று புரிந்திருக்குமே?ஜான் பால்சன் என்ற ஹெட்ஜ் ஃபண்ட் மேனேஜர் கடந்த ஒரு வருடத்தில் இந்தமாதிரி உணவுப் பொருட்களின் Futures மூலம் சம்பாதித்தது 3.7 பில்லியன் அமெரிக்க டாலர். ஒரு தனி நபர், இந்த அளவிற்கு போனஸ் பெற்றால், அவரை வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் எத்தனை கோடி சம்பாதித்திருக்கும். சம்பாதித்த பணம், வேறு எங்கு செல்லும்? மீண்டும், அதே விளையாட்டிற்குத் தான்.பிலிப்பைன்ஸ் அரிசி உற்பத்திக் கேந்திரம் என்று நமக்கெல்லாம் தெரியும். அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எல்லாம் அங்கு உள்ளது. ஐஆர் ரக அரிசி எல்லாம் அங்குதான் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆனால், இன்றைக்கு ஐந்து லட்சம் டன் அரிசி இறக்குமதிசெய்ய் அந்தநாடு போட்ட ஒப்பந்தம் திடீர் விலையேற்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் ரேசனில் அரிசி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருக்கின்ற பணத்தால் அரிசியை வெளி மார்க்கெட்டில் ஒரு அரசாங்கத்தாலேயே வாங்க முடியவில்லை என்றால், ஆப்பிரிக்கா போன்ற ஏழை நாடுகளையெல்லாம் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.சிங்கப்பூரின் நிலையெல்லாம் கொஞ்சம் கஷ்டம் தான். இனிமேல், அவர்களும் விவசாயம் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். மலேசியாவில் ஒரு மாநிலத்தில் பல பில்லியன் டாலர் ஒதுக்கி, அரிசி விளைச்சலை அதிகரிக்கப் போகிறார்கள். உணவுப் பொருள் இறக்குமதிக்கெல்லாம் வெளிநாடுகளையெல்லாம் நம்பி இருக்க முடியாது என்பது தான் அதன் அர்த்தம்.

மேற்படி நிதித்துறை விளையாட்டு ஒரு காரணம் தான் என்றாலும், உயர்ந்து வரும் ரியல் எஸ்டேட் தரும் பணத்தால், விவசாயம் செய்வது என்பது அருகி வருகிறது. இது இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பொருந்தும். 7 சதவீத விளைநிலங்களை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த இரு நாடுகளும் பெரும்பான்மையான உணவுத் தேவைக்கு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம் என்றிருந்தன. WTO என்பது ஒரு வகையில் வரப்பிரசாதம்தான். ஆனால், உள்நாட்டு மக்கள் பட்டினி கிடக்கும் போது, உணவுப் பொருட்களை எந்த நாடாவது ஏற்றுமதி செய்ய முடியுமா?

விவசாயம் பார்க்க மக்களுக்கு மனநிலை இல்லை. இயந்திரமயமாதல்தான் ஒரே வழி. ஆனால், உழ நிலம் வேண்டுமே? விவசாய நிலம் எல்லாம் வீடாகிக் கொண்டிருந்தால், என்ன செய்வது?பயோப்யூவல் எனப்படும் உயிர்ம எரிபொருள், தாவரங்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்வரை, இந்த எரிபொருளை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய முடியாததால் இந்தத் துறை பின்தங்கியிருக்கிறது என்று முதலீட்டாளர்கள் பின் வாங்கிக் கொண்டிருந்தனர். தற்போது எண்ணெய்ப் பீப்பாய் விற்கும் விலையைக் கண்டால், அதைவிட குறைந்த விலையில் உற்பத்தி செய்து அதிக லாபம் பார்க்க முடியும் என்று, உயிர்ம எரிபொருள் கம்பெனிகளின் பின்னால் வரிசை கட்டி நின்று கொண்டிருக்கிறார்கள்.

சோளத்திலிருந்து, சோயாவிலிருந்து, ஏன் பாமாயில் கூட உயிர்ம எரிபொருள் தயாரிக்கப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால், மனிதன் சாப்பிடத் தேவையான உணவு வகைகள் விலை உயர்ந்து போவதை யாராலும் தடுக்க இயலவில்லை.லாபம் பார்க்க வேண்டியது தான். ஆனால், பசிக்கு பணத்தையா சாப்பிட முடியும்.பங்குச் சந்தை நிதித்துறையில் வேலை பார்ப்பவர்கள், லாபத்தை மட்டுமே மனதிற்கொண்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இல்லாமல் ஆடுகின்ற இந்த ஆட்டம், அப்பாவி ஏழைகளை உலகெங்கும் கோபத்திற்குள்ளாகியிருக்கிறது.

உணவுப் பஞ்சத்தையும் உலகமயமாக்கியிருக்கின்ற இந்தக் கொடுமை எப்பொழுது நிற்கும்? பசிக் கொடுமை தவிர்க்க முடியாத தடுக்க இயலாத புரட்சிகளைக் கொண்டு வந்து, ஆட்சியாளர்களைப் புரட்டிப் போட்டிருப்பதை வரலாற்றின் ஏடுகளில் நாம் கண்டிருக்கிறோம். ஒரு முறையல்ல, இரு முறையல்ல, நூற்றாண்டுகள் தோறும் இது நடந்திருக்கிறது.

நன்றி: WWW.KEETRU.COM
உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறையும், விலைவாசி உயர்வும் மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பது குறித்து பலருக்கும் தெரிந்திருக்கும். இதற்கு முக்கிய காரணமாக, விவசாய உற்பத்தி(குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தி) திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளதும், பயோ டீசலுக்கு என்று உணவு தானியங்கள் திருப்பி விடப்படுவதும், இருக்கின்ற கொஞ்ச விவசாய விளை பொருட்களும் பங்கு சந்தை சூதாட்டத்திற்கு என்று முன்பேர வர்த்தகம்(Futures Trading) மற்றும் காமாடிட்டி(Commodity) வர்த்தகம் என்ற பெயரில் திறந்துவிடப்பட்டுள்ளது, சர்வதேச அளவில் உயர்ந்து வரும் எண்ணைய் விலை உள்ளிட்டவைதான் காரணமாக உள்ளன.

எண்ணைய் விலை உயர்விற்க்கும் அமெரிக்காவில் வேர் கொண்டுள்ள உலக நிதி மூலதன சிக்கலுக்கும் தொடர்புள்ளது என்று சொல்கிறார் ஒரு பதிவர். மேற்காசிய நாடுகளில் உள்ள எண்ணைய் வளங்கள் மீதான தனது ஆதிக்கத்திற்க்காக அங்கு தொடர்ந்து யுத்தங்களை உருவாக்கி அரசியல் செய்யும் அமெரிக்காதான் எண்ணைய் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.குறிப்பாக எண்ணைய் விலை என்பது ஒரு பேரல் என்பது 90டாலரோ என்னவோ இருந்து தற்போது 135டாலருக்கு உயர்ந்துள்ளது. இது மேலும் கடுமையாக உயரும் 1000 டாலரைக் கூட கடக்கும் என்று சொல்லி அபாயச் சங்கு ஊதுகிறார்கள்.

இப்படி தனது லாப வெறிக்காக உலக மக்களின் தலையில் அனைத்து அபாயங்களையும் ஏற்றியுள்ள அமெரிக்கா உலக மக்கள் அனைவரின் எதிரியாக நிற்கிறது. அமெரிக்க மேலாதிக்க ஒற்றை துருவ வல்லரசின் தலைமையிலான சர்வதேச ஏகாதிபத்திய முதலாளிகள் அதன் பின்னே அணிவகுத்து நிற்கின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மூன்றாம் உலக நாட்டிலும் உள்ள தரகு-நிலபிரபுத்துவ அதிகார வர்க்கம் மாமாக்களாக இருந்து ஓட்டச் சுரண்டிக் கொள்ளையடிக்க உதவுகின்றனர். இந்தியாவில் அம்பானி, பாஜக, டாடா, காங்கிரசு, CPM, CPI உள்ளிட்ட கட்சிகள் இந்த வேலையை தலைமேல் எடுத்துக் கொண்டு செய்து வருகின்றன.

இதுதான் தற்போதைய இந்த உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சினை குறித்த சுருக்கமான விவரனையாக உள்ளது.இதன் விளைவாக அமெரிக்காவில் கூட ரேசன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஒரு எ-காவிற்கு அமெரிக்காவில் அரிசியின் விலை ஒரே மாதத்தில் 10 டாலர் இருந்தது 25 டாலர் என்று உயர்ந்துள்ளது. ஜிம்பாப்வே போன்ற நாடுகள் மிக மிக மோசமான விலைவாசி உயர்வை சந்தித்து வருகின்றன. உலகின் பல பகுதிகளும் ரேசன் விநியோகத்தை தொடங்கியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் மண் பிஸ்கெட் சாப்பிடுகிறார்கள். இந்தோனேசியா அரிசிக்கு பதிலான எண்ணைய் தருவதாக பேரம் பேசுகிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றில் தானிய/நெல் கிடங்குகளுக்கு ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மியான்மரில் பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து போரட்டம் பெரிய அளவில் நடந்துள்ளது. கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் உணவு தானிய ஏற்றுமதியை தடை செய்துள்ளன.இந்த பிரச்சினைகள் குறித்து தமிழ்மணத்தில் கூட பல பதிவர்கள் ஆக்கப்பூர்வமாக பல்வேறு கட்டுரைகள் எழுதியிருந்தனர். வாழ்க்கை என்பதே கும்மிதான் என்று வசதியான வாழ்க்கை வாய்க்கப்பெற்ற (ரொம்ப) நல்லவர்களை இங்கு குறிப்பிடவில்லை.

இழவு வீட்டிலும் கும்மியடிக்கும் அளவு நீச்சலனமான மனநிலை கொண்ட மிக உயர்ந்த ஆன்மாக்கள் அவர்கள். மாறாக அதிகளவு வாசகர்களை இழுக்காவிட்டாலும் இன்றைக்கு உலகையே அச்சுறுத்தி வரும் உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு குறித்து ஒவ்வொரு குறிப்பிட்ட அம்சங்களில் அலசி ஆராய்ந்து, சிந்தனையை செலவழித்து எழுதும் அந்த முகம் தெரியாத பதிவர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்கள். அவர்களை தனித்தனியே பாராட்ட பேரவாவாக இருந்தாலும் அதற்க்கான வாய்ப்புகள் இல்லாத நிலையில் இந்த கட்டுரை ஊடாக சமூக அக்கறை மிளிர எழுதும் அந்த பதிவர்களை பாராட்டுகிறேன்.நிற்க, உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வில் முக்கிய காரணியாக இருப்பனவற்றில் ஒன்றான பங்கு சந்தை சூதாட்டத்தில் பதுக்கி வைத்து கோடிகளில் லாபம் சம்பாதிக்கும் கார்ப்போரேட் வேளாண் கழகங்கள் குறித்துதான் சுருக்கமாக இப்போது பார்க்க இருக்கிறோம்.

