Friday, August 29, 2008

திருவிழாக் கடை போடுகிறார், ஜெயலலிதா!

நான்கு மாதங்கள் மற்றும் சொச்ச நாட்கள் வரை கொடநாடு எஸ்டேட்டில் தங்கி, நவீன வனவாசத்தை முடித்துக் கொண்டு, திரும்ப போயஸ் தோட்டத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா! வந்த கையோடு, கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு இன்ப அதிர்ச்சி விசிட் கொடுத்து, அங்கிருந்தபடியே... "ஓடியா... ஓடியா... கூட்டணிக்குக் கதவு திறந்தே இருக்கிறது" என்று கூவிக்கூவி அழைப்பும் விடுத்திருக்கிறார்.'ஊருக்குப் போன அம்மா, எப்ப வருவார்?.. வரும்போது, காரச்சேவு, பூந்தி, அல்வா எல்லாம் வாங்கிட்டு வருவாரா... இல்லை. வெறுங்கையை ஆட்டிக்கிட்டு வருவாரா?..' என்று வாசல் கதவின் நாதாங்கியை ஆட்டி அசைத்தபடி நிற்கும் சிறுகுழந்தைகளின் ஏக்கத்திலிருந்த அவரது கட்சித் தொண்டர்கள், கூட்டணிக்காக அம்மா விடுத்துள்ள அழைப்பைக் கேட்டதும், புது ரத்தம் பாய்ச்சியவர்களாக ஆகிப்போனார்கள். போன தீபாவளிக்கு வாங்கி, வெடிக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த ஓலை வெடிகளையும், சீனிப் பட்டாசுகளையும் தேடியெடுத்து ஒவ்வொன்றாய்க் கொளுத்தி, நீண்டநேரம் தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டி கொண்டாடினார்கள்.

"தமிழகம் மிக மோசமான நிலையில் உள்ளது. மக்களால் மக்களுக்காக உருவாவது தான் அரசு. ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை கருணாநிதி குடும்பத்தால், கருணாநிதி குடும்பத்துக்காக உருவாக்கப்பட்ட அரசுதான் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சா¢யில்லை. விவசாயிகள், நெசவாளர்கள் கஷ்டப்படுகின்றனர். தமிழக மக்களின் துயரங்களைத் துடைப்பது தான் எனது முதல் குறிக்கோள். சட்டசபைத் தேர்தல் முன்கூட்டியே வருமா? லோக்சபா தேர்தல் வருமா? அல்லது இரண்டும் சேர்ந்து வருமா? என்பது தொ¢யவில்லை.

தேசிய அளவிலும் இதே நிலைதான் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. வரப்போகும் தேர்தலில் கூட்டணி அமைத்து, அதிக இடங்களில் வெற்றிபெற்று மக்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதே எங்கள் முதல் குறிக்கோள்" என்றும், அதற்காக, 'எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேரத் தயார்' என்றும் அவர் விடுத்த அந்த அழைப்புச் செய்தி, அவரது பரந்த மனத்தை தமிழ்க்கூறும் நல்லுலக ஓட்டுக்கட்சிகளுக்கு எடுத்துக் கூறுகிறது.டாஸ்மாக்குக்குப் போட்டியாக, பாலோடு பருப்பும் தெளிதேனும் கலந்து ஓடும் தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவிய அந்தச் செய்தி, கட்சியின் தொண்டர்களையும் தாண்டி, நகர்ப்புறத்து டீக்கடைகளில் வெங்காய வடையைக் கடித்தபடியும், சிகரெட்டை புகைத்தபடியும், கிராமங்களின் நாட்டாமைகள் உட்கார்ந்து தீர்ப்புச் சொல்லும் வட்டமான அல்லது சதுரத் திட்டுகொண்ட ஆலமரத்துக்கடியில் பான் பராக்கைக் குதப்பிக் கொண்டும், கோழி றெக்கையில் எச்சில் நனைத்து, காது குடைந்து கொண்டும் உடனடி பொதுமக்கள் சபைகளைக் கூட்டவும் காரணமாகி விட்டது.