எரிகிற வீட்டில் சுருட்டிய வரை லாபம் என்று கொள்ளையடிக்கும் கல் நெஞ்சு படைத்த மிருகங்களாக பன்னாட்டு நிதி மூலதன முதலைகளும், கம்பேனிகளும் செயல்பட்டுள்ளதற்க்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும். சுனாமியால் மக்கள் லட்சக்கணக்கில் செத்து மடிந்த பொழுது அந்த அழிவை மறுகட்டுமானம் செய்யும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொண்டு கட்டுமான தொழில்கழகங்களின் பங்குகளில் சர்வதேச நிதி குவிந்து சுனாமி பாதிக்கப்பட்ட நாடுகளின் பங்கு சந்தை குறீயீடு சுனாமி சாவைவிட படு வேகமாக உயர்ந்த அநாகரிகம் ஒன்று போதும் இவர்களைப் பற்றி புரிந்து கொள்ள.

தற்போது ஏற்பட்டுள்ள உணவு பற்றாக்குறையை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தானியங்களை பதுக்கியும், ஊகமாக தானியங்கள் இருப்பதாக காட்டி அதன் மீது பேரம் பேசி விலைஏற்றும் முன்பேர வர்த்தகத்தின் மூலம் தமது லாபத்தை 80% வரை உயர்த்தியுள்ளன இந்த சர்வதேச கொள்ளைக்கார கும்பல். உலக மக்களின் இழவில் தனது பாகாசுர வயிற்றை ரொப்பிக் கொள்கின்றனர் இந்த கிரிமினல் கும்பல்கள்.தானிய கொள்முதல், விநியோகம் உள்ளிட்ட தானிய சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சப்ளை செயின் எனப்பட்டும் அதன் முழுமையான விநியோக சங்கிலியிலும் ஈடுபட்டுள்ள கார்க்கில் எனும் அமெரிக்க கம்பேனி 2.34பில்லியன் டாலர் லாபம சம்பாதித்துள்ளது 2007ல் இது போன வருடத்தை விட 54% லாபம். இந்த கம்பேனி தற்போதைய உலகத்தின் இழவில் சூதாடி எவ்வளவு சம்பாதித்துள்ளது என்பதை பாருங்கள்.

2008 முதல் காலாண்டு நிதி அறிக்கையில் காமாடிட்டி வர்த்தகத்தின் மூலம் மட்டும் அதனது வருவாய் 86% உயர்ந்துள்ளது. இதே போன்ற வேளாண் கழகமான அமெரிக்க கார்ப்போரேட் கம்பேனியான ஆர்ச்சர் டேனிய்ல் மிட்லாண்ட்ஸ் என்ற கம்பேனியும் பல மடங்கு லாபம் சம்பாதித்துள்ளது. ஹாங்காங்கைச் சேர்ந்த நோபல் குழுமம் வேளாண் பொருட்களின் மீது காமாடிட்டி வர்த்தகத்தில் ஈடுபட்டு 95% லாபம் அதிகமாக ஈட்டியுள்ளது.நம்மக்கிட்ட இருந்து அடிமாட்டு விலைக்கு நம்மோட ஒரு பொருளை வாங்கிட்டு பிறகு அதே பொருளை நமக்கே பல மடங்கு விலை உயர்த்தி விற்றால் அந்த பொருளை வாங்குபவனை அடி முட்டாள் என்று சொல்வது தகும் எனில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் செய்து வருவது அதைத்தான். என்ன ஒரேயொரு வித்தியாசம் நாட்டுக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி கொடுத்துள்ள ஓட்டுக் கட்சி தரகர்கள்தான் நம்மை அடிமுட்டாள்களாக மாற்றியுள்ளனர்.

ஒரு எடுத்துக்காட்டுக்கு பாருங்கள் 1996-ல் அமெரிக்க கோதுமை உற்பத்தி பூச்சி தாக்குதலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டது. வேளாண் வியாபாரத்தில் முழு விநியோக சங்கிலியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள கார்க்கில் நிறுவனம் ஒரு டன் 60$ முதல் 100$ வரை கொடுத்து இந்திய கோதுமையை வாங்கி அதனை சர்வதேச சந்தையில் 230$ முதல் 240$ வரை லாபம் வைத்து கொள்ளையடித்தது. இந்த பன்னாட்டு பன்றிகளுடன் வியாபரம் செய்ததால் மட்டும் நூறு மில்லியன் டாலர் ஏற்றுமதி லாபத்தை இந்தியா இழந்தது. இந்த ஏற்றுமதி இந்தியாவில் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது இதன் விளைவாக சர்வதேச சந்தையில் விலை கூட இருந்த தான் தயாரித்த அதே கோதுமைய அதிக விலை கொடுத்து வாங்கியது இந்தியா.

அதாவது அடிமாட்டு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 2மில்லியன் டன் கோதுமையை திரும்ப சர்வதேச சந்தை விலை கொடுத்து வாங்கியது இந்தியா. ஒன்னுமே செய்யாமல் பல மில்லியன் கோடிகளில் நக்கிக் கொண்டு சென்றன பன்னாட்டு கொள்ளைக்காரர்கள். இது பாஜக ஆட்சியின் போது நிகழ்ந்தது.இதே விசயம் வேறு வகையில் நடந்ததற்க்கு இன்னொரு எடுத்துக்காட்டு பாருங்கள். போன வருடம் கோதுமை, அரிசி கொள்முதலை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டது மத்திய அரசு. மேலும் விவசாயிகள் கேட்ட கொள்முதல் விலையும் தர மறுத்தது. இன்னிலையில் விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் விளை பொருட்களை விற்றுவிட்டனர். அதற்க்கு பிறகு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து நமது விவசாயிகள் உருவாக்கியதை விட தரம் குறைந்த கோதுமை, அரிசியை விவசாயிகளுக்கு கொடுத்த கொள்முதல் விலையை விட அதிகம் கொடுத்து இறக்குமதி செய்தது இந்த அரசு.

1996-ல் போடப்பட்ட இந்தியா அமெரிக்க வேளாண் துறை ஒப்பந்தத்தின் (U.S.-India Agricultural Agreement) படிதான் இந்திய விவசாயத் துறை பன்னாட்டு கார்ப்போரேட் கம்பேனிகளின் சூறையாடலுக்கு திறந்துவிடப்பட்டது. 1990க்கு முன்பு உணவு உற்பத்தியில் தான் அடைந்திருந்த தன்னிறைவை உலகமயத்திற்க்கு பிறகு அதுவும் குறிப்பாக 1996 ஒப்பந்ததிற்க்கு பிறகு மொத்தமாக இழந்துவிட்டு நிற்கிறது இந்தியா. இந்த ஒப்பந்தத்தின் ஊடாகத்தான் கார்க்கில், AWB, கோனக்ரோ, ITC, லீவர் உள்ளிட்ட கார்ப்போரேட் கொள்ளையர்கள் இந்திய விவசாயத்தை சூறையாடியுள்ளனர்.

இப்படி பெரும்பான்மை மக்களின் அன்றாட வயிற்றுப்பாடு ஒரு சில ஊக வணிக வெறியர்களின் லாப வெறியின் நிழலில்/கருணைப் பார்வைக்காக விட்டு வைக்கப்பட்டுள்ளது . மனித ரத்த ருசி கண்ட காட்டு விலங்காக கொழுத்த லாபம் கண்டுள்ள இந்த நிறுவனங்கள் ரத்த வெறி பிடித்து உலகை உணவு பஞ்சத்தை நோக்கி நகர்த்தி செல்கின்றன.

உலக மக்களின் எதிரியான அமெரிக்கா அரசயும், லாப வெறி பிடித்து உலகை வெட்டுகிளியாக சூறையாடி வரும் பன்னாட்டு-தரகு முதலாளிகளையும், அவர்களை போற்றி பாதுகாத்து நாட்டை கூட்டிக் கொடுக்கும் ஓட்டு கட்சிகளையும், இந்த போலி ஜனநாயக சுரண்டல் அமைப்பையும் தூக்கியெறியாமல் விடிவு இல்லை என்பதைத்தான் நாளுரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடக்கும் அனைத்து சம்பவங்களும் நிரூபிக்கின்றன.

Thanks: அசுரன்

cartoonsகினியா பன்றிகளா இந்தியர்கள்?

பார்ப்பனர்களின் கூடாரமாக கொக்கரிக்கும் புது தில்லியைச் சேர்ந்த AIIMS மருத்துவ கல்வி நிலையத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை உபயோகப்படுத்தி சில தகவல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளன(Times of India, ஆகஸ்டு 18 முதல் பக்கம்) . கடந்த இரு வருடங்களில் அங்கு 49 குழந்தைகள் இறந்துள்ளனர். சரியாகச் சொன்னால் கொல்லப்பட்டுள்ளனர்.

பன்னாட்டு கம்பேனிகள் தமது புதிய மருந்துகளை சந்தைப்படுத்துவதற்க்கு முன்பு குரங்கு, பன்றி உள்ளிட்டவற்றின் மீது சோதித்துப் பார்த்து பிறகு கடைசியாக நான்காவது கட்டமாக மனிதர்கள் மீது சோதித்து பார்ப்பார்கள். இது போல மருந்துக்களை பரிசோதனை செய்வதற்க்காக இந்த குழந்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அந்த மருந்துகளின் தோல்வி 49 குழந்தைகளின் மரணம். ஏழைக் குழந்தைகள்தானே? குப்பைகள் செத்துத் தொலையட்டும். என்ன வந்தது நமக்கு?

மருத்துவம் அதிகமாக தனியார்மயம் செய்யப்பட்டுள்ள நாடு இந்தியா. குறிப்பாக உலகமயத்திற்கு பிற்பாடு கொஞ்ச நஞ்ச பொது மருத்துவமும் அழிந்து நாசமாகிவிட்டது. இன்னிலையில் விலை அதிகமான மருத்துவம் செய்ய வசதியின்றி வக்கற்று அலையும் இந்திய நோயாளிகள் எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையிலேதான் உள்ளனர். ஒன்றும் செய்ய இயலாமல் நோயுடன் இருப்பதைவிட இலவசமாக கொடுக்கப்படும் இந்த பரிசோதனை மருந்தை எடுத்துக் கொண்டால் என்ன ஆகிவிடப் போகிறது என்பதுதான் அவர்களின் நிலைமை.