கண்மாயில் ராவோடு ராவாகத் திருட்டுத் தனமாய்ப் பிடித்த மீனை பட்டியக்கல்லில் வைத்து உரசுவதுபோல, 'அம்மா, யாரோட கூட்டணி வெச்சுங்குவாங்க?' என்று குடல் வேறு குந்தாணி வேறாய்ப் பி¡¢த்து அலசி, பட்டிமன்றம் நடத்தும் சாலமன் பாப்பையா, லிஸ்டிலிருந்து தொலைந்து போய்விட்ட திண்டுக்கல் ஐ.லியோனி ரேஞ்சுக்கு, பலபேரை ஒரே அறிக்கையில் நடுவர்களாக உயர்த்தி விட்டார், புரட்சித் தலைவி அம்மா.இதிகாச காலத்து இராமனுக்கு பதினான்கு ஆண்டுகால வனவாசம் தான் விதிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தனக்குத் தானே வனவாசத்தை விதித்துக் கொண்டிருக்கும் அம்மா, கால நேரக் கணக்கெல்லாம் பார்ப்பது இல்லை. எப்போது வனவாசத்தைத் துவங்குவார்... அதை எப்போது முடிப்பார் என்று அவருக்கே தொ¢யாது. சுய வனவாசத்தை முடிக்க அவர் போகுமிடங்கள் ஐதராபாத் திராட்சைத் தோட்டம், சிறுதாவூர் பங்களா, கொடநாடு எஸ்டேட் என்று பல்கி இருந்தாலும், பெருவா¡¢யான அவரது கா¡¢யங்களும் சில கட்சிக்கா¡¢யங்களும் நடப்பதற்குத் தடங்கல்கள் எதுவும் இருப்பதில்லை.

¡¢லையன்ஸ், விப்ரோ, இன்போஸிஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்கள் செயல்பாட்டு வசதிக்கு ஏற்ப, பதிவு அலுவலகம், செயல் அலுவலகம், கிளை அலுவலகங்கள் என்று வைத்திருப்பது போல, அம்மாவின் கட்சியிலும் இதுபோன்ற அலுவலகங்கள் பல உள்ளன.அவரது கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், ஒன்றியச் செயலாளர்களும், முன்னாள் அமைச்சர்களும், நாளொன்றுக்கு ஒரே ஒரு தடவை பஸ் வந்து போகும் அசல் பட்டிக்காட்டைச் சேர்ந்த நொந்த தி.மு.க., கவுன்சிலர் ஒருவர், டீக்கடை மறைவில் நின்று வாங்கிவிடும் நூறு ரூபாய்க் கையூட்டைக் கண்டித்து, 'அம்மாவின் அனுமதி பெற்று போராட்டம் நடத்துவோம்' என்று செய்தித் தாள்களில் பேட்டி கொடுப்பார்கள். அதைச் சிரமேற்கொண்டு, போயஸ் தோட்ட வேதா நிலைய 'பதிவு அலுவலகத்திலிருந்தும்', மேலே சொன்ன ஓய்வு நிலையங்களான 'செயல் அலுவலகங்களிலிருந்தும்' எப்போதாவது, 'ஊட்டி நகராட்சி முன்பு 21 -ம் தேதி கழகத்தின் ரத்தத்தின் ரத்தங்கள் போராட்டம் நடத்துவார்கள்...' என்றோ, 'ராஜபாளையம் நகர்மன்றத் துணைத் தலைவரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்வார்கள்...' என்றோ, ஒரு துண்டறிக்கை மட்டும் வெளியாகும்.அதன் மூலம், தான் அரசியலில் இருப்பதை அவ்வப்போது உறுதிபடுத்திக் கொள்ளும் அம்மா, வனவாசம் முடிந்து திரும்பி வந்த கையுடன், அ.இ.அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திலிருந்து விட்ட அதிகாரப் பூர்வ(!) அறிக்கை, தி.மு.க.,வுக்குள் கிலியையும் அதைத் தவிர மற்றெல்லாக் கட்சிகளுக்கும் புதிய வழியையும் திறந்துவிட்டிருப்பதாக, அம்மாவின் புலனாய்வுத்துறை தொ¢வித்து மகிழ்கிறது.