எப்படி இந்தியாவின் உழைப்பாளர்களும், இந்திய மூளைகளும், இந்திய வளங்களும் எடுத்துக் கொள்ள ஆளின்றி சந்தையில் மலிவு விலைக்கு கிடைக்கச் செய்யப்படுவதன் காரணமாகவே குறை கூலி பிரதேசமாக இந்தியா அறியப்பட்டு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக்காடாகியுள்ளதோ - அது நியாயப்படுத்தப்படுகிறதோ - அதே போல மருத்துவ பரிசோதனை சாலைகளில் பயன்படும் குறைந்த விலை கினியா பன்றிகளாக இந்திய நோயாளிகள் பன்னாட்டு கம்பேனிகளால் பயன்படுத்தப்படுகின்றனர். மருந்தையும் மருத்துவத்தையும் எட்டாக்கனியாக்கியதன் மூலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இலவசமாக மருந்து கொடுக்கும் தேவதூதர்கள் என்ற பட்டம் வேறு கினியா பன்றிகளிடமிருந்து கிடைக்கும் போது கேட்க்கவா வேண்டும்?

இங்கு பரிசோதனை செய்வது சட்டரீதியாகவும் சிக்கலலில்லதாது, 60% வரை குறைந்த செலவில் செய்ய முடிகிறது என்பதே இந்தியாவை நோக்கி பன்னாட்டு பரமாத்மாக்கள் படையெடுக்கக் காரணம். இதற்கு வசதியாக இரு வருடங்களுக்கு முன்பு சட்டரீதியான சிக்கல்களை எல்லாம் சரி செய்தது இந்திய அரசு. குறைந்த பட்ச பாதுகாப்புகளாக உறுதி செய்யப்பட்டிருந்தவை எல்லாம் குப்பையில் கடாசப்பட்டன, எப்படி அந்த குழந்தைகள் சோதனைச்சாலை பன்றிகளாக கடாசப்பட்டனரோ அப்படி. சர்வதேச காப்புரிமைச் சட்டத்தின் பெயரில் இந்தியாவில் விலை குறைவாக கிடைத்த மருந்துகள் எல்லாம் ராக்கேட் விலைக்கு மாற்றப்பட்டன. கக்கூஸ் போனால் கூட சேவை வரி விதிக்கும் பா சிதம்பரம் இந்தியர்களை கினியா பன்றியாக்கினால் சேவை வரி கிடையாது என்று அறிவித்தார்.

இதோ கினியா பன்றிகளின் சாவு இன்று வெளி வந்துள்ளது. இது ஒரு இடம் மட்டுமே இன்னும் பல இடங்களில் பல மருந்துகள். தமிழகத்தில் கோவையிலும் கூட குறிப்பான சில மருந்துகள் பரிசோதனை செய்யப்படும் செய்தி முன்பு படித்த ஞாபகம்.
இந்த சோதனைகள் நேர்மையாக செய்யப்படுமா என்பதை கட்டுப்படுத்துவதற்க்கு எந்த சட்டமும் கிடையாது. எந்த அரசு அமைப்போ அல்லது வேறு ஏதேனுமோ கிடையாது. படிக்கத் தெரியாத, படித்தும் பாமரர்களாக உலாவும் பெரும்பான்மை இந்தியனிடம் ஒரு பேப்பரை நீட்டி அதில் கையெழுத்திடச் சொல்லிவிட்டு இந்த மருத்துவ பரிசோதனை அயோக்கியத்தனம் செய்யப்படுகிறது. சட்டப்படி எல்லாம் சரிதான். ஏழை இந்தியக் குழந்தை கினியா பன்றியாக கொல்லப்படுவதும்கூட சட்டப்படி சரிதான். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதற்க்கு காசு கூட கொடுக்கப்படுவதில்லை. இது இலவசம். இலவசமாக கொடுத்தால் இந்தியன் தொலைக்காட்சி பெட்டியிலிருந்து, பினாயில் வரை வாங்கி வைத்துக் கொண்டு பதிலுக்கு தனது உயிரையே நன்றிக்கடனாக தருவானல்லவா? சுதந்திரத்தையே இலவசமாக கத்தியின்றி ரத்தமின்றி ஆங்கிலேயரிடமிருந்து காந்தி தாத்தா வாங்கி தந்தாரல்லவா?

நாயின் கஸ்டங்களை புரிந்து கொண்டு நாய்களைக் கொல்லாதே என்று போராடினார் பாஜகவைச் சேர்ந்த நாய்க்கு பிறந்த மேனகா காந்தி. ஆடு, குதிரைகளையும் கூட பரிசோதனை என்ற பெயரில் கொல்லாதே என்று போராடினார் அந்த மேனகா காந்தி. அவர் பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த போதுதான் நாய்க்கடி மருந்து தயாரிப்பு நிறுவனமான கிங்ஸ் இன்ஸ்டியுட் மேற்சொன்ன காரணங்களைக் காட்டி முடக்கப்பட்டது. ஒரு பக்கம் நாய்க்கடி மருந்து தயாரிப்பை மிருகாபிமானத்தின் பெயரிலும், காப்புரிமையின் பெயரிலும் முடக்கியதுடன், இன்னொரு பக்கம் நாய்களை கொல்வதையும் நிறுத்தினர். விளைவு பெரு நகரங்களில் கினியா பன்றிகள்….. மன்னிக்கவும் ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் நாய்களால் கொல்லப்படுகின்றனர்.

இன்னொரு பக்கம் கினியா பன்றிகள்… மீண்டும் மன்னிக்கவும்.. ஏழை உழைக்கும் மக்களின் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் ஏகாதிபத்திய வெறி நாய்களால் கொல்லப்படுகின்றனர். ஆடு, குதிரைகளை மருத்துவ பரிசோதனையிலிருந்து காப்பாற்றிய மேனாகா காந்தி வகையாறாக்களும் வரவில்லை, பசு மாட்டுக்காக கலவரங்கள் நடத்தும் சங் பரிவாரங்களோ அல்லது குழந்தைகளுக்காகவே இன்று வரை தனது சிகை அலங்காரத்தை மாற்றாமல் வைத்து இருக்கும் அரசவை முன்னாள் கோமாளி அப்துல் கலாமுமோ வரவில்லை. மதம் பிடித்த யானைகள், சிக்கன் பிரியானியில் வெந்து சாகும் சிக்கன், ஈ, கொசு இவற்றுக்கு எல்லாம் உச்சு கொட்டி மனஉளைச்சலுக்காளாகும் மென்மையான இதயம் படைத்த மனிதாபிமானத்தின் இலக்கண புத்திரர்கள் இது போன்ற கினியா பன்றிகளின் சாவுக்கு என்ன கொட்டுவார்கள் என்று தெரியவில்லை.

மறுகாலனியாதிக்கம் எதைத்தான் விட்டு வைத்துள்ளது? குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தி வேண்டும் என்பதற்க்காக விவசாயம் சாகடிக்கப்பட்டு ஒன்றரை லட்சம் விவசாயிகள் தற்கொலை, குறைந்த கூலிக்கு இந்திய மூளைகள் என்பதற்க்காக தன்மானத்தை அடகுவைத்த தற்குறிகளின் தேசம், கூந்தலை விற்று பிழைக்கின்றனர் ஆந்திர பெண்கள், மானத்தை விற்றும்.., சுமங்கலி திட்டத்தில் நவீன கொத்தடிமைகள் கல்யாண கனவுகளுடன், நாய்கள் சுதந்திரமாக அலைந்து தெருக்களில் குதறி தள்ள குழந்தைகளோ கொத்தடிமைகளாக கட்டுமான கூடங்களில், பிரவச வேதனையையும் கூட அவுட் சோர்ஸ் செய்து இந்திய பெண்களை வாடகைத் தாய்களாக்கி விட்டது…. பாரத மாத கி ஜெய். இதோ நமது நோய்களையும், நோயாளிகளையும் கூட அவுட் சோர்ஸ் செய்துவிட்டனர்.

இது பிணங்களின் நாடாக மாறினால் குறைந்த விலை சுடுகாட்டு கூடமாகவும் இந்திய அவுட் சோர்ஸ் செய்யப்படும். ஏனேனில் இந்தியாவுக்கு அவுட் சோர்ஸ் செய்யும் சுதந்திரம் 1947 ஆகஸ்டு 15ல் இலவசமாக கொடுக்கப்பட்டது. வந்தே மாதரம்……

Thanks: செய்திரசம்

Wednesday, August 27, 2008

பெட்ரோல் விலையும்... மானியம் என்னும் மாயையும்
ஒவ்வொரு இந்தியனும் தெரிந்து கொள்ள வேண்டிய, பெட்ரோல் விலை பற்றிய விஷயங்களை இங்கே பகிர்ந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். அப்படி தெரிந்துகொள்ளவேண்டியது மிக அவசியமும் ஆகிவருகிற நேரமிது. ஏனெனில், ஆசியாவிலேயே நாம் தான் மிக அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்குகிறோம்.
உலக அளவில் இதில் நாம் இரண்டாம் இடம்!இந்த எரிபொருள் விலை உயர்வு எங்கெல்லாம் நடுத்தர மக்களை பாதிக்கும்:1. காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களில் விலையும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில், இந்த சரக்குகளின் போக்குவரத்துக்கு எரிபொருள் இன்றியமைதாத தேவையாகிவிட்டது.2. நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவைகளான ரெயில், பேருந்து, ஆட்டோ என அனைத்தின் சேவை கட்டணங்களும் இந்த எரிபொருள் விலைப் பொருத்தே அமைகிறது.ஏன் இந்த நிலை? என்ன தான் உண்மை? இந்த பெட்ரோல் விலையின் சூட்சமம் தான் என்ன? சில இனைய வலையில் இருந்து கிடைத்த சில புள்ளி விவரங்களை இங்கு பார்ப்போம்...
நமது அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் எண்ணை கிணறுகள் மூலம் 35 முதல் 40 சதவிகிதம் வரை பெட்ரோலிய வளத்தில் தன்னிறைவு பெறுகிற நாடு நம்முடையது! உங்களால் நம்பமுடிகிறதா? எல்லாம் படித்துப் பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம்...