அவர் முன்பு நடித்த படங்களுக்கு வெள்ளிவிழா, வைர விழா கொண்டாடுவது போல, கொட நாடு எஸ்டேட்டில் நூற்றிஇருபத்து ஐந்து நாட்கள் வரை தங்கியிருந்து, பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு ரூமிலும் உட்கார்ந்து யோசித்து, பற்பலத் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கிக்கொண்டு வந்திருப்பதாகவும் செய்திகளைக் கசிய விட்டிருக்கிறார்கள்.நான்காண்டு காலம் மறைமுகமாகவும் நேர்முகமாகவும் பற்பல இழுபறிகளையும் இன்னல்களையும் சந்தித்து, ஒருவழியாக இடதுசா¡¢களின் இடையூறுகளை, எண்ணெய்த் தேய்த்து தலை முழுகிவிட்டு, கடந்த ஜூலை மாதம் முழுவதும் அனைத்துக் கட்சிகளாலும் அவரவர் பங்குக்கு டெல்லியில் நடந்தப்பட்ட, 'அணுசக்தியின் வெற்றி... மானுடத்தின் தோல்வி!' எனும் ஒப்பந்தத் தொடா¢ல், ஆதரவாகவோ... எதிர்ப்பாகவோ... குறைந்தபட்சம் நடுநிலையாகவோ... தனது கட்சியின் பங்களிப்பு இல்லாது போய்விட்ட வருத்தத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகிப்போன அம்மா, இனி நாடாளுமன்றம் என்றால், அதில் அ.இ.அ.தி.மு.க., இருந்தே ஆக வேண்டும் எனும் கட்டாயத்துக்கான நூதனத் திட்டங்களை வகுத்து வந்திருக்கிறாராம்.அம்மாவின் இந்தத் திட்டங்கள் வெற்றி தரக்கூடியதாக இருக்கும் என்று அவரது அபிமானிகள் 'பெட்' கட்டிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் உலவத் தொடங்கியுள்ளன.

கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வெடுக்கிறார், கால்வலிக்கு தைலம் தடவுகிறார், அதிகாலைக் குளி¡¢ல் கம்பளிப் போர்த்திக் கொண்டு வாக்கிங் போகிறார் என்று ரன்னிங் காமெண்டா¢ ரேஞ்சுக்கு, ஓய்வே இல்லாமல் வந்த செய்திகள் எல்லாமே டூப்பாம். இனி, அடுத்த மூவ் என்ன என்பதைத் தான் இந்த நூற்று இருபத்தைந்து நாட்களும் யோசித்து யோசித்து, ஒரு வடிவத்துக்குக் கொண்டு வந்திருக்கிறாராம். அதன் முதற்கட்டம் தான் கூட்டணிக்கான இந்த அறிவிப்பு.இந்த அறிவிப்பிலேயே. கட்டம் கட்டப்பட்டது போல் பதறிப் போயிருப்பவர் வேறு யாருமில்லை., வழக்கம்போல் உணர்ச்சிப்புயல் வைகோ தான்! தேசிய அளவில் திருநாவுக்கரசரைத் தவிர்த்த பாரதிய ஜனதா கட்சியையும், போனால் போகிறதென்று பிரகாஷ் காரத் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியையும் அவர் கூட்டணிக்காகக் குறிவைத்திருப்பதாகச் செய்திகளைப் பரப்பினாலும், மன்மோகன் சிங்கை வைத்து பொம்மலாட்ட ஆட்சியை இயக்கும் அதென்ன பெயர்... ஆங்... அதான் சோனியா காந்தியின் தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்கு நூல்விடும் வேலையையும் பக்கவாட்டில் பக்காவாக நடத்திக்கொண்டே இருக்கிறாராம்.

அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடமே, அம்மாவின் நண்பரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆஸ்கர் பெர்னாண்டஸோ... மார்க்கரெட் ஆல்வாவோ... நட்புமுறைப் பயணம் மேற்கொள்வார்கள் என்று போயஸ் தோட்டத்து நெடுதுயர்ந்த இரும்புக்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. நாமக்கல்லிலிருந்து ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்ட ரோடு ஐலண்ட் வகை வெள்ளைக் கோழிகள், ஆண்டிப்பட்டி தமிழ்ச்செல்வன் அனுப்பிவைத்த நாட்டுக் கோழிகள், கரூர் மலைக்காட்டுக்குள் பிடிக்கப்பட்ட குழிமுயல்கள் எல்லாமே விருந்துக்கான ஏற்பாட்டில் தயாராகவே வைக்கப்பட்டுள்ளன. அம்மாவும் அவரது ஆருயிர் சகோதா¢யும் பால்கனியின் கைப்பிடிச் சுவற்றைப் பிடித்தபடி, தெருமுனை தொ¢யும்வரை எட்டிப்பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சிக் கொடிகட்டிய ஒன்றிரண்டு கார்கள், போயஸ் தோட்ட சாலையில் திரும்பாமல், கோபாலபுரத்துக்கும் சிஐடி காலனிப்பக்கமும் போனதாகத் தகவல்கள் வந்து சேர்ந்தன.