1. ஒரு பேரல் இறக்குமதி செய்யபடும் கச்சா எண்ணை விலை $ 64.84 ( ஒரு பேரல் = 160 லிட்டர்.) எனில், இந்திய ரூ 2918/-
2. ஒரு பேரலில் சராசரியாக 80 முதல் 90 லிட்டர் பெட்ரோல் கிடைக்கும். அது மட்டும் அல்லாது, வெறு சில விலை உயர்ந்த உற்பத்தி கழிவுகளும் கிடைக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் சுமார் ரூ 47.49 (83 கிரேடு) , 48.89 (91 கிரேடு) என பல விலையில் விற்கப்படுகிறது.
3. உற்பத்தி கழிவுகள்: மண்ணெண்ணை, டீசல் , பென்சீன், பெட்ரோலியம் wax , Praffin, எல்லா வகையான Lubricants, நீங்கள் உங்கள் இருசக்கர வகனங்குளுக்கு உபயோகிக்கும் 2T, 3T எண்ணை வகைகள், தார் மற்றும் பல. பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கிற கழிவுகளும் விலை உயர்தவைகளே! இவை எல்லாவற்றுக்கும் மேல், பெட்ரோல் உற்பத்தியில் கிடைக்கும் மற்றும் ஒரு கழிவு LPG எனபடும் எரிவாயு.
4. பென்சீன் விமானதின் எரிவாயு. இது லிட்டருக்கு சுமார் ரூ 200 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது.
5. டீசல் எரிவாயு லிட்டருக்கு சுமார் ரூ 35 வரை விற்கப்படுகிறது.
6. மண்ணெண்ணை லிட்டருக்கு சுமார் ரூ 25 முதல் ரூ 35 வரை விற்கப்படுகிறது.


7. Prafin - இது ஒரு கிலோ சுமார் ரூ 250 முதல் 300 வரை விற்கப்படுகிறது.
8. 2T, 3T Oil - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 120 முதல் 150 வரை விற்கப்படுகிறது.
9. தொழிற்சாலைகளில் உபயோகிக்கபடும் Lubricants - இது ஒரு லிட்டர் சுமார் ரூ 200 முதல் 400 வரை தரவாரியாக விற்கப்படுகிறது.
10. தார் - இந்த கழிவும் நல்ல விலைக்கு விற்கப்படுகிறது.
இன்னும் பல பொருட்கள் கச்சா எண்ணையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.இதில் உண்மையில் வீணாய் போகும் வாயுதான் நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தபடும் LPG. இது பல வகையாக பிரிக்கப்பட்டு, தொழிற்சாலைகள் மற்றும் உணவகம் போன்ற வியாபார உபயோகத்துக்கு ஒரு விலையும் ( ஒரு கிலோ ரூ 45 -60 ) , வீடுகளில் சமையலுக்கு ஒரு விலையுமாக (சுமார் ஒரு கிலோ ரூ 20 -25க்கு) விற்க்கபடுகிறது.

சில Encyclopedia வலையிலிருந்து கிட்டிய தகவல் படி கச்சா எண்ணையில் சுமார் 88 சதவீதம் எரிவாயுவாக, மீதம் உள்ள 12 சதவீதம் Lubricating oil, Paraffin wax, Plastic, Tar என பல உபரி பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு கூத்து என்னவென்றால் 160 லிட்டர் கச்சா எண்ணை சுமார் 170 லிட்டர் பெட்ரோலியப் பொருட்களை நமக்கு தருகிறது (நன்றி: American Petroleum Institute)
இப்படி, கச்சா எண்ணை ஒரு சொட்டு கூட வீணாக்கப்படாமல் பணமாக்கப்படும்போது, எண்ணை நிறுவனங்கள் எப்படி நஷ்டத்தில் இயங்கமுடியும் என்று எனக்கு வரும் அதே சந்தேகம் உங்களுக்கும் வரலாம். சில இணைய தளங்கள் மூலம் கிடைத்த தகவல்படி, எனது அறிவுக்கு எட்டியவரை...இதோ சில காரணங்கள்:

இந்திய அரசாங்கம், இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணைக்கு 63% (23 per cent + Rs 7.50 per litre) வரி விதிக்கிறது. அதாவது, ஒரு பேரலின் விலை ரூ 2918 எனில், அதற்கு நமது அரசாங்கம் விதிக்கும் இறக்குமதி வரி ரூ 1839. ஆக இறக்குமதிக்குப்பின் ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை ரூ 4757! அத்துடன் விடவில்லை.எண்ணை நிறுவனம் உற்பத்தி செய்த பெட்ரோல் மற்றும் அதன் கழிவுகளுக்கு, மத்திய அரசு விற்பனை வரி வேறு விதிக்கிறது. அதுவும் சாதரன வரி அல்ல. 25% முதல் 30% வரை! அத்தோடு விட்டதா என்றாலும் இல்லை!இந்த பெட்ரோல் மாநிலங்களுக்கு செல்லும் போது, அங்கு மாநில அரசு 20% முதல் 30% வரை விற்பனை வரி விதிக்கும். ஆக 100%-க்கு மேல் இறக்குமதி மற்றும் விற்பனை வரிகள் விதிப்பப்படுகின்றன.எண்ணை நிறுவனங்கள் படு ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றன. உதாரணதுக்கு - IOCயில் ஒரு கார் ஓட்டுனர் சுமார் ரூ 20,000 சம்பளமாக பெறுகிறார். நம்ம ஊரு கால் Taxi ஓட்டுனர் ரூ 2,000 சம்பளதுக்கு படாத பாடுபடுகிறான். ஒரு IT நிறுவனதின் செலவுகளை மிஞ்சுகிறது இந்த எண்ணை நிறுவனங்களின் செலவுகள்.உண்மை இப்படி இருக்க, அரசுகள் நமக்கு மானியம் வழங்குவதாகவும், அதனால் அரசுக்கு பளு கூடுவதாகவும் கூசாமல் கூறுகிறார்கள்!
என் அறிவுக்கு எட்டிய வரை, என் கணக்கும் சரி என்றால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 20 முதல் 22 வரை ஆகலாம். ஏனென்றால், அமெரிக்காவில் மானியங்கள் கிடையாது, அங்கெல்லாம் எண்ணை நிறுவனங்களை அரசு நடத்தவில்லை, தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் ரூ 21 க்கு ஒரு லிட்டட் பெட்ரோல் வழங்க முடியும் என்றால், நிச்சயம் நாமும் ஏறத்தாழா அந்த விலைக்கே தயாரிக்க முடியும் என்பது என் கூற்று.இந்த வலைபதிப்புக்காக நான் பல இணையங்களை வலை வீசி தேடினேன், சில சுறாகள் சிக்கின. அதில் ஒன்று OPEC.ORG (Organization of the Petroleum Exporting Countries) கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.அந்த வலையத்தை அலசிய போது, சில புள்ளி விவரம் என்னை வியக்க செய்தது! அதில் ஒரு பகுதி Who gets what from imported oil? இறக்குமதி கச்சா எண்ணையால் யாருக்கு லாபம்?அவர்களுடைய ஆய்வு துறை (Research Division, OPEC, Vienna, Austria, 2001) செய்த ஆய்வில், கடந்த 1996 முதல் 2001 வரை உள்ள புள்ளிவிவரம்:1. ஏற்றுமதி கச்சா எண்ணையால் OPEC நாடுகள் சுமார் $850 மில்லியன் சம்பதிக்கும் வேலையில் இறக்குமதி செய்யும் நாடுகள் (அரசுகள்) சுமார் $1.3 ட்ரில்லியன் (Trillion) (G7 நாடுகள் மட்டும்) வரியின் மூலம் சம்பாதிக்கிறது, OPEC நாடுகள் தங்கள் எண்ணை வளத்தை விற்று வருவாய் ஈட்டும் நேரத்தில் இறக்குமதி செய்யும் அரசுகள் வரியாக இருமடங்கு சம்பாதித்து விடுகிறது. இதில் இந்திய அரசும் சளைத்தவர்கள் அல்ல! இந்திய அரசும் UKக்கு இணையாக வரி விதிக்கிறது! இது என்ன கூத்து? இது பகல் கொள்ளையா? இதை படித்தபோது எனக்கு ஒரு பழமொழி ஞபகத்துக்கு வருது, சுண்டக்கா கால் பணம், சுமை கூலி முக்கால் பணம் என்பார்களே இது தானா அது? அட சுமை கூலினு கூட சொல்ல முடியாது இந்த வரியை, சுமை கூலி உழைபவனுக்கு கொடுக்கும் காசு. இந்த காமெடிக்கு ஒரு அளவு வேண்டாமா?2. G7 நாடுகளில் பெட்ரோல் விலை புள்ளி விவரங்கள்:

அமெரிக்கா - ரூ 21
கனடா - ரூ 21.6
ஜப்பான் - ரூ 44.5
இங்லாந்து - ரூ 53.55என்று நீள்கிறது,
இதில் வரியின் பங்கு தான் அதிகம். மேலே உள்ள படத்தில் அதன் Break-up உள்ளது பாருங்கள்! நீல நிறம் தான் கச்சா எண்ணை விலை, மஞ்சள் நிறம் கச்சா எண்ணையை பெட்ரோல் எடுப்பதற்காகும் செலவு, சிவப்பு தான் நம் அரசு நம்மேல் சுமத்தும் வரி!!!! இதில் இந்திய பெட்ரோல் விலை இங்லாந்தின் விலைக்கு நிகராக இருக்கும்.3. மேலும் OPEC வலையில் ஒரு தகவல்:" A Taxing Business.... The real burden on the consumer is taxation, and the real profiteers are the governments of the consuming countries. "கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நுகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.நானும் என் பங்குக்கு சில பெட்ரோல் விலை புள்ளி விவரங்களை என் வெளிநாட்டு நண்பர்களிடம் கேட்டு பெற்றேன்:பெட்ரோல் விலை அடைப்பில் அதன் கிரேடுகளும்:அமெரிக்கா - ரூ 22 (87 கிரேடு)
பர்மா (மியான்மர்) - ரூ 28.5 (83 கிரேடு)
மலேசியா - ரூ 23 (83 கிரேடு)
சிங்கப்பூர் - ரூ 41 (92 கிரேடு)
ஆஸ்ட்ரெலியா - ரூ 25
பாகிஸ்தான் - ரூ 27ஒரு விலை கூட இந்தியாவில் விற்கப்படும் விலைக்கு பக்கம் கூட வரவில்லை... ஏன் இந்த கூத்து? ஒருவேளை நாம் இன்னும் இங்லாந்தின் வரி கோட்பாடுகளை பின் பற்றுகிறோமோ?இந்த புள்ளிவிவரங்கள் நம் நாடு பத்திரிக்கைகளுக்கு தெரியவில்லையா? ஏன் அவர்கள் மக்களுக்கு அதை கொண்டு செல்வதில்லை? என்ன தான் நடக்கிறது? இதயை தடுப்பது யார்?இது ஒரு புறம் இருக்க, திரு. மணிசங்கர் போன்ற மந்திரிகள் சொல்லும் சுடு சொற்கள்," பெண்கள் சினிமா போவதையும், சேலை வாங்குவதையும் குறைத்துக்கொண்டால் காஸ், பெட்ரோல் போன்றவை எளிதில் வாங்க முடியும்"நாம சினிமா போவதும், ஆடைகள் வாங்குவதும் கூட இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளில் கண்ணை பறிக்கிறது போலும்? இவரால் இதை தன் மனைவியிடம் சொல்லுவாரா? இவர்கள் ஏன் நம் பணத்தில் உளாவரும் குளிர் சாதன வசதி படைத்த கார்களில் செல்வதை நிறுத்தலாமே? நம் பணத்தில் விமான பயணத்தை நிறுத்தலாமே? வெட்டி பேச்சு நடத்துவதை நிறுத்தலாமே?

இத்தனைக்கும் மேலாக, அவர்கள் சொல்லும் மானியம் என்னும் வார்த்தையை கேட்க்கும்போது. நம் தலையில் பன்முனை வரி சுமத்தி,அதில் பிச்சையிடுவதுபோல் கதைவிடுவதை நாம் உணரவேண்டும். நமக்காக பேச நாம் தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினரும் வரமாட்டார், பாராளமன்ற உறுப்பினரும் வரமாட்டார். ஏனென்றால் அவர்கள் காசு கொடுத்து பெட்ரோல் வாங்கி இருக்க மாட்டார்கள்.நம்முடைய கேள்விகளுக்கு இந்த அரசியல்வாதிகள் பதில் சொல்ல வேண்டிய காலம் மிக விரைவில் வரும், நம் ஆதங்கம் கரையை ஒரு நாள் கடக்கும்.இனியும் விலை கூடினால்,மாட்டு வண்டிகள் வீதிக்கு வரகூடும், அது மட்டும் போதாது, மக்களும் வரவேண்டும், நேபாளம் கண்டது, இந்தியாவும் காணட்டும்.(பி.கு: இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் பல வலைப்பதிப்புகளிலிருந்து எடுக்கப்பட்டு இந்திய மக்களுக்கு ஒரு வலையில் தாருவதற்கான முயற்சியே. Thanks to OPEC.org, wikipedia.org, home.att.net/~cat6a, adventuresinenergy.com, api-ec.api.org, etc.,)
Thanks: http://wethepeopleindia.blogspot.com

Saturday, August 16, 2008

இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 2

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் விரைவில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம்.

அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.இவர்களுக்கு பிரச்சனை பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ - பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த பணக்கார ஏழைகளிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்க்கின்றனர்.

அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த இந்தியத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.இது தெரிஞ்சதுதானே!!அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் இந்திய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே இறக்குமதி வரியை விதித்துக் கொள்ளையடிக்கும்.இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து தேர்தல் அரசியல் கட்சிகள் கச்சா எண்ணெயைப் பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன.

தேர்தல் அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணெதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைக் கண்டித்து உள்ளுர் கேபிள் டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.யாருபா அது??தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம்.

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம்.

வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம்.

"நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம்.இவர்கள் மட்டுமா?அப்போ இன்னும் இருக்காங்களா??தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ,

"அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா,அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார்,2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர்,திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் இந்தியா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.அட படுபாவிப்பசங்களா...!பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல் கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசைப் பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் செயல்படுகின்றனர்.

தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.என்னப்பா செய்ய சொல்ற ??

1. கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும்.

2. ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும்.

3. முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் இங்குள்ள அரசுகளே அவர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.

4. இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும்.

இம்புட்டு நேரம் சீரியஸா தானய்யா பேசிட்டு இருந்த, திடீர்னு காமெடி பண்றியே!!!இதெல்லாம் ஆவுறதில்ல...?ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா?கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன?தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..?

அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் 'இந்தி'யனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

சரி... எப்படி...மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது.அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.முடிச்சிட்டியா...??!!

ஆமாம்... இதல்லாம் நாம எப்போ உணரப்போரோம்?!

இந்திய பொருளாதாரம் - ஒரு தமாசு! - பாகம் 1

நன்றி: அருண்பாரதி

அப்படி என்னதாங்க பிரச்சினை? அரசியல்வாதிங்க யாரு? மக்கள் யாரு? இந்த 2 பேரும் என்ன பன்றாங்க? - கொஞ்சம் சீரியஸா சி(ரி)ந்திக்கலாம்!'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது.

ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார். அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு ‘மார்க்சிஸ்ட்’ மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர். கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன.

இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு மட்டுமின்றி இந்திய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன.

இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.

மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான ‘ஏழைகள்’ ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக்கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது. ’மிகச்சிறந்த பொருளாதார நிபுணராம்’ மன்மோகன் சிங், ‘புள்ளிவிவரப் புலி’யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), ‘சிறந்த நிர்வாகி’யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட ‘அமெரிக்க’ அறிவு ஜீவிகள்.

இப்பொழுது அதே ஊடகங்களுக்குப் பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம். அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட ‘மாபெரும் ஏழைகளுக்கு’ சலுகைகள் அளித்தார்கள்.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் ‘மக்கள்’ இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை மக்கள் தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிக விலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற ‘ஏழை’ நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள். 'நாங்கள் தான் ‘புரட்சிகரப் போராளிகள்’, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்’ என மார்க்சிஸ்ட் நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், ‘தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான’ ரத்தன் டாட்டாவிற்கு சோஷலிச சமுதாயம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு மிகச்சிறிய ஏழை? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை.

கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த பணக்கார ஏழைகள் வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த பணக்கார கடங்கார ஏழைகளை சுதந்திரமாக திரியவிட்டதைப் போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் ‘விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்’ என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.இன்னும் இருக்கு சாமியோவ்... ரொம்ப வருத்தப்பட்டா, ஒடம்புக்கு நல்லது இல்லியாம்!

நாளைக்கு கண்டிப்பா வாங்க...

2 ம் பாகத்திற்கு

மானாட மயிலாட

நான் கடந்த 3 வாரமா மானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்தேன். இந்த நிகழ்ச்சியோட பேரை இணையத் தளங்களில் வேறு ஒரு தமிழ் பெயரில் குறிப்பிடுகின்றனர். அந்த பெயரை நாகரிகம் கருதி இங்கு குறிப்பிட விரும்ப வில்லை. எப்படியாவது அந்த பெயரை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் "குஷ்பு, ரம்பா (இன்சூரன்ஸ் மேட்டர்)" என்ற குறிப்பை வைத்து தெரிந்து கொள்ளவும். இந்த நிகழ்ச்சியை பார்த்தவுடன் தான் அந்த பெயர்க் காரணத்தை புரிந்து கொண்டேன்(சரியான டியுப் லைட்டுடா நீ...).

தமிழின தலைவர் என சுய தம்பட்டம் அடித்து வரும் கலைஞர் தனது தொலைக்காட்சியில் தமிழ் கலைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்?. அழிந்து வரும் தொன்மையான தமிழ் கலைகள் பறை, தப்பாட்டம், கரகம், ஒயிலாட்டம் , மயிலாட்டம் போன்ற நடன நிகழ்ச்சிகளை நடத்தலாமே!! அதை விட்டு விட்டு டான்ஸ் மாஸ்டர் கலா , கற்பு நாயகி, எது எதுக்கு இன்ஸுரன்ஸ் பண்ணனும் வெவஸ்தை தெரியாத நாயகி தலைமையில் "கட்டி புடி! கட்டி புடிடா!" நடனமும் "எப்படி எப்படி சமஞ்சது எப்படி?" போன்ற ஆராய்ச்சி நடனங்களும் நமது கலாச்சாரத்துக்கு தேவைதானா?. இந்த மாதிரி நிகழ்ச்சி பார்க்கதானா இலவச டிவி கொடுத்துள்ளார்கள்??

தமிழினமே சிந்திப்பீர்!!கிட்டதட்ட சென்ஸார் இல்லாமல் ஒரு மலையாள படத்தை பார்த்த உணர்வு இந்நிகழ்ச்சி பார்த்தவுடன் ஏற்பட்டது. முழுக்க முழுக்க ஆபாச அங்க அசைவுகள், இரட்டை அர்த்த பேச்சுக்கள் நிறைந்த ஒரே தொலைக்காட்சி நிகழ்ச்சி இது தான் என்பதில் சந்தேகமில்லை.போன வாரம் நிகழ்ச்சியில் நடுவர்கள் அனைவரும் மிகவும் மங்களகரமாக பட்டு சேலையில் வந்தார்கள். நானும் ஏதோ திருந்தி விட்டார்கள் என்ற நப்பாசையில் "செலிபிரேசன் ரவுண்ட்" (கூடிய சீக்கிரம் "முதலிரவு ரவுண்ட்" வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!!!) நிகழ்ச்சி பார்த்துகிட்டு இருந்தேன்.

அங்கே நடனமாடும் ஜோடிகளை "வாடா! நல்லா பண்ணிருக்கடா!!" என்று பலத்த மரியாதையுடன் நடுவர்கள் அழைக்கின்றனர். அதிலும் பிரியதர்ஷினி என்பவர் கண்டபடி ஆடி முடிச்சவுடன் "நல்ல கெமிஸ்டிரி இருக்கு! இன்னும் டெவலப்(யாரை வச்சு???) பண்ணனும்" என்று அறிவுரை கூறுகின்றனர். பிரியதர்ஷினி இதற்கு நன்றி தெரிவித்து கூறும் பொழுது இதற்கு அவருடைய கணவர் தந்த ஊக்கமும்(???), முயற்சியும் தான் காரணம் என்று தெரிவித்தார். நானும் அந்த தியாகியின் திருவுருவத்தை டிவியில் காட்டுவார்கள் என்று காத்திருந்து ஏமாந்து போனேன்.