'இருக்காதுக்கா... அந்தக் கார்ல வி.ஐ.பி. யாரும் இருந்திருக்க மாட்டாங்க. லோக்கல் குல்லாக்கள் யாராச்சும் அந்தப் பக்கமாப் போயிருப்பாங்க. சேதி சொன்னவன்கிட்ட நல்லாக் கேளுங்கக்கா...
அந்த வண்டிக டெல்லி ரெஜிஸ்டரேஷனான்னு?'
என்று சமாதானப்படுத்தும் காட்சிகளும் அரங்கேறி வருவதாக மூக்கு வியர்க்கும் பட்சிகள் தகவல்கள் சொல்கின்றன.''இல்லை... சசி. காங்கிரஸ்ல இன்னும் ரொம்பப் பேருக்கு, நம்ம மேல பாசம் இருக்கு. ஆனா சோனியாவுக்குத் தான் கொஞ்சம் கோபம் இருக்கும் போல.

தான், அவங்களை மானாங்காணியாத் திட்டிபுட்டோம். அந்தம்மா, அவங்க ஹஸ்பெண்டை கொன்னவங்களையே மன்னிச்சவங்களாச்சே...? நாம பேசுனதை இவ்வளவு நாள் ஞாபகம் வெச்சுருக்க மாட்டாங்கன்னே நினைக்கிறேன். யாரோ தான் நம்மளைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா சொல்லி ஏத்தி விட்டுக்கிட்டு இருக்கணும்!

""யக்கா... டெல்லிக்கு ஒரு விசிட் அடிச்சு, அங்கே ஒரு டீ பார்ட்டி குடுத்துட்டோம்ன்னா எல்லாஞ் சா¢யாப் போயிருக்கும்க்கா. அதுக்கு ஏற்பாடு பண்ணவா?""நீ சொல்றது நல்ல யோசனை தான், சசி! ஆனா நாம இப்பப் போய் டீப்பாட்டி குடுத்தோம்ன்னா... நம்ம இமேஜ், டேமேஜ் ஆயிரும். அதைக் கடைசி நேரத்து ஆயுதமா வெச்சுக்குவோம். காங்கிரஸ்காரங்களை விடு. இந்த பிஜேபி... ஜஸ்வந்த் சிங் நமக்கு எவ்வளவு குளோஸ் பிரண்ட்? வொ¢குட் Guy. பாரு, எந்த ஒரு ¡¢யாக்ஷனும் இல்லாம இருக்குறாரு. இந்நேரம் பிளைட் புடிச்சு வந்துருக்க வேணாம். மோடி கூட சைலண்ட் மஸ்தான் ஆகிட்டாரே! இந்த செலக்டிவ் அம்னீஷியா அத்வானி, நாம சொன்னது மாதி¡¢யே நம்மளை மட்டும் செலக்டிவ்வா மறந்துர்றாரோ? என்ன இருந்தாலும் வாஜ்பாயை நாம குழித் தோண்டுனது மாதி¡¢ இவருக்கிட்ட நடக்காது. ஆனாலும் நாம தானே அவங்க சாய்ஸா இருக்க முடியும்!""நேஷனலை விடுங்கக்கா...!

நம்ம ஸ்டேட் ஆளு... தேர்தலுக்குத் தேர்தல் சால்வையை மடிச்சு வெச்சுக்கிட்டே தி¡¢யுற டாக்டர்... இல்லையில்லை, மருத்துவர்... அதான், ச.இராமதாசு. அந்த சைடுல அத்துவிட்டுட்டப் பின்னாடியும் நம்மளைப் பார்க்க இன்னும் அப்பாய்ன்மெண்ட்டே வாங்கலை... பம்முறாரா... இல்லை பகுமானங் காட்டுறாரான்னும் தொ¢யலை. 'எல்லாம் என் சகோதா¢ பார்த்துக்கொள்வார்'ன்னு சொல்லிக்கிட்டே வந்துட்டாருன்னா... பிஜேபிக்கு ஒரு ஒம்பது, வைகோக்கு ஒரு நாலு, மருத்துவருக்கு ஒரு நாலு, அப்புறம் முஸ்லிம் லீக்குக்கு ஒண்ணுன்னு ஒதுக்கிட்டு, கடைசில வந்து ஒட்டிக்கிர்றக் கொக்கிகளுக்கு ஆளுக்கு ரெண்டு, அவங்க 'பிஜேபி இருக்கே'ன்னு வராட்டி, நம்ம தொல். திருமாக்கு ஒரு மூணு. ஆங், செ.கு. தமிழரசனை விட்டுட்டேனே... அவருக்கு ஒரு ஒண்ணைத் தட்டிவிட்டுட்டா... கூட்டணி ஜெ... ஜெ... தான்! இல்லையில்லை... ஜே... ஜே... தான்! மிச்சம் பதினெட்டு இருக்கும். வலுவான இடமாப்பாத்து நாம நின்னு அடிச்சோம்ன்னா...