நடனமாடும் ஒரு ஆணிடம் ரம்பா (ஏதோ ஒரு) அறிவை தூண்டும் விதமாக "எந்த மாதிரி பொண்ணு உனக்கு பொண்டாட்டியா வரணும்?" ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அவர் சளைக்காமல் "உங்க மூணு பேர் மாதிரி வேணும்"னு மூணு பேரையும் கரெக்ட் பண்ணும் விதமா ஒரு பிட்டை போட்டார். அந்த பதிலுக்கு அவரளித்த விளக்கம் விரசத்தின் உச்சம். அழகுல குஷ்பு மாதிரியும் கவர்ச்சில(???) ரம்பா மாதிரியும் ஆளுமை(??)ல கலா மாதிரியும் இருக்கணம்னு ஒரு புது இலக்கணம் சொல்றாரா..றாரா...றாராம். எனக்கு வாயில நல்லா ஏதேதோ மாதிரி வருது.அப்பொழுது என்னுடைய மகன்(அய்யோ !! அய்யோ!! கல்யாணமானவனு சொல்லிட்டேனோ???)

டிவி முன்பாக நின்று கொண்டு என்னை பார்க்க விடாமல் செய்தான். சரினு நெனச்சுக்கிட்டு ஆடியோ மட்டும் கேட்டுகிட்டுருந்தேன். முழுக்க முழுக்க டபுள் மீனிங் டயலாக்ஸ்!! அப்பா சாமினு டிவியை ஆப் செய்து விட்டேன்(நெசமாலுமேவா??).சிறிது வாரத்துக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் ஒரு ஜோடி "ருக்குமணி! ருக்குமணி! என்ன சத்தம் இந்த நேரம்!" என்ற பாடலுக்கு நடனம் என்ற பெயரில் ஆபாச அசைவுகளுக்கு துவக்கவுரை எழுதி கொண்டிருந்தார்கள். சில நிமிடங்களுக்கு பிறகு குடிசை போன்ற செட்டுக்குள் சென்று விட்டு துணி மணிகளை வெளியே விட்டெறிந்தார்கள். துணிகளை வெளியே எறிந்தவுடன் குடிசையை "சும்மா! அதிருதுள்ள"னு அதிர வைத்து முடிவுரை எழுதினார்கள். இதே நடனம் தெருவோரத்தில் மேடையிட்டு ஆடினால் "ரெக்கார்டு டான்ஸ்" என்று நமது காவல் துறை தமது கடமையை(???) செய்யும்.

ஆனால் இந்த நடனத்திற்கு நடுவர்கள் "வாட் எ இன்னோவேட்டிவ் ஐடியா!" என்று புகழுரைத்து என்னை அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றார்கள். பொது நாகரிகம் கருதி என்னால் இதற்கு மேல் அந்த நிகழ்ச்சிகளில் டி.ஆர்.பி ரேட்டிங் என்ற பெயரில் நடைபெற்று கொண்டுள்ள அநாகரிக விஷயங்களை விவாதிக்க இயலவில்லை.பல வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் "மிட் நைட் மசாலா" என்று நடுநிசியில் இந்த மாதிரியான ஆபாச பாடல்களை ஒளிபரப்புவார்கள். அதே மாதிரி "மானாட மயிலாடா" நிகழ்ச்சியை "நடுநிசி நர்த்தனங்கள்" என்ற பெயரில் ஒளிபரப்பினால் சிறுவர்கள் மனதில் கேடுகெட்ட சமுதாய சீர்கேடு புகுவதை தடுக்கலாம்.

இதைவிட கொடுமை சட்டசபையில் முதல்வர் முன்னிலையில் அமைச்சர்கள் "நமீதாவுக்கு நாடா வைச்ச குட்டை பாவாடை போடலாமா? ஸ்ரேயாவுக்கு சின்ன அரைக்கால் சட்டை போடலாமா?" என்று மக்களின் வரிப் பணத்தில் மக்களின் அன்றாட தேவைக்காக விவாதம் நடத்துகின்றனர். இதை தான் எங்க ஊருல "கொடுமை கொடுமைனு கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை ஜங் ஜங்குனு ஆடுச்சாம்"னு சொல்லுவாங்க.தமிழக வரலாற்றிலேயே முதல்முறையாக தி.மு.க. மகளிர் அணி நடத்திய முதல் மாநில மாநாட்டில் தொலைக்காட்சிகளில் பெண்களை ஆபாசமாகக் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

ஆனால் அவர்களே நடத்தும் தொலைக்காட்சியில் மட்டும் ஆபாசத்தின் விளிம்பிற்கே பொதுமக்களை கூட்டி செல்லலாம். பெண்ணியம் பேசும் கனிமொழி ஏன் இது வரை இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஊருக்கு (மற்ற தொலைக்காட்சிகளுக்கு) ஒரு நியாயம் அவர்களுக்கு ஒரு நியாயம். இது எந்த வகையில் நியாயம் என்று யாருக்குமே புரியப்போவதில்லை.

Thanks: http://vettipayapullaiga.blogspot.com

Wednesday, August 13, 2008

கடமையை தட்டிக்கழித்து பாமர மக்களை ஏமாற்றும் நாடகம் ஆடுகிறார் கருணாநிதி

1983 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. தமிழக மீனவர்கள் 400 பேருக்கு மேல் உயிரிழந்திருக்கிறார்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள அவர்களின் படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைகளுக்கும் சிறைவாசத்துக்கும் ஆளாகியுள்ளனர்.

தமிழக மீனவர்களின் முடிவில்லாத துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. மாறாக அவ்வப்போது கண்டன அறிக்கைகள் வெளியிடுவதன் மூலமும் பிரதமருக்குக் கடிதங்கள் அனுப்புவதன் மூலமும் தமிழக முதல்வர்கள் தங்கள் கடமை தீர்ந்துவிட்டதாகக் கருதினார்கள். மாநிலத்தில் ஆளுங்கட்சியாகவும் மத்தியில் ஆளும் கூட்டணிக் கட்சியாகவும் விளங்கும் தி.மு.க.வின் தலைவரும் முதல்வருமான மு. கருணாநிதி திடீரென விழித்துக் கொண்டு உண்ணா விரதப் போராட்டம் நடத்தியுள்ளார்.

இவரது கட்சியின் ஆதரவு மத்திய ஆட்சி நீடிப்பதற்கு மிக மிக இன்றியமையாததாகும். இந்த நிலைமையில் டில்லிக்கு எச்சரிக்கை விடுவதற்குப் பதில் தமிழக முச்சந்திகளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது கேலிக்கூத்தாகும். தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்துப் பாமர மக்களை ஏமாற்றுவதாகும். யாருக்கு எதிராக இந்த உண்ணா விரதப் போராட்டம் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு விளக்கம் இல்லை.

மத்திய அரசுக்கு எதிராக என்றால் அந்த அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கமாகும். அப்படியானால் தன்னை எதிர்த்து, தானே உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது நகைப்பிற்குரியது. இது ஒருபுறம் இருக்க, உலகின் ஐந்தாவது பெரிய கடற்படையைக் கொண்டுள்ள வலிமை மிக்க ஒரு நாடு இந்தியா. ஆனால், இலங்கையோ சின்னஞ்சிறிய நாடு. அதனுடைய கடற்படையோ வலிமையற்ற ஒரு கடற்படை.

ஆனால், வல்லரசான இந்தியாவின் குடிமக்களை சிங்களக் கடற்படை தொடர்ந்து விரட்டி விரட்டிச் சுடுகிறது. இந்தியக் கடற்படை ஒரு தடவை கூட திருப்பிச் சுடவோ தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவோ முன்வரவில்லை. தமிழக மீனவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுவதை இந்தியாவுக்கு விடப்பட்ட அறைகூவலாக அல்லது குறைந்தபட்சம் அவமானமாகவோ கூட இந்திய அரசு கருதவில்லை. ஒரு நாட்டைச் சேர்ந்த கடற்படையோ இராணுவமோ அண்டை நாட்டைச் சேர்ந்த குடிமக்களைச் சுட்டுக் கொன்றால் சம்பந்தப்பட்ட நாடு உடனடியாக கடும் கண்டனம் தெரிவிக்கும். மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்தும்.

இறந்துபோன தன்னுடைய குடிமக்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டுமென கேட்டுப் பெறும். ஆனால், கடந்த 25 ஆண்டு காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களில் ஒருவருக்குக்கூட இந்திய அரசு நஷ்டஈடு கேட்டுப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சின்னஞ்சிறிய இலங்கைக்கு இந்தத் துணிவு எங்கே இருந்து கிடைத்தது? தொடர்ந்து தமிழக மீனவர்களை வேட்டையாடுவதன் நோக்கமென்ன? இதற்குப் பின்னணியில் வேறு நாடுகள் உள்ளனவா? என்ற கேள்விகள் நமது உள்ளங்களைக் குடைகின்றன.

இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன்னால், கடந்த கால இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இலங்கை இனப்பிரச்சினையில் கையாண்ட அணுகுமுறை என்பது கீழ்க்கண்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது.

1. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்பட்ட ஒரு நாடாக இலங்கை கருதப்பட்டது.

2. இந்த உண்மையை உணர்ந்து இப்பிரச்சினையில் தலையிட அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தயங்கின.

3. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணப்பட வேண்டுமே தவிர இராணுவ ரீதியான தீர்வு காண முயல்வதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது.

4. இலங்கைக்கு எந்த வெளிநாடாவது இராணுவ ரீதியாக உதவி அளிக்க முன் வருமேயானால் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையாக அது கருதப்படும்.

5. திருகோணமலை மாவட்டத்திலோ அல்லது இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலோ அந்நிய இராணுவத் தளங்கள் அமைவதை இந்தியா எதிர்க்கும்.

6. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில், குறிப்பாக, திருகோணமலை பகுதியின் நில அமைப்பிலோ மக்கள் விகிதாசாரத்திலோ எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்தது.

இந்திரா கடைப்பிடித்த இந்த அணுகுமுறையின் விளைவாக இந்தியாவின் பிராந்திய நலன்கள் பாதுகாக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஏவி விடப்பட்ட சிங்கள அரசின் பயங்கரவாதம் செயலிழந்தது. இந்திய அரசின் நிர்ப்பந்தத்தின் விளைவாக தமிழர் பிரதிநிதிகளுடன் பேச வேண்டிய கட்டாயத்திற்கு சிங்கள அரசு ஆளாக்கப்பட்டது. இப்பேச்சுவார்த்தையின் முடிவில் ஓரளவுக்கு தமிழர்களின் நலன்களைக் காக்கும் வகையில் உடன்பாடு ஒன்று கையெழுத்திடப்பட்டது.

ஆனால், அது நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்டார். எனவே, அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதை சிங்கள அரசு முதலில் தள்ளிப்போட்டது. பிறகு மறுத்துவிட்டது. இந்த நிலையில் பிரதமராக ராஜீவ் காந்தி பொறுப்பேற்ற பிறகு, இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் அணுகுமுறை தலைகீழ் மாற்றம் கண்டது. இந்திய வெளியுறவுத்துறைச் செயலராக இருந்த ரொமேஷ் பண்டாரி, இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என். தீட்சித் ஆகிய இருவரும் ராஜீவின் ஆலோசகர்களாக விளங்கினார்கள். இந்திராவின் ஆலோசகராக இருந்த ஜி. பார்த்தசாரதி, வெளியுறவுத்துறைச் செயலர் ஏ.பி. வெங்கடேஸ்வரன் ஆகியோர் அலட்சியப்படுத்தப்பட்டு தாமாகவே வெளியேறினர்.

இலங்கை இனப்பிரச்சினையில் ராஜீவின் அணுகுமுறை என்பது சிங்கள அரசுடன் ஆதாயமில்லாத சமரசம் செய்து கொள்ள வழி வகுத்தது. இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்து வருவதற்கு எத்தகைய எதிர்ப்பும் தெரிவிக்காமல் வேடிக்கை பார்த்தது. சிங்களப் படையினருக்கு மேற்கு நாடுகளைச் சேர்ந்த கூலிப்படைகளும் இஸ்ரேலிய மொசாட் படையினரும் பயிற்சி அளித்தனர். அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கு இலங்கையில் ஊடுருவியது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காண்பதற்குப் பதில் இராணுவ ரீதியாகத் தீர்வு காண்பதில் சிங்கள அரசு முழு மூச்சுடன் ஈடுபட்டது. ராஜீவ் கடைப்பிடித்த இந்தக் கொள்கையின் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டன.

1. ஈழத் தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள அரசுக்குச் சாதகமாகவும் இந்திய அரசின் நடவடிக்கைகள் அமையத் தொடங்கின.

2. இலங்கை இனப்பிரச்சினைக்கு சிங்கள அரசு கூறிய தீர்வை இந்திய அரசு ஏற்றுக்கொண்டது.

3. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வு காண சிங்கள அரசு செய்த முயற்சிகளைத் தடுப்பதற்கு ராஜீவ் அரசால் இயலவில்லை.

4. இலங்கையில் மேற்கு நாடுகள் மற்றும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் செல்வாக்கு அதிகரிப்பதற்கு ராஜீவின் கொள்கை இடமளித்தது.

5. திருகோணமலை துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படையினருக்குத் தேவையான எண்ணெய் கிடங்குகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டபோது இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய இந்தியா, அந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு முயற்சிசெய்து தோற்றது.

இலங்கை இனப்பிரச்சினையில் ராஜீவின் கொள்கையால் ஏற்பட்ட மாற்றங்களும் தடுமாற்றங்களும் தெற்காசியப் பகுதியில் அமெரிக்காவின் நோக்கத்திற்குப் துணை புரிந்தன. தெற்காசியப் பகுதியில் இந்தியாவைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நோக்கமாகும். இலங்கைக்கு அமெரிக்கா அளித்து வரும் இராணுவப் பொருளாதார உதவிகள் இக்கொள்கையின் விளைவே ஆகும்.

தென்னாசியாவைப் பொறுத்தவரை இந்தியாவை அதனுடைய எல்லைக்குள்ளாகவே அடங்கியிருக்கும்படி செய்ய அமெரிக்கா விரும்புகிறது. டிகோ கார்சியா தீவில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தக் காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. அமெரிக்கக் கடற்படைத் தளம் தொடர்ந்து இருப்பதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

எனவே இந்துமாகடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொள்ள வேறுதளம் அமெரிக்காவுக்குத் தேவை. அதற்காக இலங்கை மீது ஒரு கண் வைத்துள்ளது. மேற்கு நாடுகளிலிருந்து கிழக்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கு நாடுகளுக்கும் நடுவே முக்கியமான நாடாக இலங்கை திகழ்கிறது. எனவே, இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அமெரிக்காவின் இந்த நோக்கம் நிறைவேறுவதற்கு ராஜீவின் கொள்கை துணை நின்றது. ஆனால் இதன் விளைவாக இந்தியாவுக்குப் பேரபாயம் நேர்ந்து விட்டது. தெற்காசிய நாடுகளின் அமைப்பிற்கு இயற்கையான தலைவராக இந்தியா இருந்தபோதிலும் அந்தத் தலைமையை மதிக்க மற்ற நாடுகள் தயாராக இல்லை. தெற்காசிய பகுதியில் அநேகமாக எல்லா நாடுகளும் அமெரிக்க ஆதிக்கத்துக்கு உட்பட்டு விட்டன.

இந்தியாவைச் சுற்றி அந்த நாடுகள் இப்போது வியூகம் அமைத்துள்ளன. இந்த வியூகத்தின் ஓர் அங்கமே இலங்கையாகும். இந்த வியூகத்துக்கு பக்கபலமாக அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் உள்ளன. இந்த வியூகம் பலம் பெறுவது இந்தியாவின் சுதந்திரத்துக்கு அபாயத்தைக் கொண்டு வந்து சேர்க்கும் என்பதை இன்னமும் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் உணரவில்லை. அந்நிய நாடுகளின் வலையில் சிக்கிக் கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்பதற்கு இந்திய அரசு கையாளும் உத்தி மிக வேடிக்கையானது. சிறுபிள்ளைத்தனமானது.

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவியை இலங்கை பெறுவதைத் தடுக்க வேண்டுமானால் இந்தியாவே முந்திக் கொண்டு இராணுவ ரீதியான உதவிகளை அளிக்க வேண்டும் என டில்லியில் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் கருதுகிறார்கள். அதன்படியே செயற்படுகிறார்கள். இதன் மூலம் இலங்கை மேலும் துணிவு பெற்று விட்டது. தன்னை தாஜா செய்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்று கருதுகிறது.

இலங்கையில் சீனாவும், பாகிஸ்தானும், அமெரிக்காவும் பிற நாடுகளும் இராணுவ ரீதியான உதவிகளையும் நிதியுதவிகளையும் அள்ளி அள்ளித் தருவது என்பது எதற்காக? இந்நாடுகளின் பொருட்களை விற்பதற்கு இலங்கை பெரிய சந்தை அல்ல. இந்தியாவுக்கு எதிரான தளமாக இலங்கையைப் பயன்படுத்துவதுதான் இந்நாடுகளின் நோக்கமாகும்.

இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் பெனர் என்பவரும் ((The Indian Ocean - A Stratagic Posture For India) ) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவுடன் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு அதனால் ஆபத்து வந்து சேரும்'.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்த உண்மையை மிகத் தெளிவாகவும் தொலைநோக்குடனும் உணர்ந்திருந்தார். அந்நிய வல்லரசுகள் எதுவும் இலங்கையில் காலூன்ற அவர் அனுமதிக்கவில்லை. அது மட்டுமல்ல ஈழத் தமிழர்களை படுகொலை செய்ய சிங்கள அரசை அனுமதிக்கவும் இல்லை. அவர் உயிரோடு இருந்த காலம் வரையில் எந்த அந்நிய வல்லரசும் இலங்கையில் கால்தடம் பதிக்கத் துணியவில்லை.

ஆனால், ராஜீவ் கையாண்ட தவறான அணுகுமுறையின் விளைவாக இலங்கையில் அந்நிய வல்லரசுகள் தடம் பதித்தன. இதன் விளைவாக இந்தியாவின் நலன்களுக்கு எதிராகச் செயற்படும் துணிவு சிங்கள அரசுக்கு ஏற்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்படுவதை நாம் பார்க்கவேண்டும். சின்னஞ்சிறிய சிங்களக் கடற்படை மிகப் பெரிய இந்திய நாட்டின் குடிமக்களைத் திட்டமிட்டுப் படுகொலை செய்கிறது.

அதுவும் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்கிறது. அதற்குக் காரணம் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கையேயாகும். இலங்கையை தாஜா செய்வதற்காக தமிழக மீனவர்களைப் பலி கொடுக்கவும் இந்திய அரசு தயங்கவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும். தமிழக மீனவர்களைத் தொடர்ந்து தாக்கும் போது இந்தியக் கடற்படை ஒருபோதும் தலையிடாது என்ற நம்பிக்கையும் துணிவும் சிங்களக் கடற்படைக்கு உள்ளது. அதற்கேற்றாற்போல இந்திய அரசு நடந்து கொள்கிறது.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது என்பது இலங்கையைத் திருப்தி செய்யலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தங்களின் சகோதர மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதைப் பார்த்துக் கொதித்துப் போயுள்ளனர். அவர்களின் கோபம் இந்திய அரசுக்கு எதிராகத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

Friday, August 8, 2008

அமெரிக்க சேவையில் அனைத்து கட்சிக் கூட்டணி

புதிய ஜனநாயகம் - 2008


முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.

1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.


நாடாளுமன்றமும் அவைத்தலைவரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தனர். இலஞ்சப் பணம் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. விசாரணை நடத்தி, குற்றவாளி சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று அவைக்கும் மக்களுக்கும் உறுதியளிக்கப்பட்டது. இதோ, சுமார் 20 ஆண்டுகளாகி விட்டன. தங்கராசு இறந்து போய்விட்டார். ஜெயலலிதா இரண்டுமுறை முதலமைச்சராகி, பல ஆயிரம் கோடி சொத்துடனும், ''இசட் பிரிவு'' பாதுகாப்புடனும் பவனி வருகிறார். திருநாவுக்கரசு, ''நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்குவதற்கு எதிரான யோக்கியர்''களின் கட்சியாக நடிக்கும் பாரதீய ஜனதா கட்சித் தலைவர்களில் ஒருவராகவும் அதன் மத்திய அமைச்சர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டார். ஆனால், இந்த இலஞ்சஊழல் வழக்கு நாடாளுமன்ற சாக்கடையில் மூழ்கிப் போய்விட்டது. நாடும், வாக்காளப் பெருமக்களும் மறந்து போய் விட்டார்கள்.