போன தடவை நாம வாஸ் அவுட் ஆன மாதி¡¢ இந்தத் தடவை, அவங்க காலி. டோட்டலா வாஸ் அவுட்! பேசும்போதே எப்படி நல்லாருக்கு? நம்ம வீடு. திருவிழா மாதி¡¢ களை கட்டிரும்!""சசி.. நீ சொல்றதெல்லாம் சா¢தான்! ஆனா கணக்கு இடிக்குது. 'போய்ட்டு போய்ட்டு வர்றவருக்கும் நாலு... எப்பவும் கூடவே இருக்குற எனக்கும் நாலா?'ன்னு வைகோ பல்ப்பம் தொலைச்ச பச்சப்புள்ளைக் கணக்கா, கண்கலங்க ஆரம்பிச்சுருவாரு. அவர் பாவம் பொல்லாதது. கூட ஒரு சீட் போட்டுக் குடுக்கணும்.

ஆனாலும் நீ முக்கியமான இன்னொண்ணை மறந்துட்டே பாரு!""என்னக்கா அது?""விஜயகாந்த்...!"" அட ஆமாக்கா, அந்தப் புள்ளிவிவரப் புலியை எப்டி மறந்தேன்?""நாம, இது மாதி¡¢ மெத்தனமா இருந்த நேரத்துலயும், அசந்துட்ட நேரத்துலயும் ஊடாலப் பூந்து வூடு கட்டுன ஆளு, அவரு. நாம இப்போ மாஞ்சா வெச்ச நூலை விட்டோம்ன்னா, ஆளு நம்மப் பக்கம் சாஞ்சாலும் சாஞ்சுறலாம். அப்டி சாஞ்சுட்டா, மருத்துவரையும் விஜயகாந்த்தையும் வெச்சே நாமக் கூட்டாஞ்சோறு ஆக்கிக் கும்மியடிச்சுறலாம்!"

"மருத்துவரும் விஜயகாந்தும் எப்டிக்கா ஒரே வண்டியில் ஏறமுடியும்?""ஏன் முடியாது? கொஞ்ச நாளா அவங்க ரெண்டுபேத்தோட அறிக்கைகளையும் எடுத்துபாரு. ஒரே மாதி¡¢ இருக்கும். மருத்துவரு தி.மு.க. மேல ஏகக் காட்டமா இருக்காரா...? அது மாதி¡¢த்தான் விஜயகாந்தும் இருக்காரு! சமச்சீர் கல்வி, மருத்துவக் கல்லூ¡¢ அரசு இட ஒதுக்கீடுன்னு ரெண்டுபேருமே ஒரே மாதி¡¢தான் பேசுறாங்க. நாம சா¢யா நூல் விட்டா... கா¡¢யம் சித்தியடையும்!"

"யக்கா, ஏதோ வண்டி வர்ற சத்தங் கேக்குதுக்கா... டெல்லி ஆளுகளா இருக்கும். காங்கிரஸா... பிஜேபியான்னு பார்க்கலாம்!""சீக்கிரம் பாரு... எனக்கும் யாருன்னு தொ¢ஞ்சுக்க ஆவலா இருக்கு!""