இப்போது, ''தேசிய நலன்களுக்காகவும், எரிசக்தி உத்திரவாதத்துக்காகவும்'' என்று சொல்லி இந்தியாஅமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் போடும் மன்மோகன் சோனியா கும்பலைப் போலவே, உலக வங்கிஐ.எம்.எஃப். மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றோடு ஒப்பந்தங்கள் போட்டு நாட்டை மறுகாலனிய அடிமையாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நரசிம்மராவ் சோனியா கும்பல் அரசு, 15 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது ஜூலை 1993இல் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கொண்டது. நாடாளுமன்றத்தில் 14 வாக்குகள் குறைவாக இருந்த நரசிம்மராவ் அரசு, எதிர்க் கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வெற்றி பெற்றது. சிபுசோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் விடுதலை முன்னணியின் நான்கு உறுப்பினர்கள் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிக் கொண்டு, அப்போது நரசிம்மராவ் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்த நான்கு ஜார்க்கண்ட் எம்.பி.க்களின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கில் பணம் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் மீதும் நரசிம்மராவ் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கோ, வாக்களிப்பதற்கோ அதன் உறுப்பினர்கள் மீது எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கவோ, தண்டிக்கவோ முடியாது; அவர்கள் அரசியல் சட்டவிதிகளின்படி பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், இலஞ்சம் பெறும் எம்.பி.க்கள் குற்றவாளிகள் அல்ல என்றும், ஆனால் இலஞ்சம் தருபவர்களை வேண்டுமானால் தண்டிக்கலாம் என்றும் உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியது. அப்போது நான்கு எம்.பி.க்கள் இலஞ்சம் வாங்கிய ஆதாரங்களை வைத்து மிரட்டிப் பணம் பறிக்க முயன்ற தன் அந்தரங்கச் செயலரைக் கடத்திக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, மன்மோகன் அரசில் மத்திய நிலக்கரி அமைச்சராக இருந்து நீக்கப்பட்டவர்தான் சிபுசோரன். இப்படிப்பட்ட அரசியல்கிரிமினல் குற்றங்களில் கைதேர்ந்த சிபுசோரனை மீண்டும் மத்திய அமைச்சராக்குவது என்ற பேரத்தின் பேரில் இப்போது ஆதரவைப் பெற்றது மன்மோகன் சிங் அரசு.


2005ஆம் ஆண்டு, ''தெகல்கா'' என்ற இணைய தள பத்திரிக்கை நடத்திய புலனாய்வு நிழல் நடவடிக்கையில் இலஞ்சம் வாங்கிக் கொண்டு நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் கேள்விகள் எழுப்புவது வாடிக்கைதான் என்பது 11 பேர் கையும் களவுமாகப் பிடிபட்டபோது அம்பலமானது. இந்த விவகாரத்தை விசாரித்து, நிழல் நடவடிக்கைப் புலனாய்வும், அதற்கு அடிப்படையான ஒலிஒளி நாடாவும் உண்மை தான் என்பதை ஏற்று, கேள்வி கேட்பதற்கு இலஞ்சம் வாங்கும் நிழல் நடவடிக்கையில் சிக்கிய 11 எம்.பி.க்களை நாடாளுமன்றமே பதவிநீக்கம் செய்தது. இந்த குற்றச்சாட்டில் சிக்கிப் பதவி இழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதா கட்சி எம்.பி.க்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமைகள் சலுகைகள், தொகுதி வளர்ச்சிக்கான நிதி போன்ற பலவற்றையும் முறைகேடுகள் செய்து பணம் பார்ப்பதும் வாடிக்கைதான்; பயணச்சீட்டுகளை விற்பது, குடியிருப்புகளை வாடகைக்கு விடுவது போன்ற அற்பச் செய்கைகள் முதல் எம்.பி.க்கள் தமது கடவுச் சீட்டு, அடையாள அட்டைகளைக் காட்டி வெளிநாடுகளுக்குப் பெண்களைக் கடத்துவது வரை பல குற்றச்செயல்கள் புரிவது வாடிக்கைதான் என்று பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை தவிரக் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஆள் கடத்தல் போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், எம்.பி.க்களாகவும் அமைச்சர்களாவதும் கூட உண்டு. நாடாளுமன்றத்திலேயே கூச்சல், குழப்பம், செருப்பு வீச்சு, அடிதடி போன்ற ரௌடித்தனங்கள் செய்வதும், ஆபாசமாக ஏசுவதும், சைகை காட்டுவதும் பலமுறை நடந்திருக்கிறது.

லல்லு, முலயம், மாயாவதி போன்ற சீரழிவு அரசியல்வாதிகளின் நுழைவால்தான் இந்த நிலை ஏற்பட்டு விட்டது; நேரு, ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்கள் காலத்தில் இப்படி இல்லை என்று பொய்யான வரலாறு பேசுகின்றனர், "தேசிய' அறிவுஜீவிகள். ஆனால் 194762 ஆகிய 15 ஆண்டுகளில் மொத்தம் 542 சட்டப் பேரவை உறுப்பினர்கள் கட்சி தாவியுள்ளனர். 196768இல் மட்டும் உச்சகட்டமாக ''ஆயாராம் காயாராம்'' அரசியல் தேசம் தழுவியதாக இருந்தது. 13வது நாடாளுமன்றத்தில் 40 எம்.பி.க்களும், 14வது நாடாளுமன்றத்தில் 100 எம்.பி.க்களும் ஏழு மத்திய அமைச்சர்களும் கிரிமினல் குற்றப்பட்டியலில் இருந்ததாக அவர்கள் தமது வேட்பு மனுவிலேயே ஒப்புக் கொண்டுள்ளார்கள்.


இதுதான் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் யோக்கியதை என்றபோதும் கடந்த ஜூலை 22, 2008 அன்று மன்மோகன் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சில மணிகள் முன்னதாக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி கொடுக்கப்பட்ட இலஞ்சத்தின் முன்பணம் என்று பா.ஜ.க. எம்.பி.க்கள் மூன்றுபேர் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கத்தை கத்தையாக எடுத்து அசைத்துக் காட்டியதும், நாட்டின் ஜனநாயகத் தூண்கள் எல்லாம் பதறிப் போய்விட்டன. நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புக்கும், புனிதத்துக்கும் முதன்முறையாக இழுக்கு நேர்ந்துவிட்டது போலவும், இவ்வளவு நாளும் கட்டிக் காக்கப்பட்டு வந்த அதன் அரசியல் தரம் தாழ்ந்து போய் விட்டதாகவும், சரி செய்ய முடியாத இழுக்கு நேர்ந்து விட்டதாகவும் தேசிய அறிவுஜீவிகள் ஒப்பாரி வைக்கிறார்கள். பதவிக்காகவும் இலஞ்சப் பணத்துக்காகவும் அணிமாறி வாக்களித்து நாடாளுமன்றத்தை தரம் தாழ்த்திவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள்.


நாட்டின் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல, உச்சநீதி மன்றத்துக்கும் கூட மாண்பும் புனிதமும் இவர்களால் செயற்கையாக இட்டுக் கட்டப்பட்டதுதான்; அவற்றுக்குத் தரத் தாழ்வும் இழுக்கும் எப்போதோ நேர்ந்து விட்டது என்பதுதான் வரலாற்று உண்மை. ஆனால், ஒவ்வொருமுறை இப்படி சீரழிவும் இழுக்கும் நிகழும் போதெல்லாம் அதிர்ச்சியுற்றுப் புதிதாக இவையெல்லாம் நிகழ்வதைப் போல நாடகமாடுகிறார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிவில்லாதவர்கள், அதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்; அந்த ஒப்பந்தம் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களே நடக்கவில்லை; அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று எதிர்த்துச் சாடிக் கொண்டும், கூச்சல் போட்டுக் கொண்டுமிருந்தனர் என்று செய்தி ஊடக மேதாவிகள் அம்பலப்படுத்துகிறார்கள்.


ஜூலை 21,22 தேதிகளில் அணு சக்தி ஒப்பந்தம் மீதான வாக்குவாதங்களும், வாக்கெடுப்பும் என்பது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலாக எடுத்துக் கொள்ளப்படவே இல்லை. அப்படி நடக்கவும் இல்லை. நடந்திருக்கவும் முடியாது. நடந்தது மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பும் வாதங்களும்தான். இரண்டு உண்மைகள் இதற்குக் காரணங்களாக உள்ளன. முதலாக அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்ல, அந்நிய நாடுகளுடனான வேறு எந்தவொரு ஒப்பந்தத்தையும் விவாதிக்கவும், வாக்கெடுத்து நாடாளுமன்ற ஒப்புதல் தந்த பிறகுதான் நிறைவேற வேண்டும் என்று கூறுவதற்கும் இந்திய நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது.


அமெரிக்காவுடனான இராணுவ மற்றும் அணுசக்தி ஒப்பந்தமாகட்டும், உலக வங்கி, ஐ.எம். எஃப் மற்றும் உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றுடனான ஒப்பந்தங்களும் இப்படித்தான் இந்திய நாடாளுமன்றத்துக்கு மேலாக, அதன் வாக்கெடுப்புக்கு விவாதத்துக்கு வராமலேயே போடப்பட்டன. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் இது குறித்து விவாதிப்பதற்கு சில உறுப்பினர்கள் முயன்றபோது பழம் பெரும் போலி மார்க்சிஸ்டும் சபாநாயகருமான சோமநாத் சட்டர்ஜி இதைப் பகிரங்கமாகவே கூறி அனுமதி மறுத்துவிட்டார்.


இரண்டாவதாக, ஒருவேளை அணுசக்தி ஒப்பந்தம் மீதான வாக்குவாதமும் வாக்கெடுப்பும் நடந்திருந்தால், அதற்கு போலி கம்யூனிஸ்டுகள் உட்பட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் அடிப்படையில் எதிரானவர்கள் அல்ல என்ற குட்டு வெளிப்பட்டு விடும். கடந்த ஆண்டே ஒப்பந்த அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரியபோது, மன்மோகன் சிங் ஜார்ஜ் புஷ் போட்டுக் கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவின் "ஹைட்' சட்டம் பாதிக்குமோ என்ற தமது ஐயப்பாட்டை நீக்கும்படிதான் இடதுசாரிகள் கோரினர். மற்றப்படி எந்தவொரு ஓட்டுக் கட்சியும் அணுசக்தி ஒப்பந்தத்தை அடிப்படையில் எதிர்ப்பதாகக் கூறவில்லை.


அந்நிய நாடுகளுடனான துரோகிகளின் ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்றம், நாட்டுக்குத் துரோகம் செய்வதற்கு எப்போதும் தயாராக உள்ள ஓட்டுக்கட்சிகள் — இவை பற்றிய உண்மையை மக்கள் அறிந்து விடக்கூடாது என்பதற்காக நடந்ததுதான் மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற நாடாளுமன்றக் கூத்து!