ஹ¥ம். நம்ம வீட்டுக்கு இல்லக்கா. ரஜினி, குசேலன் படத்துல வெட்டுன பிட்டுகளை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போறாரு போல!""பாவம் மனுஷன். நம்ம பாடு பரவாயில்லை! ரஜனி, ரொம்பத் தான் ண்டாடுறாருல்ல?""ஆமாக்கா..!""சா¢, காலைலருந்து இங்கே நின்னு நின்னே கால் வலிக்குது. வெயிலு மேக்கால சாஞ்சுருச்சு. வா சாப்புடப் போகலாம்!"கூட்டணிக்கான அழைப்பை விடுத்ததும், வா¢சை கட்டிக்கொண்டு நிற்க இடமில்லாமல், கட்சிகள் அலைமோதியிருக்க வேண்டிய அ.இ.அ.தி.மு.க.,வில்... இப்படி அவர்கள் இரண்டு பேர் மட்டுமே பேசிக்கொள்ளும் நிலைமை ஏன்வந்தது?சுலபமான பதில், இதோ!திருவிழாவுக்குத் திருவிழா மட்டும் கட்சிக்கடையை வி¡¢த்து, அரசியல் வியாபாரம் செய்து விட்டு, தேர்தல் திருவிழா முடிந்ததும் கடையைக்காலி செய்து ஓட்டுப்போட்ட மக்களையும் கவனிக்காமல், கூட வந்த கூட்டணிக் கட்சிகளையும் சந்திக்காமல் ஓய்வெடுக்கப் போய்விடும் நிலையால் தான் என்பது அவர்களுக்கும் தொ¢யாமலில்லை.

இருந்தும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.இ.அ.தி.மு.கவும்., அதன் சின்னமான இரட்டை இலையும் பெருவா¡¢யான வாக்குகளை வா¡¢த்தரும் அட்சயப் பாத்திரமாக இருப்பதும், அம்மாவின் அசட்டைக்குக் காரணமாக எடுத்துக் கொள்ளலாம்!அதே வேளையில் 2006 -ம் ஆண்டுக்குப் பின் அரசியலில் 'வூடுகட்டி' அடிக்கும் விஜயகாந்தின் வாக்குவங்கி, அ.இ.அ.தி.மு.க.,வின் ஓட்டுக்கள் தான் என்பது அம்மாவுக்குப் பு¡¢யாமல் இருக்குமா? அவர் பு¡¢ந்து கொள்ளும் அளவிலான புத்திசாலிதான்!புத்திசாலித்தனமாகவே பல்வேறு நிலைகளை அவர் கடந்தும் வந்திருக்கிறார்.

நாடாளுமன்ற மேலவையில் அவர் பேசிய கன்னிப்பேச்சின் ஆங்கிலப் புலமைக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கவே செய்கிறார்கள். சிதறும் வாக்கு வங்கியை மீட்டெடுக்க உடைந்து போன அ.இ.அ.தி.மு.க.,வின் இரண்டு கூறுகளையும் ஒட்டவைத்த பெவிகால் சாமர்த்தியம் அவரால் மட்டுமே செய்ய முடிந்தது. திமுகவிலிருந்து உடைந்து அ.இ.அ.தி.மு.க., உருவானபோது, அதை ஒட்டவைக்க தேசிய அரசியல்வாதி பட்நாயக் எடுத்த முயற்சிகளே தோல்வியில் தான் முடிந்தன. ஆனால் ஜெயலலிதா சாமர்த்தியமாகக் காய் நகர்த்தி சாதித்தார். காவி¡¢ நீர் பிரச்சனையின்போது, முதல்வராக இருக்கும்போதே கடற்கரையில் படுத்துக்கொண்டு உண்ணாவிரதம் இருந்து டெல்லியைத் திரும்பிப் பார்க்க வைத்தார் என்பது பாஸிடிவ் பக்கங்களென்றால், வாஜ்பாய் அரசு பதிமூன்று நாளில் கவிழக் காரணமாக இருந்தது, ராமஜென்ம பூமியில் கோவில்கட்ட செங்கல் அனுப்பிப் பூ¡¢த்தது, வளர்ப்பு மகனுக்கு ஊர் மெச்சும் திருமணம் நடத்தி, நாட்டு மக்களின் வயிற்றொ¢ச்சலைக் கொட்டிக் கொண்டது போல, சில நெகடிவ் பக்கங்களும் இருக்கவே செய்கின்றன.என்றபோதும், சிந்தனையும் கூர்நோக்கும் உள்ள அவரை, அ.இ.அ.தி.மு.க.,வின் உண்மை விசுவாசிகள் கைவிடத் தயாராக இல்லை. ஓட்டுப் போடவும் ஓட்டுகளை சேகா¢த்துக் கொடுக்கவும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால் அம்மா என்று தான் அழைக்கப்படுவதால், அவர் தான் கட்சிக்காரர்களைச் சுமந்து கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாரோ என்னவோ?மாற்று முகாம்கள் இரவும் பகலுமாக கட்சித் தொண்டர்களைச் சந்தித்தும், மாநிலம் முழுவதும் அமைச்சர்களையும் முக்கிய பிரமுகர்களையும் வைத்து கூட்டங்கள் நடத்தியும், இரண்டரை ஆண்டுகளில் மூன்று பொ¢ய மாநாடுகள் கூட்டிக் கட்சியை பலப்படுத்தியும், தொண்டர்களை சுறுசுறுப்பாக வைத்திருந்தாலும், வாக்கு வங்கியைப் பொறுத்தவரை, கூட்டணிகள் இல்லாத பட்சத்தில் அ.இ.அ.தி.மு.க., தான் தனித்து இன்றும் உச்சத்தில் இருந்து வரும் கட்சியாகும். இந்த மாய வாக்கு வங்கியைத் தகர்க்க, எத்தனைதான் பல்டியடித்தாலும், திட்டங்களை அறிவித்தாலும், இலவசங்களைக் கொடுத்தாலும் அ.இ.அ.தி.மு.க., ஒன்று முதல் ஒன்னரை சதவீத வாக்குகளை திமுகவைக் காட்டிலும் அதிகமாகவே கொண்டிருக்கிறது.

அதை, விஜயகாந்த் சற்று சிதற வைத்திருப்பதை மறைக்க முடியாது!தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, தேர்தல் கூட்டணிதான் வெற்றியை நிர்ணயிப்பதால், பலமானக் கூட்டணியின் ஓட்டுக்கணக்கு ஜெயித்து, அ.இ.அ.தி.மு.க., பின்னுக்குத் தள்ளப்படுகிறது. வலுவான கூட்டணி அமையாமல் போவதன் காரணம், அனுசரணையின்மையே!கூட்டணிக் கட்சிகளிடம் சிறிது அனுசரணையாக, 'அம்மா'வின் குணங்கொண்டு, அவர் நடந்து கொண்டாலே போதும். ஜூலை மாதம் முழுவதும் டெல்லியில் நடந்த அணுசக்தி ஒப்பந்தக் களேபரத்தில், அ.இ.அ.தி.மு.க.,வுக்கு இடமில்லாது போனது, அம்மாவின் மெத்தனத்தாலும்... அனுசரணையின்மையாலுமே என்று சொன்னாலும், அவர் இனி கோபப்பட மாட்டார் என்று கருத இடமுண்டு. கொடநாடு எஸ்டேட் அவருக்கு போதிமரமாக... புத்த கயாவாக... இருந்திருந்தால்...!வழக்கமாய் தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே கட்சியின் வேட்பாளர்களை முதலில் அறிவித்துவிடும் மனோதிடம் அவா¢டம் உண்டு.

தேர்தலைச் சந்திக்கத் தயார் நிலையிலேயே இருப்பார். முதல் ஆளாய் பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிடும் வேகமும் அவா¢டம் உண்டு. கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பேட்டியின் போது, 'தேர்தலுக்கு அ.இ.அ.தி.மு.க., தயாராக இருக்கிறதா?' எனும் கேள்விக்கு, அவர் தனது பதிலை இப்படிச் சொல்லி இருக்கிறார்.. "நாங்கள் தயாராக வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் தி.மு.க., அரசைத்தூக்கி எறிந்துவிட்டு எங்களுக்கு ஓட்டுப்போட மக்களே தயாராக இருக்கின்றனர்" என்று.நம்பிக்கை தான், வாழ்க்கை! ஆனால் அது, ஜெயலலிதாவிடம் அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது!சமீபகாலமாக அரசியலில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாது போன நிலை, இந்நேரம் அவரை புடம் போட்டிருக்கும் என்று நம்புவோமாக!

-நன்றி எஸ். அர்ஷியா (arshiyaas@rediffmail.com)

1 comment:

Anonymous said...

DMDK is Very good organization for all communities.

If you are vanniyer - Please dont support PMK only for the shake of Caste.

Dont support thirumavalavan.

DMK is the WORST!
ADMK is the WASTE!

DMDK(Captain) is the BEST!